அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
தமிழ் குட் ரிட்டர்ன்ஸ்
இந்தியாவின் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குழுமத்தின் கடந்த ஆண்டு ஒப்பந்தங்களை முழுமையாக ஆய்வு செய்யவும், கண்காணிப்பு அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் Short Seller நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆய்வு செய்து, தற்போது செபி நடத்தி வரும் அதானி குழுமத்தின் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதன் விசாரணையில் இதைச் சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கஃபே காஃபி டே 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலிருந்து மீண்டது எப்படி?
அதானி குழுமம்
அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவிலான முதலீட்டில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் தலையீடு உள்ளது.
17 வெளிநாட்டு SPV
குறிப்பாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனம் செயல்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்யச் செபி முடிவு செய்துள்ளது. இதுவரையில் அதானி குழுமம் சுமார் 17 offshore special purpose vehicle-ஐ (SPV) தனது கையகப்படுத்தல் திட்டத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்புக் கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் நிறுவனங்கள் "வெட்கக்கேடான" வகையில் சந்தை கையாளுதல் மற்றும் கணக்குகளில் பல்வேறு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.
William Ackman ஆதரவு
Hindenburg அறிக்கை அதானி குழும நிறுவன பங்குகளை மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெரும் ஓட்டையைப் போட்டு உள்ளது. இதேவேளையில் பில்லியனர் முதலீட்டாளரான William Ackman தனது டிவிட்டரில் அதானி குழுமம் குறித்து அறிக்கை சிறப்பான ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படு உள்ளது அதைக் கண்டிப்பாக நம்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
வரிச் சலுகை
இதேபோல் Hindenburg அறிக்கையில் அதானி குழுமம் அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளிநாட்டுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷாட் பொசிஷன் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
2.1 லட்சம் கோடி ரூபாய் கடன்
மேலும் அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன் இக்குழுமத்தை நிச்சயமற்ற நிதி நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. டாப் 5 நிறுவனத்தில் மட்டும் அதானி குழுமம் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வைத்துள்ளது.
விளக்கம்
இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ளது அதானி குழுமம், இதேபோல் Hindenburg நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது அதானி குழுமம். மேலும் Hindenburg நிறுவனத்தின் அறிக்கைக்கு ஒவ்வொரு வரியாக விளக்கம் கொடுத்துள்ளது.
CreditSights அறிக்கை
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு பின்ச் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான CreditSights அதானி குழுமத்தை "deeply overleveraged" என்று வகைப்படுத்தியது மட்டும் அல்லாமல் கடன் மற்றும் பிற அபாயங்கள் உள்ளதாக அறிவித்தது.
இதைக் கடுமையாக எதிர்த்த காரணத்தாலும், விளக்கம் கொடுக்கப்பட்ட காரணத்தாலும் CreditSights சில நாட்களில் கணக்கில் இருக்கும் சில தவறுகளைத் திருந்தம் செய்ததாக அறிவித்தாலும் தர மதிப்பீட்டை மாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்தது.
அன்னிய போர்ட்போலியோ கணக்குகள்
இதேபோல் 2021ல் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனத்தில் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி பங்குகள் வைத்திருக்கும் 3 அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்கை NSDL அமைப்பு முடக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் 2 அன்னிய போர்ட்போலியோ கணக்கின் மீதான விசாரணையைத் தற்போது செபி நடத்தி வருகிறது.
- தமிழ் குட் ரிட்டர்ன்ஸ்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு