காக்ரோச் ஜனதா பார்ட்டியும் தவெகவும்
இரா. முருகவேள் - கீழடி பதிப்பகம் துரை.சண்முகம் - ஸ்டாலின் ராஜாங்கம் - தா. சந்திரன்
1
காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன
Gen z இளைஞர்களின்
கோபம், விரக்தி ஆகியவற்றின் வெளிப்பாடாக கரப்பான் பூச்சி கட்சி இருக்கிறது. அது இன்னமும் அரசியல் கட்சி வடிவம் எடுக்கவில்லை என்றாலும் இதுவரை புனிதமாக கருதப்பட்டு வந்த அரசு நிறுவனங்கள் மீது உக்கிரமான தாக்குதல் தொடுக்கிறது.
உச்ச நீதிமன்றம் கடவுளுக்கு சமானமாக இந்திய ஆளும் வர்க்கத்தால் முன்வைக்கப் படுகிறது. விமர்சனங்கள் இருந்தாலும் தேர்தல் கமிஷன் மிகவும் முக்கியமான அதிகாரம் மிக்க அமைப்பாக இருக்கிறது. இவற்றின் மீது Gen z இளைஞர்கள் கடும் தாக்குதல் தொடுக்கின்றனர். கல் கோத்தியா பல்கலைக் கழகம் சீன இயந்திர நாயை தங்களுடையது என்று ஏமாற்றிய போது அரசின் மீது மிகப் பெரிய விமர்சனம் வெடித்தது. இப்போது மக்களின் கோபம் CJP யினால் அடுத்த இடத்துக்கு போகிறது.
அதில் அரசியல் கட்சிகள், போட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடுருவலாம். அல்லது CJP கலைந்தும் போகலாம். ஆனால் இப்போது அது பிஜேபி அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான மக்கள் கோபத்தின் வடிவம்.
ஆனால் த வெ க மாநில கார்ப்பரேட் அமைப்புகளால் ஐந்து ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கப் பட்ட அமைப்பு. அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே அதன் நோக்கம். அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குபது, தகர்ப்பது ஆகியவை அதன் ஜீனிலேயே இல்லை.
த வெ க வை பிஜேபியின் குழந்தை என்பது அபத்தம். அது இளைஞர்களின் எழுச்சி என்பது இன்னும் அபத்தம். மாநிலத்தின் குறிப்பிட்ட ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை த வெ க. புதிதாக தோன்றியுள்ள ஒரு மாநில கட்சி.
பிஜேபி ஆட்சியில் மக்களின் கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்து வெளிவருகிறது. CJP அதில் ஒன்று. பிஜேபி க்கு எதிராக எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் திட்டவட்டமான எதிர்வினை ஆற்றத் தவறும் போது மக்கள் கோபம் இப்படித்தான் வெளிப்படும்.
இரா. முருகவேள்
https://www.facebook.com/1714910257/posts/10216431658100072/?rdid=9Ktn7XipazLusgdq
========================================================
த வெ க நல்ல ஆட்சி செய்யுமா இல்லையா
இரா. முருகவேள்
========================================================
3
கார்ப்பரேட் பின்னணியில் கட்டமைக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டு இருக்கும் கட்சிதான் த. வெ.க
நான் ஏற்கனவே எழுதி இருந்த மாதிரி தேசிய அளவில் திட்டமிடப்பட்டு கார்ப்பரேட் பின்னணியில் கட்டமைக்கப்பட்டு
தோற்றுவிக்கப்பட்டு இருக்கும் கட்சிதான் த. வெ.க. இதன் தொடக்கத்திற்கு காங்கிரஸ் வகைப்பட்ட மதச்சார்பின்மை,
வளர்ச்சி, நல்லதே நடக்கும்! போன்ற பொதுவான முழக்கத்தின் கீழ் மக்களை நெருங்குகிறது.
திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் அதுவும் கார்ப்பரேட் மாடல்தான்.
மக்கள் ஏற்போடு புதிய சுழற்சி முறையில் பலன்களை அடைய தற்போது ஆளும் வர்க்கத்தின் பிரிவுக்கு த.வெ.க. தேவைப்பட்டிருக்கிறது.
இது திமுகவால் வெல்லப்பட வேண்டும் என்றால், திமுக மக்கள் பக்கம் நின்று கார்ப்பரேட்டுகளை எதிர்க்க வேண்டும். புதிய அரசின் திட்டங்களுக்கு பின்னே உள்ள கார்ப்பரேட் நலன்களை குறி வைத்து பேச வேண்டும். ஏற்கனவே கார்ப்பரேட் வளர்ச்சிக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கும்
திமுக நிச்சயம் இதை செய்யாது.
ஒரு அடையாள அறிக்கையோடு நின்று விடும்.
நேற்று மத்திய அரசுடன் புதுப்பித்தல் ஒப்பந்தம் போட்ட ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் கூட
நீண்ட கால நோக்கில் கார்ப்பரேட் மயத்திற்கான அடித்தள திட்டம் தான். இதை திமுக விரிவாக விமர்சிக்க தயார் இல்லை. காரணம் மோடி அரசு உடன் இதே ஒப்பந்தத்தை திமுக அரசும் போட்டுக் கொண்டது.
அனைத்து மக்களுக்குமான குடிநீர் உரிமையை உறுதி செய்யும் அரசு மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பகுதிகளுக்கு திட்டமிட வேண்டிய மாநில பொறுப்பை நிதி பங்கீடு எனும் பெயரில் ஒன்றிய அரசோடு இணைத்து தேசிய திட்டமாக செயலாக்க முனைவதன் பின்னணியில் அடிப்படைக் கட்டுமானங்களுக்குப் பிறகு தண்ணீருக்குள் மெல்ல மெல்ல தனியார் மயமாக்கும் பொது வழங்கல் திட்டமும் பதுங்கி இருக்கிறது.
பிற்காலத்தில் கூட அடையாள லாவணி கச்சேரியைத் தவிர
தண்ணீரில் தனியார் மயத்தையோ பொதுத்துறை தனியார்மயம் ஆவதை எதிர்த்தோ திமுக இயக்கம் எடுக்க தெம்போ திராணியோ கிடையாது! காரணம் கார்ப்பரேட் நலன்களின் ஒரு பகுதியாக அந்தக் கட்சியும் இருக்கிறது. கார்ப்பரேட் மய கட்சியாகவே வளர்ந்தும் நிற்கிறது.
த .வெ.க என்பது இதில் புதிய வரவு என்பதை விட புதிய வகைப்பட்ட வரவும் கூட.
அதாவது கொள்கை அரசியல் எனும் பெயரிலான நேரடி கொள்கை கள காட்சிகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய அவசியத்தில் அது இல்லை.
நவீன தொழில்நுட்ப தொடர்புலக விதத்தில் தனி மனிதர்களை தொடர்புகொண்டு இதனால் ஆன பயன்களை விளக்கும் கார்ப்பரேட் சந்தை மாடலாக வளைக்கிறது.
மக்கள் பங்கேற்பு என்பதை மட்டுப்படுத்தும் அரசியல் கலாச்சார செயல்பாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் தொடங்கிவிட்டது.
ஊடகங்கள் இணையங்கள் தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் கட்சிகள் கட்டமைத்து மக்களிடம் சேர்க்கப்படுகிறது. நவீன உழைப்பு சுரண்டல் அதிகநேர வேலை வாய்ப்பு சூழலில் வாழ்க்கைப் போராட்டத்துடன் இந்த வகையில் மட்டுமே அரசியல் உணர்வை தனித்துக் கொள்ளும் புதிய நிலைமைகளை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு தோற்றுவித்துள்ளது.
இந்த சூழலுக்கு பொருத்தமாக தலைப்பட்டு இருக்கும் கட்சிதான்
த.வெ.க.
இந்த அடிப்படையை மக்களுக்கு விளக்குவதற்கு பதில் ஏதோ இளைஞர்கள் தற்குறித்தனமாக பின்னால் போகிறார்கள் என்பதாக மட்டும் உருவகப்படுத்தி, செத்தாலும் அரசியல் பேச மாட்டேன்! என திமுக நானும் ஒரு ஜென் z என்று பதிலுக்கு உருட்டுகிறது.
இந்த இடத்தில் உழைக்கும் வர்க்க அரசியல் என்பது புதிய சூழ்நிலையிலிருந்து, புறச் சூழலை அறிந்து முதலாளித்துவ நெருக்கடிக்குள் இருக்கும் இந்த அமைப்பு முறையை வைத்துக்கொண்டு அனைவருக்குமான தீர்வு கிடைக்காது! கம்யூனிச அரசியலை முன்னெடுப்பதுதான் சரியானதே ஒழிய, த.வெ.க மீதான விமர்சனங்களில் இருந்து மீண்டும் திமுகவே தேவல! என்று நவீன பாட்டாளி வர்க்க ஆற்றல்களை மீண்டும் திராவிட உருட்டுக்களுக்குள் தள்ளி விடுவது ஆகக் கேடான அரசியல் வேலை.
நடப்பு அரசியல் மீதான விமர்சனம் தேவையான மாற்றம் என்பது இடதுசாரி அரசியலை நோக்கியதாகவே இருக்க வேண்டும். திமுக மீதான சாய்மானத்தில் இருந்து வரும் கருத்துக்கள் அனைத்தும் சமரச சந்தர்ப்பவாத வர்க்கங்களின் விளை பொருட்கள்தான்.
இன்னும் சொல்லப்போனால்
இதை சொல்லும் போதெல்லாம் விஜய் கட்சியையும் ரெண்டு திட்டு திட்டி விட்டுதான் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்! எனும் சடங்குத்தனம்தான் ஜனநாயகம் எனும் புரிதல் குறைபாடுகளும் இந்த சமரச வாதத்திற்கு காரியவாத அடிப்படையை அமைத்துக் கொடுக்கிறது.
- கீழடி பதிப்பகம் துரை.சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1026743033365826/?rdid=pf9xDXhzZkOD3HTx
=========================================================
4
சமூக அவலங்களுக்கு யார் பொறுப்பு?
சமூக அக்கறை மற்றும் எதிர்க்கட்சி என்ற அளவில் தாங்கள் சொல்லும் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியது.
ஆனால் இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு மக்கள் பக்கம் நின்று கொண்டு பேசுவதற்குள் வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான அரசியல் ஒன்று உள்ளது.
சட்டம் ஒழுங்காக கையாளப்பட வேண்டியது என்பது ஒரு பகுதி மட்டும்தான்.


இது சமூக சீர்கேடாக நிலை பெற்று புதிய புதிய அவலங்களை தோற்றுவித்துக் கொண்டே இருப்பது எதனால்? இதற்கு யார் பொறுப்பு?
தமிழகத்தில் நீண்ட காலம் அரசியல் செய்யவும், பலகாலம் ஆட்சி செய்ய வாய்ப்பும் பெற்று இருந்த திராவிட கட்சி இந்த சமூகத்தை வளர்த்தெடுப்பதில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏன் உங்களால் உருவாக்க முடியவில்லை?
நீண்ட காலம் ஒரு சமூகத்தையே குடி கூத்து கும்மாளம் கஞ்சா போதை என சீரழித்துவிட்டு
நேத்து வந்தவன் அனைத்தையும் ஒரே நாளில் திருத்தி விட வேண்டும் என்பது தேர்தல் அரசியலுக்கு மட்டும்தான் பயன்படும்.
இந்த சமுதாயம் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு இவ்வளவு கெடுத்து வைத்திருக்கிறீர்களே!
இதைப் பற்றிய குற்ற உணர்வு உங்களுக்கு உண்டா?
புதிதாக வந்திருக்கும் அரசு
சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதிக் கொண்டு அணுகினால் அதுவும் தோல்வியையே தழுவும்.
குறிப்பாக பாலியல் வன்முறை சமூக சீர்கேடுகளை தோற்றுவிக்கும் அடிப்படைகளுக்கு எதிராக மாற்றங்களை உருவாக்காத போது திமுக மாதிரி
தவெக வையும் மக்கள் தள்ளி வைப்பார்கள்.
எப்போதும் ஒரு கொள்கை சித்தாந்த அடிப்படையில்
சமுதாயத்தை மாற்றுவதற்கு போராடும் கம்யூனிஸ்டுகளின் பணிதான் இந்த நிலையிலும் மக்களின் போராட்ட அரங்கில்
அச்சப்படாமல் நிற்கிறது.
மக்களை அச்சப்படுத்துபவர்கள் அச்சப்பட வேண்டிய காலம் வரும்!
அப்போது நீங்கள்
"அய்யோ! கரப்பான் பூச்சிகள்!" என்று அலறுவீர்கள்!
சித்தாந்த ரீதியாக உங்கள் முன் பெருகும் போது,
" அய்யய்யோ தீ. கம்யூனிஸ்டுகள்
நக்சலைட்டுகள் "
என்று நீங்கள் அனைவருமே
அச்சம் அலறுவீர்கள்தான்!
- கீழடி பதிப்பகம் துரை.சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1018690660837730/?rdid=3JuWQS0FXWX61WJ7
=========================================================
5
தலித் பிரதிநிதித்துவத்தின் வரையறை.
