காலநிலை மாற்றமும் பில் கேட்சும்

முகிந்தன் துரைசிங்கம்

காலநிலை மாற்றமும் பில் கேட்சும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் என்ற போர்வையில் மனிதகுலத்தின் மிக அடிப்படையான உணவு உரிமையைப் பறித்து, ஒட்டுமொத்த உலகையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளார் பில் கேட்ஸ் (Bill Gates).

பசுக்கள் வெளியிடும் மீத்தேன் வாயு தான் உலகை அழிக்கிறது என்று கூக்குரலிடும் பில் கேட்ஸ், மனிதகுலத்தின் பாரம்பரிய உணவு முறையை அழித்து "மாடு இல்லாத ஆய்வக இறைச்சியை" (make beef without the cow) திணிக்கப் பார்க்கிறார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற முகமூடிக்கு பின்னால் இருக்கும் பில் கேட்ஸின் அசல் முகம், அவர் செய்திருக்கும் இந்த பில்லியன் டாலர் முதலீடுகளில் அம்பலமாகிறது:

பரிசோதனைகூடங்களில் செயற்கையாக வளர்க்கப்படும் இறைச்சி நிறுவனங்கள் (Lab-grown meat)

இயற்கைக்கு மாறான செயற்கை புரதங்கள் (Synthetic protein)

தாவர அடிப்படையிலான (plant based) போலி இறைச்சி நிறுவனங்கள்

பாரம்பரிய கால்நடைகளை முடக்கும் மீத்தேன் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள்,

போன்றவற்றில் பில்கேட்ஸ் முதலீடுகளை செய்துள்ளார்.

அதிகார வர்க்கத்தின் இந்த சதிக்குத் துணையாக, உலக நாடுகளின் அரசாங்கங்களும் சில அமைப்புகளும் மக்களை குறிவைத்து கட்டாய அறிவுறுத்தல்களை ஏவுகின்றன:

மக்கள் இறைச்சி உண்பதை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற அறிவிப்புகள். 

கால்நடை வளர்ப்பை ஒழிக்க வேண்டும் என்ற அறிவிப்புகள்.

விவசாயிகளின் மீது கார்பன் வரி மற்றும் கண்காணிப்பை திணிக்க வேண்டும் என்ற சட்டங்கள் இதற்கு ஆதாரம். 

உலகை மாசுபடுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் பில்லியனர்கள், தங்களை யோக்கியர்களாகக் காட்டிக்கொண்டு ஏன் விவசாயிகளையும், ஏழை மக்களையும் குற்றவாளிகளாக சித்திரிக்கிறார்கள்?

மக்களின் உணவையும், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் முடக்க நினைக்கும் இந்த "மனிதகுல எதிரிகள்" பின்வரும் உண்மைகளை திட்டமிட்டு மறைக்கிறார்கள்:

பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர தனியார் விமானங்கள் (Private jets) உமிழும் அசுர அளவிலான கார்பன் மாசு பற்றி யாரும் பேசுவதில்லை.

அவர்களின் சொகுசு வாழ்க்கை முறைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

உலகை அழிக்கும் ஆயுதங்களை தயாரிக்கும் ராணுவ உமிழ்வுகள் (Military emissions) பற்றி எந்த சுற்றுச்சூழல் அமைப்பும் வாய் திறப்பதில்லை.

மெகா கார்ப்பரேட் தொழிற்சாலைகளின் கழிவுகள் தடையின்றி இயற்கையை அழிக்க அனுமதிக்கப்படுகின்றன. அதுபற்றி எவரும் பேசமாட்டார்கள்.

சுற்றுச்சூழலைக் காப்பாற்றப் போகிறேன் என்று கூறும் பில் கேட்ஸ் தான், பாரம்பரிய விவசாயத்திற்கு மாற்றாக வரவிருக்கும் அனைத்து செயற்கை உணவுத் தொழில்களையும் விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார். 

இதில் இருக்கும் ஆபத்து என்னவென்றால், இது காலநிலை மாற்றம் பற்றியது அல்ல; இது மனிதகுலத்தை அடிமைப்படுத்தும் பேராசை!

இந்த செயற்கை உணவு முறை உலகிற்குள் நுழைந்தால், எதிர்காலத்தில் மனிதன் உயிர்வாழத் தேவையான உணவு காப்புரிமை பெற்ற, சந்தா செலுத்த வேண்டிய (Subscription-based) ஒரு கார்ப்பரேட் பொருளாக மாறிவிடும். 

தண்ணீருக்கும், உணவுக்கும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் வாசலில் கையேந்தும் நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படும். 

உணவைக் கட்டுப்படுத்துபவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தங்களின் விரலசைவில் ஆட்ட முடியும்.

தங்களுக்கு வரவிருக்கும் இந்த பேராபத்தை உணர்ந்துதான், ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் இறங்கி அரசாங்கங்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். 

திட்டமிட்டு பாரம்பரிய விவசாயத்தை நசுக்கி, தங்களை பில் கேட்ஸ் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கப் பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

Global warming ற்கு காரணமான பெரும் முதலாளிகள் தங்களின் சொகுசு வாழ்க்கையை அணுவளவும் மாற்றாதபோது, சாமானிய மக்கள் மட்டும் ஏன் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றக் கோரி வற்புறுத்தப்படுகிறார்கள்?

ஒருவேளை செயற்கை இறைச்சி பாரம்பரிய விவசாயத்தை முழுமையாக அழித்துவிட்டால், உலகளாவிய உணவு விநியோகத்தை இறுதியில் கட்டுப்படுத்தப் போவது யார்?

பாரம்பரிய விவசாயம் அழிக்கப்பட்டு, ஆய்வக உணவுகள் சந்தைக்கு வந்தால், நாளை நம் பிள்ளைகள் உண்ணும் உணவைத் தீர்மானிக்கப் போவது யார்? 

பில் கேட்ஸ் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளே.

- முகிந்தன் துரைசிங்கம்

https://www.facebook.com/story.php?story_fbid=2849213925420956&id=100009971290894&post_id=100009971290894_2849213925420956&rdid=1gigkkdNbFhZa5LL

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு