தொடரும் கிழக்கு நோக்கிய NATO விரிவாதிக்கம்

ஐரோப்பிய நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து தன்னை NATO-வுடன் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை துருக்கி சில நிபந்தனைகளுடன் அளித்துள்ளது.

தொடரும் கிழக்கு நோக்கிய NATO விரிவாதிக்கம்

இரண்டாம் உலகப்போரிலிருந்தே அணிசேரா கொள்கையை கடைப்பிடித்து வந்த சுவீடன், பின்லாந்து இரு நாடுகளும் தற்போது ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை கண்டு அஞ்சியும்  கிழக்கு ஐரோப்பாவில் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ளவும் NATO கூட்டமைப்புடன் தன்னை இணைத்துக்கொள்வது என முடிவு எடுத்தன. 

ஒரு நாடு தன்னை NATO வில் இணைத்துக்கொள்வதாயின் அக்கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாடுகளின் அனுமதியும் பெறவேண்டும். அந்த வகையில் NATO வின் முக்கியமான உறுப்பினரான துருக்கி தனது அனுமதியை வழங்குவதற்கு  சில நிபந்தனைகளை முன்வைத்தது. 

அதாவது,

1. துருக்கிக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு சுவீடன் புகலிடமாக இருப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் மற்றும் சுவீடனில் தஞ்சமடைந்திருக்கும் சில முக்கியமான தீவிரவாத தலைவர்களை துருக்கியிடம் ஒப்படைக்கவேண்டும் 

2. துருக்கியின் மீது அவ்விரு நாடுகள் விதித்துள்ள ஆயுத தளவாட விற்பனைக்கான தடைகளை முற்றிலும் அகற்றவேண்டும் என கோரியது. 

தற்போது அந்நிபந்தனைகளுக்கு அவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து அவ்விரு நாடுகளும் NATOவில் இணைவதற்கு தனது அனுமதியை வழங்கியுள்ளது.

- செந்தளம் செய்திப் பிரிவு