பாட்டாளி வர்க்கத்தின் அன்னை ஜென்னி மார்க்ஸ்!

காதல் என்றால் ஜென்னி

பாட்டாளி வர்க்கத்தின் அன்னை ஜென்னி மார்க்ஸ்!

சமூக நோக்கற்ற காதலால் என்ன பயன்
எனும் வினாவிற்கு விடை ஜென்னி.

காதலின் இலக்கணம் ஜென்னி.
காதல் இலக்கியம் ஜென்னி.

காதல் என்றால் ஜென்னி.
ஜென்னி என்றால் காதல் 

- Sidhambaram Voc (முகநூலிலிருந்து)

**********************************************************************

காதலென்றால் ஜென்னி மார்க்ஸ்!
தியாகமென்றால் ஜென்னி மார்க்ஸ்!
பாட்டாளி வர்க்கத்தின் அன்னை ஜென்னி மார்க்ஸ்!

மார்க்ஸ் இல்லாத உலகம் எப்படியோ
அப்படித்தான் ஜென்னி இல்லாத மார்க்சும் நீரில்லா நிலம் போல...

ஓ! தோழர் ஜென்னி மார்க்ஸ் 
நீங்கள் எத்தனை பெரிய தூய உள்ளம்  படைத்தவர்!

பாட்டாளிகளின் தாயாகிப்போன 
பிரபு குல தேவதை!

மார்க்சை நீங்கள் மணக்காமல் இருந்திருந்தால்...?
அய்யோ! நினைக்கும் போதே 
அச்சம் நெஞ்சை அடைக்கிறது...

உங்களுக்கு மார்க்ஸ் என்ற பெயருமுண்டு... 
யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் காதலுக்கு இலக்கணம் எழுதியவர் நீங்கள்!

பச்சை மழலையின் இதழ் பட்டு 
உங்கள் மார்பில் பாலுக்கு பதிலாய் 
உதிரம் கொட்டியதே 
எத்தனை கணமான நேரமது?

வறுமை வாழ்வை தின்ற போதும்
பாட்டாளிகளுக்காகவே என்றும்
உங்கள் இதயம் துடித்து கொண்டிருந்தது...

அன்னையே! மார்க்சியம் எனும் மகத்துவம் மலர
உங்கள் பாதம் தாங்கிய முட்கள் தான் 
எத்தனை! எத்தனை!

தோழரே! அன்னையே! உங்கள் தியாக
மலை உச்சியின் அடிவாரத்தில் நின்று
சமத்துவம் மலர என்றென்றும்

மார்க்சோடு இணைத்து உங்கள்
பெயரையும் எங்கள் இதயங்கள் என்றும்
பூஜிக்கும்!

ஜென்னி மார்க்ஸ்!ஜென்னி மார்க்ஸ்!
ஜென்னி மார்க்ஸ்!

- செங்காற்று