பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்த ஜெர்மனி.. ஐரோப்பாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. ரஷ்யா நினைத்தது நடந்தது..!!

குட் ரிட்டர்ன்ஸ்

பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்த ஜெர்மனி.. ஐரோப்பாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. ரஷ்யா நினைத்தது நடந்தது..!!

ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி அரசின், புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் படி அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான வளர்ச்சி அதாவது மைனஸ் அளவில் ஜிடிபி அளவீட்டை பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

இது கடந்த சில மாதத்தில் 2வது முறையாகும், ஓட்டுமொத்த ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தொழிற்துறை, சேவை துறை, அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனி தற்போது ரெசிஷனுக்குள் (பொருளாதார நெருக்கடி) நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஜெர்மனி வீழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் மோசமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ரெசிஷனுக்குள் சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பிரிட்டன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் நிலையில் ஜெர்மனி ரெசிஷனுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனி பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் ஜெர்மனி பொருளாதாரம் -0.5 சதவீதமாக இருந்து.

ஜெர்மனி நாட்டின் பொருளாதார சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா-வில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வருவது தடைபெற்றதால் மட்டுமே. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக G7 நாடுகளின் கூட்டாக ஜெர்மனியும் ரஷ்யா மீது அதிகப்படியான தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யாவில் இருந்து பைப் மூலம் பெறப்பட்ட கச்சா எண்ணெய், எரிவாயு முதல் அனைத்தும் தடைபெற்றது.

 

ஒரு நாடு ரெசிஷனுக்குள் செல்கிறது என்றால் தொடர்ந்து 2 காலாண்டாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் நிலையில் சென்றால் மட்டுமே ரெசிஷன் என அறிவிக்கப்படும். இதன் மூலம் ஜெர்மனி நாட்டின் ஜிடிபி டிசம்பர் காலாண்டிலும், மார்ச் காலாண்டிலும் மைனஸ் அளவில் உள்ளது.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மொத்தமாக தடை செய்யப்பட்டதால் ஜெர்மனி நாட்டின் அனைத்து விதமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதோடு ஜெர்மனி நாட்டில் ஒரு குடும்பம் வாங்கும் பொருட்களின் அளவும் டிசம்பர் காலாண்டுக்கும், மார்ச் காலாண்டுக்கும் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு நேர்மாறாக ஜெர்மனியில் மார்ச் காலாண்டில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் 2வது பாதி மிகவும் மோசமாக இருந்த நிலையில் மார்ச் காலாண்டு ஜெர்மனி முதலீட்டு சந்தை மிகவும் சிறப்பாக இருந்தது. இது வர்த்தக சந்தையும் கணிசமாக ஊக்குவித்தது ஆயினும் ஜெர்மனி ஜிடிபி -0.3 சதவீதமாக உள்ளது.

ஜெர்மனி ரஷ்யா மீது தடையை விதிக்கும் போது இவை அனைத்தும் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யா நினைத்தது நடந்துள்ளது. ஜெர்மனியின் தடைக்கு ஏற்ப ரஷ்யாவும் கடுமையான தடைகளை விதித்தது.

- குட் ரிட்டர்ன்ஸ்

https://tamil.goodreturns.in/world/germany-enters-into-recession-officially-russia-oil-supply-cut-made-major-impact-on-germany-gdp-035140.html

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு