கலைப்புவாதம் : ஒன்றுப்பட்ட கட்சியை கட்டுவதற்கும் பாசிச எதிர்ப்பிற்கும் தடையாக உள்ளது

இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கும் கம்யூனிச குழுக்களுக்குள் ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளும் வர்க்க கருத்துக்களான பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம் போன்ற கருத்துக்களின் ஆதிக்கம் உள்ளது.

கலைப்புவாதம் : ஒன்றுப்பட்ட கட்சியை கட்டுவதற்கும் பாசிச எதிர்ப்பிற்கும் தடையாக உள்ளது

இந்த பாசிச சூழலில் நீங்கள் RSS- BJP யை அம்பலப்படுத்தாமல் அம்பேத்கர் மற்றும் பெரியாரை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று சில தோழர்கள் கேட்கலாம்.

அது ஒரு வகையில் சரியானதாக கூட தோன்றலாம் ஆனால் அது உண்மை அல்ல ஏனென்றால் இன்று மார்க்சியர்களுக்கு முன் இரண்டு பெரிய சவால்கள் உள்ளது.

ஒன்று பாசிசத்திற்கு எதிரான செயல்பாடு மற்றொன்று ஒரு ஒன்றுப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது (இந்திய அளவில் இல்லாவிட்டாலும் தமிழக அளவிலாவது கட்ட வேண்டும்) ஒன்றை மட்டும் தனித்துவமாக செய்வது இந்த காலகட்டத்தில் சாத்தியமற்றது.

இதில் பாசிசத்திற்கு எதிரான ஐக்கியத்தை பற்றி பிறகு ஒரு தனிப்பதிவில் எழுதுகிறேன்.

முதலில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதை பற்றி எழுதுகிறேன்.

இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கும் கம்யூனிச குழுக்களுக்குள் ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளும் வர்க்க கருத்துக்களான பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம் போன்ற கருத்துக்களின் ஆதிக்கம் உள்ளது.

ஒரு சில அமைப்புகளை தவிர எடுத்துக்காட்டிற்கு மஜஇக போன்ற அமைப்புகள் இந்த ஏகாதிபத்திய கருத்துக்களை சரியான முறையில் அம்பலப்படுத்தி உள்ளன. ஆனால் அவர்கள் மீதும் எனக்கு விமர்சனம் உள்ளது.

நாம் கட்சி மற்றும் கோட்பாடுகள் பற்றி எப்போதும் கறாரான தன்மையை கையாள வேண்டும். கட்சிக்குள் நாம் ஆளும் வர்க்க சிந்தனைகளை ஊடுருவ விட முடியாது.

ஆனால் இன்றைய சூழலில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு எதிராக இருப்பது ஆளும் வர்க்க கருத்துக்களான பெரியாரியம் மற்றும் அம்பேத்கரியம் தான்.

நிலவுடைமை உற்பத்தி முறையில் வேலைப்பிரிவினையே சாதி அமைப்பு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பழைய நிலவுடைமை சமூகத்தில் புதிய வர்க்கங்களான முதலாளி மற்றும்‌ பாட்டாளி வர்க்கத்தை தோற்றுவிக்கிறது அதன் தொடர்ச்சியான வளர்ச்சி சாதி சார்ந்த நிலவுடைமையை வீழ்த்தி அந்த இடத்தில் முதலாளித்துவ சமூகத்தை நிலைநாட்டும் என்பதுதான் வரலாற்று பொருள் முதல்வாதம். இது புரட்சியின் மூலமோ அல்லது சீர்திருத்தத்தின் மூலமோ நடைபெறும்.

ஆனால் இன்று பல மார்க்சிய குழுக்களின் ஆவணங்கள் மார்க்சியத்திற்கு எதிராகத்தான் உள்ளது. எடுத்துக்காட்டிற்கு SoC  யின் ஆவணங்களில் அவர்கள் இந்தியாவின் பழைய சமூக உறவுகளை ஐரோப்பிய காலனியாதிக்கமும் அதன் பின் வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் தங்களது சுரண்டல் நலனை பாதுகாக்கும் அமைப்புகளாக மாற்றிக்கொண்டார்கள், இதனால் இந்திய சமூகத்தின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு கச்சாப்பொருட்களை கொடுக்கும் தொங்கு சதையாக இந்தியா மாறியது என்று கூறி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அதே வேளையில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாக இருந்து அதனை பாதுகாத்த பெரியார் அம்பேத்கரை தங்களது கதாநாயகர்களாக வைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய நகைப்புக்குரியது!

இதில் அவர்கள் இந்திய சமூகத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது என்று கூறியும் வருகிறார்கள் பார்ப்பனியம் 2000 வருடம் ஆட்சி செய்தது காவி இருள் என்றெல்லாம் கூறுவார்கள் அது தனி கதை.

ஏன் குறிப்பாக SoC என்றால் அவர்கள்தான் இந்திய புரட்சியின் Authority என்று அழைத்துக் கொண்டார்கள்.

அவர்களது அமைப்பு இன்று சிதறிவிட்டது ஆனாலும் அதை ஏதோ தனி நபர்களின் தவறு என்றுதான் இன்னும் விமர்சனம் வைக்கிறார்களே தவிர அதை ஒரு‌ தத்துவ தவறாக சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை.

பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஏற்று பார்ப்பனியம் என்று சாதிய சமூகத்தை வரையறுத்தார்கள். பார்ப்பனிய எதிர்ப்பு பேசிய இயக்கங்களின் வர்க்க தன்மையை ஆய்வு செய்யாமல் அவர்களுடன் கைகோர்த்து அழிந்து போனார்கள்.

பாசிசம் பற்றிய வரையறுப்பு கூட தவறாய் போனது.

ஒரு சிறந்த அமைப்பு பலத்தை கொண்ட அமைப்பு தனது வர்க்க அமைப்புகளை கலைத்து மக்கள் அதிகாரம் என்று ஒரு செயல்பாடற்ற அமைப்பை ஆரம்பித்து அழிந்து போனார்கள்.

இன்றைய சூழலில் கலைப்பு வாத கருத்துக்களில் இருந்து மார்க்சியத்தை மீட்க வேண்டும். அனைவரும் கூறுவது போல் மார்க்சியத்தை எந்த கருத்துக்களுடனும் இணைக்கக் தேவையில்லை. அது தனித்து நின்றே அனைத்து வகை சுரண்டலையும் ஒழிக்கக்கூடியது.

- SP Prasanth Kumar

(முக நூலிலிருந்து)

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100068485450832/posts/pfbid02B29WKhpwBu6wMPRQNyfUhS7i3i4h8678Gf5q6Sqf8Lfi9C7WdnA6d2GjpSLzuRW1l/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு