நூல் அறிமுகம்: நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல

இரா முருகவேள்

நூல் அறிமுகம்: நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல

நக்சல் பாரி இயக்க வரலாற்றை சுருக்கமாக விவரிக்கும் "நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல" நூல் வெளிவந்தது விட்டது.

நக்சலைட்கள் மாபெரும் தியாகிகள், இல்லை பயங்கரவாதிகள், இல்லை ராபின் வுட் போல தனிநபர் சாகச வாதிகள் என்று மனம்போன போக்கில்  சித்தரிப்பது தமிழ் இலக்கியத்திலும் சினிமாவிலும் வழக்கமாக உள்ளது. (மா.லெ. அமைப்பில் பணிபுரிந்த சில தோழர்களின் எழுத்துக்கள் விதிவிலக்கானவை). 

அப்படியொரு சினிமா பார்த்து வந்த கோபத்தில் நக்சல் இயக்க வரலாற்றை உயிர்மை இதழில் தொடராக எழுதினேன். அவ்வப்போது முகநூலிலும் பதிவிட்டதை நண்பர்கள் நினைவு வைத்திருக்கக் கூடும்.

அக்கட்டுரை தொடரே இந்நூல். நக்சல் அமைப்பு எப்படி தோன்றியது, அதன் நோக்கம் என்ன, அமைப்பு வடிவம் என்ன?  இன்றைய பரிணாம வளர்ச்சி என்ன,  ஆகியவற்றை விவரிக்க முயன்று இருக்கிறேன். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பற்றியே நூல் பேசுகிறது.

அன்புக்குரிய தோழர் திருப்பூர் அருண் Arun Kumar அவர்களின் தூண்டுதலாலும் பங்களிப்பா லுமே இந்நூல் வெளிவருகிறது.

நூல் தேவைப்படும் நண்பர்கள் 

ஐம்பொழில் பதிப்பகம், 9443014445 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 

பக்கம் 152. விலை 180 ரூபாய். 

முப்பது சதவீதம் கழிவு உண்டு. ( தபால் செலவு தனி)

- இரா முருகவேள் (முகநூலில்)

https://www.facebook.com/share/p/ES3qPQqfmfJgyxaW/?mibextid=oFDknk

Disclaimer: இந்த நூல் அறிமுகப் பகுதியும் நூலின் உள்ளடக்கமும் கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு