அமெரிக்க மந்தநிலை அபாயம் உலகப் பொருளாதார வீழ்ச்சியை அதிகரிக்கிறது: மல்பாஸ்

ரீயூட்டர்ஸ்

அமெரிக்க மந்தநிலை அபாயம் உலகப் பொருளாதார வீழ்ச்சியை அதிகரிக்கிறது: மல்பாஸ்

அமெரிக்க மந்தநிலையின் அபாயம், உலகப் பொருளாதார வீழ்ச்சி சார்ந்த பிரச்சனைகளை அதிகரிக்கிறது. வட்டி விகிதங்கள் மற்றும் அதிக கடன் அளவுகளால் ஏற்கனவே அதிக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு மாறாக அதற்கு தேவையான முதலீடுகளைத் திரும்ப பெறுகின்றன என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஜப்பானில் நடந்த  (G7) நிதி அதிகாரிகள் குழு கூட்டத்தில், அமெரிக்க கடன் வரம்பை உயர்த்துவது மற்றும் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கக் கடனால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பது பற்றி "மிக அதிக முக்கியத்துவம்" தந்து விவாதிக்கப்பட்டது.

'அனைவருக்கும் நெருக்கடி'

"உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும் என்பது தெட்டத்தெளிவு," என்று அவர் G7 கூட்ட தருணத்தில் ரீயூட்டர்ஸிடம் (Reuters) கூறினார். "இதனை செய்யாவிடில்  விளைவுகள் மோசமாக இருக்கும்."

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் 31.4 டிரில்லியன் டாலர் கடன் வரம்பை உயர்த்தியதே பொருளாதார மற்றும் நிதிப் பேரழிவை ஏற்படுத்தியது அதை குடியரசுக் கட்சி கட்டுப்படுத்த தள்ளியுள்ளது என்று  வலியுறுத்தினார்.

கடன் வரம்பை உயர்த்துவதற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொள்கிறது.

G7 கூட்டங்களின் போது உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வளர்ந்து வரும் நாடுகளின் அதிகக் கடன் சுமையைக் கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக திரு. மால்பாஸ் கூறினார்.

உலகளாவிய வளர்ச்சி 2023 இல் 2% க்கும் குறைவாக இருக்கும், இன்னும் பல ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். ஒரு பெரிய சவால் என்னவென்றால், முன்னேறிய பொருளாதார நாடுகள் அதிக கடனைப் பெற்றுள்ளன, அவற்றுக்கே நிறைய மூலதனம் தேவைப்படும், இது வளரும் நாடுகளுக்கு குறைந்த முதலீட்டையே கிடைக்க செய்கிறது, என்றார்.

"வளர்ச்சியில் மந்தம் நீண்ட காலத்திற்கு நீடிக்கவுள்ளது. இது ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய சோகம்," என்று அவர் கூறினார். "உலகம் நெருக்கடி கட்டத்தில் உள்ளது, ஆனால் நிதி அமைப்புகள் நிலைத்து நிற்கின்றன என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் வளர்ச்சி என்பதுதான் கேள்விக்குறி, நீங்கள் எப்படி அதிக வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவீர்கள்."

'கடன் மறுசீரமைப்பின் முக்கியத்துவம்'

திரு. மால்பாஸ், ஒட்டுமொத்தக் கடன் மறுசீரமைப்பில் மெதுவான முன்னேற்றத்தைக் காண்பது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார், நாடுகள் தங்கள் கடனை இன்னும் நிலையானதாக மாற்றுவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்கும் வரை முதலீட்டை ஈர்ப்பது கடினம்தான் என்பதைக் குறிப்பிட்டார்.

"ஒருவகையில் இந்தக் கடன் குறைப்புகளும் கூட அவசியமானது… ஏழை நாடுகள் கடன்சுமையால் தத்தளிக்கின்றன. எனவே அதை  விரைவில் செய்வது முக்கியம்."

(நிகடா, ஜப்பான்) 

- வெண்பா

(தமிழில்)

மூலக்கட்டுரை : Reuters