நூல் அறிமுகம்: காஸாவின் திருமணங்கள்

சீர் வாசகர் வட்டம்

நூல் அறிமுகம்: காஸாவின் திருமணங்கள்

வாசிக்க தேர்வு செய்திருக்கவே கூடாத நாவல்

இஸ்ரேலின் போரினால்  ஆக்கிரமிக்கப்பட்ட பலாஸ்தீன மக்களிடையே உருவாகி இருக்கும் மனப்பதட்டத்தை வாசிக்கும் எனக்கும் இப்படி கடத்தியிருக்க வேண்டாம். அதனால் தான் இப்படி சொல்கிறேன்.

லமீஸ் என்ற பெயருக்காக சண்டையிடும் ரண்டா, லமீஸ் என்ற இரட்டை சகோதரிகள், அவர்களை அடையாளப்படுத்தமுடியாத அம்மா, கனவுகளை, சுதந்திர உணர்வை, திரும்பியே வராத தனது கணவரின் நினைவுகளை ரண்டாவிடம் சொல்லும்  மிகக்குறிப்பாக அதில் கூடக்குறைய ஏதும் சேர்க்கக்கூடாது என சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி

 அவர்கள் வீட்டின் அருகே குடியேறும் எகிப்து நடிகையின் சாயலில் இருக்கும் அமீனா, உயிர்த்தியாகம் அடையும் அவனது அப்பாவை போலவே இருக்கவே ஆசைப்படும் மற்றும்  குழந்தையிலிருந்தே லமீஸாவை விரும்பும் லாஹீப், மற்றும் நாதியா இடையிடையே ஸ்னைப்பர்காளாலும், ராக்கட் குண்டுகளாலும் சாகடிக்கப்படும் போராளிகளும், மக்களும் அவர்களது சமாதியின் மீது இருக்கும் தகர்க்கப்படும் மீஸான் கற்கள் தான் இந்நாவலின் பாத்திரங்கள்.

மிகச்சிறிய நாவல் தான் ஆனால் ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் சில நிமிடங்களை நம்மை தொந்தரவு செய்வதால் அவ்வளவு சுலபமாக நாவலை முடிக்கவிடுவதில்லை.

கனஃபானி போலவே ரண்டாவும் எழுத்தாளர் ஆக விரும்புகிறாள், எங்குமே பிரசுரமாகத தன் எழுத்துக்களை அவரது கல்லறையில் வைக்க ஆசைப்படுகிறாள் அதுமுடியாமல் போகவே மரணத்தை பரிசளிக்கும் இஸ்ரேலின் விமானங்கள் வீட்டை வட்டமடிக்கும் போது கனஃப்பானியின் புத்தகங்களை தூக்கிப்பிடுத்து "நீங்கள் எங்கள் எல்லாரையும் கொல்லலாம், ஆனால் இந்த எழுததுக்களால் உங்களை நாங்கள் என்றோ வென்றுவிட்டோம், எங்கள் சுதந்திரங்களை எப்போதும் கொல்லமுடியாது" என்கிறாள்.

ஆமினாவை முதன்முதலில் சந்திக்கும் போது இதில் யார் ரண்டா  லமீஸ் என்று கேக்கும்போது  ஆரம்பிக்கும் "நான் தான் லமீஸ் என சொல்லும் ரண்டா", எல்லா இடத்திலும் "நான் தான் லமீஸ்", "நீங்க ரண்டான்னு சொல்லி எண்ட்ட பேசிட்டு இருக்கீங்க " என அந்த பெயரை கைப்பற்ற நினைக்கும் போதெல்லாம்  தோன்றும் புன்னகை.

இறுதியில்  மாடியில் நின்றுக்கொண்டிருந்த லமீஸ் ஸ்னைப்பர் தாக்கி ரத்தத்த்தோடு இறந்துக்கொண்டிருக்கும் அவளின் பெயரை என்றென்றைக்குமாக கைப்பற்றுகிறாள், அதன்மூலமாக இருவருமே உயிருடன் இருப்பதாக ஊரையே நம்பவைக்கிறாள்.

எனக்கு ஏனோ நான் தான் ரண்டா எனச்சொல்லத்தோன்றுகிறது.

நூல் வெளியீடு: சீர் வாசகர் வட்டம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு