தீவிரமடையும் உக்ரைன் போரும் பொருளாதார நெருக்கடிகளும்

அன்பே செல்வா

தீவிரமடையும் உக்ரைன் போரும் பொருளாதார நெருக்கடிகளும்

உக்ரைன் போர் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது நேற்றைக்கு ஜெர்மன் தன்னுடைய நவீன ஆயுதங்களை கொடுப்பதாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளும்  அறிவித்திருக்கின்றன இதெல்லாம் கடந்த ஒரு வருடமாக நாம் கேள்விப்படும் செய்திதான் என்றாலும் நேற்றைய ஜெர்மன் அறிவிப்பில் இருக்கும் முக்கிய செய்தி என்னவென்றால் அது பிற நாடுகளையும் இந்த போருக்கு ஆயுதம் வழங்கச் சொல்லி வெளிப்படையாக அறிவுறுத்தி இருப்பதுதான்.

இந்தப் போர் ரஷ்யா வெர்சஸ் நேட்டோவாக எப்போதோ மாறிவிட்டது என்றாலும் கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவிற்குள் நிகழ்ந்த கடுமையான உள்நாட்டு நெருக்கடி பொருளாதார மந்த நிலை வேலை இழப்பு போருக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இது எதுவும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களில் செய்தியாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டாலும் உள்நாட்டுக்குள் ஐரோப்பிய அரசுகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. என்றாலும் இப்போது ஐரோப்பிய நாடுகள் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வந்து விட்டதையே மேல் சொன்ன அறிவிப்புகளும் உறுதிப்படுத்துகிறது..

இது ஒரு புறம் இருக்க இந்த போர் சூழலில் தான் பிபிசி மோடிக்கு எதிரான ஆவணப் படத்தை 20 ஆண்டுகள் கழித்த ஆவணப்படத்தை வெளியிடுகிறது, ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடான பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான ஊடகம் மூன்றாம் உலக நாடுகளில் மிக முக்கியமான இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுப்பதை இந்தப் போர் சூழலோடு இணைத்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது.

போர் ஆரம்பித்த இந்த ஓர் ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியாவே இருந்திருக்கிறது. இந்தியா இருந்திருக்கிறது என்றால் அது இந்திய சாதாரண மக்களுக்கு சாதகமான நடவடிக்கை என்று அர்த்தம் இல்லை. அதானி அம்பானி போன்ற இந்திய பெருமுதலாளிகளுக்கு சாதகமான நடவடிக்கைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏனென்றால் பிபிசியின் மோடிக்கு எதிரான ஆவண படத்தைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான அவரின் பொருளாதார சாம்ராஜ்யத்தை கேள்விக்கு உள்ளாக்கும் செய்தியை இன்னொரு மேற்கத்திய ஊடகம் அமெரிக்காவில் வெளியிடுகிறது, இதையும் இந்த உக்ரைன் போரோடு இணைத்து பார்க்காமல் தவிர்க்க முடியாது.

ஏனென்றால் இந்த போர் துவங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கு எதிரான எந்த மிகப்பெரிய அறிவிப்பையும் இந்தியா மேற்கொள்ளாமல் அமைதி காத்தது, ஒரு வகையில் இது பாஜகவின் அதானி அம்பானி முதலாளிகளுக்கு பெரும் லாபகரமான தந்திரமான யுக்தி என்றாலும் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர மேற்கத்திய நாடுகள் விரும்பலாம்..

ஏனென்றால் கருங்கடலையொட்டிய பகுதியில் உக்ரைனின் பிடி நழுவிக் கொண்டிருக்கிறது ஓராண்டுகள் ஆகியும் இத்தனை நாடுகளின் ராணுவ உதவி இருந்தும் உக்ரேனால் ரஷ்யாவை தடுத்து வைக்க முடியவில்லை என்பதே இந்த புதிய ராணுவ உதவி அறிவிப்புகள் நமக்குச் சொல்லுகின்றன..

இதெல்லாம் நமக்கு செய்தி ஆனால் எப்போது நேரடி பாதிப்பாக மாறுகிறது என்றால் இந்த ஆண்டு ஜனவரி துவங்கியதிலிருந்து மைக்ரோசாப்ட் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது கூகுள் பன்னிரண்டாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது ஐபிஎம் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது, சாப் 3000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது, இந்த 25 நாட்களில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இதன் பாதிப்பு இந்தியாவிலும் நிச்சயம் எதிரொலிக்கும். விப்ரோ 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது

போர் தீவிரத் தன்மை அடைய அடைய கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி உலக நாடுகள் செல்லும்.

மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் கொடை பிடிப்பார்கள் என்று கம்யூனிஸ்ட்களை கிண்டல் அடிக்கச் சொல்லும் சொலவடை உண்மையில் அது எவ்வளவு அபத்தமானது என்பது இந்தப் போர் சூழலில் வைத்து நாம் புரிந்து கொள்ள முடியும்

இத்தனை பெரிய நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை வெளியேற்றுகிறது என்றால் இதன் பாதிப்பு ரிப்பில் எபக்ட் போல அடுத்தடுத்த கட்டங்களை அடைந்து பெரும் கொந்தளிப்பான சூழலுக்குள் உலக மக்களை தள்ளும்.

அப்போ ஒரு சாதாரண மனிதர்களாக நாம் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ஆயுதங்களை உக்ரேனுக்கு கொடுக்காதே எங்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளாதே என்பதைத்தான் உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது.

- அன்பே செல்வா 

(முகநூலில்) 

https://www.facebook.com/100001705884491/posts/pfbid0QkZKg4TMgdRcRqLVuCEXy6ayLMwsen1fHMiyq3JcGUXeytu4DLb1tALPkxEnjAgYl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு