யாமறிந்த புலவன்

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

யாமறிந்த புலவன்

யாமறிந்த புலவனை எனக்கு மீண்டும் அறிமுகம் செய்வித்த தோழர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்களுக்கு ஓராயிரம் நன்றிகள். 

பெரும் புலவன் பாரதியின் கவிதைகள், வசன கவிதைகள், செய்திக் கட்டுரைகள் நிறைய படித்துள்ளோம். 

அவர் மீது நேர்நிறை, எதிர்மைறை விமர்சனங்களும் படித்திருப்போம். 

இந்த விமர்சனங்களை ஒரே இடத்தில் கொண்டு வருவது எப்படி? அதுவும் சாதாரணமல்ல, நூறாண்டு கட்டுரைகளைத் திரட்டிக் காட்டுவது எப்படி? மலைக்க வைக்கும் செயலல்லவா? கிட்டத்தட்ட முடியாத செயலெனவே தோன்றும். ஆனால் இந்த அயராத பணியை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் கடற்கரய். 

அண்ணா பாரதியார் பற்றி 1948இல் "People's Poet" என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலி நிலையத்தில் உரையாற்றினார். அந்த உரையின் என் தமிழாக்கத்தைத் தமது தொகுப்பில் இடம்பெறும் வாய்ப்பளித்த தோழர் கடற்கரய் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். 

தமிழ்க் கூட்டம் பாரதி ஆலயத்தில் நுழைய விழைகிறேன். 

ஆதரவு தாருங்கள் தொகுப்பாளர் கடற்கரய்க்கு!

(யாமறிந்த புலவன் நூலின் விலை, 1500 ரூபாய். தேவை எனில் 8778502585  என்ற எண்ணிற்கு ஜிபே செய்யலாம். பாரதி பிறந்தநாளான டிசம்பர் 12 வரை பதிவு செய்பவர்களுக்கு கூரியர் செலவு ரூ 100 இலவசம்.)

- நலங்கிள்ளி

(முகநூலில்) 

https://www.facebook.com/100001706819102/posts/pfbid02r2gBP5DKZQFbvotdtjnAx78RyaaFdMyRsfGUj1sRijv45pYBqGe3XYKKC1khTvYgl/?sfnsn=wiwspwa