கடந்த 22.05.2026 ஆம் நாள் The Hindu நாளேட்டில் வெளியான தமிழ்நாட்டு அமைச்சரவைகளின் தலித் பிரதிநித்துவம் பற்றிய கட்டுரையில் இடம்பெற்ற என்னுடைய கருத்தையும், புனித பாண்டியன் அவர்களுடைய கருத்தையும் கீழே பார்க்கலாம். என்னுடைய கருத்துக்கு மறுப்பு போல் அவர் கருத்து அமைந்துள்ளது. இதற்கு பின்னர் ஒரு நாள் கழித்து "பிரதிநிதித்துவ மாயை"என்னும் தலைப்பில் தலையங்கத்தையும் எழுதி அவர் வெளியிட்டுள்ளார்.
நிலவும் இன்றைய அமைப்பிற்குள்ளிருந்து கிடைக்கும் பிரதிநிதித்துவம்
பிரச்சினைகளை தீர்க்கும் என்று நாம் நம்பவில்லை. அது நம்முடைய இலக்கும் அல்ல. ஆனால் அவற்றில் சில மாற்றங்கள் ஏற்படுவதைப் பற்றி கேட்கப்படும் போது நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்துகிறோம். இது நிலவும் அமைப்பிற்குள் நடைபெறும் மாற்றம் தான் என்பதை புரிந்து கொண்டே அக்கருத்துகளை சொல்லுகிறோம். அவ்வளவே.
தலித் பிரச்சினைகளில் சாதி இந்துக்களை விட தலித் பிரதிநிதிகள் கூடுதலாக செயல்பட முடியும் என்பதற்காகவும், அவர்கள் பிரச்சினைகளில் எல்லோருக்கும் பொறுப்பிருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது. பாபாசாகேப் அம்பேத்கர் கோரிய பிரதிநிதித்துவம் இதுவல்ல என்றாலும் அவர் போராடி வந்ததன் தொடர்ச்சியிலேயே இப்பிரதிநித்துவம் சாத்தியமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை இரண்டு விசயங்கள் இங்கு நடந்திருக்கவில்லை.
1. தலித்துகளுக்கு அமைச்சரவைகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
2. பிரதிநித்துவம் வழங்கப்பட்டவர்களும் தலித் பிரச்சினைகளின் / திட்டங்களின் போது சட்டம் மற்றும் தார்மீகம் சார்ந்து அம்மக்கள் சார்பாக நடந்து கொண்டதில்லை. அதற்கு அப்பிரதிநிதிகள் சார்ந்த கட்சிகளில் சொல்லியும் சொல்லப்படாமலும் இருக்கும் தடையே காரணம். இவர்களோடு ஒப்பிடும்போது பிற பிரதிநிதிகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தத்தம் சாதியினருக்கு ஆதரவாக இயங்கி வந்திருக்கின்றனர். அவற்றை இக்கட்சிகள் தடுத்ததில்லை. சாதி இந்துக்களின் ஓட்டிற்காக இக்கட்சிகள் வெளிப்படுத்தி வரும் பாகுபாடுகளே இவை.
இப்பின்னணியில் தான் தவெக அரசின் அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை நாம் அணுக வேண்டும். தலித்துகள் விசயத்தில் பிற கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து தவெக பெரிய மாற்றங்களை தந்துவிடும் என்று நாம் நம்பவில்லை. இந்த விதத்தில் புனித பாண்டியன் தி இந்துவில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்தில் கூட நமக்கு முரண்பாடில்லை.
ஆனால் இப்போதைக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. பிரதிநிதித்துவம் மட்டுமல்ல முக்கிய துறைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சாதியம் கூர்மை பெற்றிருக்கும் காலத்தில் தலித்துகள் பிற துறைகளை ஏற்று திறம்பட செயற்படுவது கூட அதன் வெம்மையை தணிக்க உதவலாம்.அதேவேளையில் தலித்துகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பிரதிநித்துவமும் முக்கிய துறைகளும் தவெக பற்றி பிற சாதியினர் மத்தியில் பரப்பப்படப்போகும் பிம்பம் என்னவாக இருக்கும் என்பதையும் இவற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் புனித பாண்டியன் இத்தலையங்கத்தில் இரண்டு விசயங்களை செய்திருக்கலாம்.
1) தவெகவின் நோக்கத்தை விரிவாக கட்டுடைத்திருக்கலாம் அல்லது அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கலாம்.
2) பெரியாரின் பெயரால் அவர் ஆதரிக்க விரும்பும் திராவிட கட்சிகளில் இந்த 59 ஆண்டுகளில் விகிதாச்சாரப் படி கொடுக்கப்படாத பிரதிநிதித்துவத்தையும், கொடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலித் பிரச்சினைகளில் வாளாவிருந்ததையும் அவர் விமர்சித்திருக்க வேண்டும்.
1930 களில் தலித் பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் அரசில் இடமளித்த போது அரிஜன மக்கள் பிரச்சினைகளில் இப்பிரதிநிதிகளின் தலையீட்டிற்கு இருக்கும் சுதந்திரத்தை ஆட்சியோ கட்சியோ கட்டுப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை காந்தியின் அரிஜன் சேவா சங்கம் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டிருந்தது. இதனை எம். சி. ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இரண்டையும் பேசாமல் தலித் பிரதிநிதித்துவத்தில் அமைச்சரவையில் இடம்பெற்ற அரசியல் கட்சியையும், பிரதிநிதித்துவத்தை வரவேற்றிருப்பவர்களையும் சாடுவதற்கே இத்தலையங்கத்தில் அதிகம் இடமளித்திருக்கிறார். (இந்த தலையங்கத்திற்குப் பிறகு சன் நியூஸ் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் விசிகவை நேரடியாக விமர்த்திருக்கிறார். )
இப்போது கூட ஒன்றும் முடிந்துவிட வில்லை. ஆட்சிகள் இருக்கட்டும். அவர் ஆதரிக்க விரும்பும் கட்சிகளின் நிர்வாகத்தில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேவை என்ற விமர்சனத்தையோ போராட்டத்தையோ அவர் தொடங்கலாம். பலரும் அவரை ஆதரிக்கவே செய்வர்.
நாம் ஓரிடத்தில் எதிர்பார்க்கும் நீதி, தான் விரும்பும் இடத்திலும் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது.
இந்து செய்தியின் இணைப்பு பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. (https://www.thehindu.com/news/national/tamil-nadu/historic-shift-vijays-cabinet-marks-tamil-nadus-best-sc-representation-till-date/article71007377.ece?fbclid=IwY2xjawSJ4eNleHRuA2FlbQIxMABicmlkETFPZXpXaUc2NDc1NzJqWUpSc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHqaJtA4Qjx2ZQ35g0cfOcACtktN0nXoX95Md7KaCBwkBZBOq34jXU8SebtV3_aem_PMRDRW_wfkCgLsJJJycumw)
ஸ்டாலின் ராஜாங்கம்
https://www.facebook.com/100000009806287/posts/27534788296104793/?rdid=ZDd6zhA4zMOlnc6P
=============================
6
சாதி ஒழிப்புக்கு நடைமுறை முடிவுகள் மட்டும் போதுமா?
திமுக, அதிமுகவைப் போலவே தவெகவும் சாதி பார்த்து, வசதி பார்த்து, குற்றப்பிண்ணனி நிறைய இருக்கிறதா எனப் பார்த்துத்தான் குறைந்தது பாதி வேட்பாளர்களையாவது நிறுத்தியது.
மீதி வேட்பாளர்கள் கொஞ்சம் வசதியும் முன்னனுபவமும் இல்லாதவர்களை நிறுத்தியது.
ஆனால் தவெகவுக்கு ஓட்டுப் போட்ட மக்கள் இதை எதையும் பார்க்கவில்லை,
மாறாக விஜய் மற்றும் விசிலைப் பார்த்துத்தான் வாக்களித்தனர்.
இதன் பிண்ணனி விஜய் மீதான கவர்ச்சி என்பதல்ல
மாறாக 47ல் இருந்து 67 வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அமைச்சர்கள் காட்டிய பண்ணையார்த்தனத்தை எப்படி 67ல் திமுக உடைத்ததோ அதைப் போன்றதொரு காரணமே.
கடந்த 75 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் மெல்ல மெல்ல பண்ணையார்த்தனத்தையும்,
ஓட்டுக்கு 5000, பத்தாயிரம் தருமளவு கொள்ளையில் ஊறிப் போனவர்களாகவும் மாறிப்போனார்கள்.
இதை எதிர்த்து முறியடிக்கும் பிரபலத்தை மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
விஜய் இதையெல்லாம் தலைகீழாக மாற்றிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது போலத் தெரியவில்லை,
மாறாக இந்த இரண்டும் தொலைந்தால் போதும்,
ஆனால் அவர்களை வீழ்த்துமளவு பிரபலமாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை விஜய் பிம்பம் பூர்த்தி செய்திருக்கிறது.
இந்த நிலை 96லும் வந்தது.
அப்போது ரஜினி பிம்பம் அதை சாதித்திருக்கும்.
ஆனால் ரஜினி வராததால் திமுக, தமாக அந்த மாற்றத்தை அறுவடை செய்தது.
அப்போதிருந்தும் திரும்ப
அரசியல் களம் திமுக vs அதிமுக என்று மாறிவிட்டது.
கணக்குப்படி பார்த்தால் ஒவ்வொரு 20 அல்லது 30 ஆண்டுகளுக்கொரு முறை அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.
மாற்றம் வந்ததிலிருந்து மெல்ல மெல்ல அதிருப்தி வளர்ந்து மீண்டும் ஒரு கொதிநிலையும்
அங்கிருந்து ஒரு மாற்றமும் ஏற்படுகிறது.
இதை முதலாளித்துவ குழுக்கள் கணித்து அதற்கேற்ப 10 அல்லது 15 ஆண்டுகளில் அதற்கான நபரை அல்லது நபர்களை தயார் செய்து அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த மாற்றத்தை கணிக்கும் தத்துவம் என்பது மார்க்சியம்தான்.
மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிதான் இதை கண்டறியும் விஞ்ஞானபூர்வமான விதியாகும்.
ஆனால் எந்தவொரு கம்யூனிஸ்டு அமைப்பும்
இதுவரை இதை முன்னறிந்து கூறியதில்லை.
மாறாக மக்கள் மாற மாட்டார்கள், திருந்த மாட்டார்கள்,
பணத்திற்கு விலை போய் விட்டார்கள் ,
சாதிக்கு பெரும் பலம் உள்ளதென்றும் முடிவுக்கு வந்து விட்டனர்.
எனவே சாதியை ஒழிக்காமல் மார்க்சியமே வெற்றி பெறாதென்று வேறு பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்த முடிவுக்கு அவர்கள் தங்களுடைய தத்துவ வகைப்பட்ட ஆய்விலிருந்து வரவில்லை, மாறாக முதலாளித்துவத்தினால் உருவாக்கப்படும் இந்த தேர்தல் முடிவுகளை வைத்து இந்த முடிவுகளுக்கு வந்தனர்.
இதுபோன்ற நடைமுறை முடிவுகளை வைத்துக்கொண்டு
தமிழ்நாட்டில் பணம், சாதியை அழிக்க மார்க்சியத்தால் முடியாது என்றும்,
இதை மாற்ற மார்க்சியத்தோடு பல்வேறு இசங்களை கலக்க வேண்டுமென்றும் பேசினர்.
இன்று மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து,
இந்த முதலாளித்துவ சட்டகத்திற்குள் தங்களால் இயன்றளவு பணம், சாதி போன்றவற்றை நிராகரித்ததோடு
இயன்ற மாற்றத்தையும் கொடுத்துள்ளனர்.
இப்போதாவது மக்களின் மனநிலையைப் பற்றியும், தாங்கள் வைத்திருந்த கருத்துக்களை பற்றியும்,
மாற்றத்தைப் பற்றியும் எதாவது ஒரு அறிக்கையை எதாவதொரு கம்யூனிச அமைப்பாவது கொடுத்துள்ளதா ?
அப்படிக் கொடுத்தால்தானே இதுபோல நாம் நினைப்பது சரியா, தவறா என்ற முடிவுக்கு வரமுடியும்.
தனி நபர்களாக நம்மைப் போன்றவர்களின் சிந்தனைகள், கருத்துக்கள் சரியா, தவறா என்பதற்கான உரைகற்களே கம்யூனிச அமைப்புகள் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மீதும் தரும் முடிவுகள்தானே.
ஆனால் இங்கு அப்படி எதாவது நடக்கிறதா ?
கம்யூனிச அறிவுஜீவிகள் என்பவர்களில் சிலர் திமுககாரர்களைப் போல தவெகவை கிண்டல் செய்து கொண்டுள்ளதைத்தான்
காண முடிகிறது.
எங்கு போய் முட்டிக்கொள்வதோ
கொடுமையிலும் கொடுமையான காலமிது.
இந்த அமைப்புகளின் மீதான நம்பிக்கைகள் சுத்தமாக அற்றுப் போகிறது.
-தா. சந்திரன்
https://www.facebook.com/share/p/14nH94nMZSQ/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு