தொழிற்சங்க உரிமைகளுக்கு சவால் விடும் TANSACS- திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள்

கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

தொழிற்சங்க உரிமைகளுக்கு சவால் விடும் TANSACS- திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள்

அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்,

தொழிற்சங்க உரிமைகளுக்கு சவால் விடும் TANSACS- திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

5-7-23 அன்று மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 186- எச்.அய்.வி பரிசோதனை மையங்களை மூட சுற்றரிக்கை அனுப்பி இருந்தது...

பொது மக்களுக்கும் ,ஊழியர்களுக்கும் விரோதமான மத்திய அரசின் சுற்றரிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும்...

TANSACS- நிர்வாகம் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்டபடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும்...

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக 17-8-23 அன்று சென்னை TANSACS - திட்ட இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை அறிவித்தோம்..

இதனை தடுக்கும் நோக்கத்திலும் சங்க நிர்வாகிகளை மிரட்டும் வகையிலும்..

10-8-23 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பக்கம் - 2 ல்

''தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநரின் எழுத்துப் பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட தகவலன்றி, வேறு எந்த தகவலையும், வேறு எந்த ஒரு நபருக்கும் தெரிவிக்கக் கூடாது.

மாவட்டம் அல்லது மாநில அளவிலான ஊழியர் சங்கங்களில் உறுப்பினராகவோ அல்லது பதவி வகிக்கவோ கூடாது.

மேலும் எந்த வகையான அரசியல் அமைப்பிலும் ஈடுபடக் கூடாது.

மேற்காணும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணியாளர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

உண்மைக்குப் புறம்பான காரணங்களை முன்னிறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக பணியினை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இதன் மூலம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தப்படுகிறது" என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அடிமை சாசன எழுத்துப் பூர்வ ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடும் தண்டனைக்குரியது என்பதால் மேற்கண்டவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பின் அதனை உடனடியாக ரத்து செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 19 (1) வது பிரிவில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் உண்டு. அதன்படி அவர்களின் கருத்துரிமைக்கும், ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைக்கும் நடத்தை விதிகளில் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் 1962..ல் பீகார் மாநில அரசு ஊழியர் காமேஷ்வர் பிரசாத் தொடர்ந்த வழக்கில் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

அரசு ஊழியர்கள், அரசியல் ரீதியாக கருத்துக்கள் கொண்டிருப்பதோ அல்லது அரசியல் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதோ நடத்தை விதிகளுக்கு எதிரானதல்ல என திரிபுரா உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.

நடத்தை விதிகள் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்டவையேயொழிய அரசியல் உரிமைகளை தடுப்பதற்கானதல்ல என மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், பார்வையில் காணும் கடிதத்தில், " மாவட்டம் அல்லது மாநில அளவிலான ஊழியர் சங்கங்களில் உறுப்பினராகவோ அல்லது பதவி வகிக்கவோ கூடாது. மேலும் எந்த வகையான அரசியல் அமைப்பிலும் ஈடுபடக் கூடாது." எனக் குறிப்பிட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது மட்டுமல்ல, அவற்றை அவமதிக்கும் செயலும்.

இத்தகைய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும்...

*தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் திரு.T.N.ஹரிஹரன் இ.ஆ.ப அவர்களின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து*... * 

*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக* 

13-8-23 அன்று திருப்பூரில் நடைபெற்ற மாநில பேரவை கூட்டத்தில் 22-8-23 அன்று மாவட்ட தலைமை மருத்துவமனை போராட்ட அறிவிப்பு செய்துள்ளார்கள்.

===============================================

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், மாநில மையம்

பெறுநர்

1) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

தலைமை செயலகம்

சென்னை 9

2) முதன்மை செயலாளர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை

தலைமை செயலகம்

சென்னை - 9

3) திட்ட இயக்குநர்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம்

சென்னை

4) ஆணையாளர்

தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகம்

தேனாம்பேட்டை

சென்னை

அய்யா, 

பொருள் -சுற்றறிக்கை-அரசியல் அமைப்புக்கு எதிராக -திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை - திரும்ப பெற கோருதல் - தொடர்பாக

பார்வை: சுற்றறிக்கை எண் : 002197 / நிர்வாகம் / த.மா.எ. க. ச / 2023 - நாள்  10.8. 23

வணக்கம், 

பார்வையில் கண்ட சுற்றறிக்கை பக்கம் - 2 ல் 

''தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநரின் எழுத்துப் பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட தகவலன்றி, வேறு எந்த தகவலையும், வேறு எந்த ஒரு நபருக்கும் தெரிவிக்கக் கூடாது.

மாவட்டம் அல்லது மாநில அளவிலான ஊழியர் சங்கங்களில் உறுப்பினராகவோ அல்லது பதவி வகிக்கவோ கூடாது.

மேலும் எந்த வகையான அரசியல் அமைப்பிலும் ஈடுபடக் கூடாது.

மேற்காணும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணியாளர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

உண்மைக்குப் புறம்பான காரணங்களை முன்னிறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக பணியினை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என இதன் மூலம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தப்படுகிறது" என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அடிமை சாசன எழுத்துப் பூர்வ ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடும் தண்டனைக்குரியது என்பதால் மேற்கண்டவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பின் அதனை உடனடியாக ரத்து செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும், இது தொடர்பாக கீழ்கண்ட கருத்துக்களையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 19 (1) வது பிரிவில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் உண்டு. அதன்படி அவர்களின் கருத்துரிமைக்கும், ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைக்கும் நடத்தை விதிகளில் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் 1962..ல் பீகார் மாநில அரசு ஊழியர் காமேஷ்வர் பிரசாத் தொடர்ந்த வழக்கில் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

அரசு ஊழியர்கள், அரசியல் ரீதியாக கருத்துக்கள் கொண்டிருப்பதோ அல்லது அரசியல் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதோ நடத்தை விதிகளுக்கு எதிரானதல்ல என திரிபுரா உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.

நடத்தை விதிகள் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்டவையேயொழிய அரசியல் உரிமைகளை தடுப்பதற்கானதல்ல என மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், பார்வையில் காணும் கடிதத்தில், " மாவட்டம் அல்லது மாநில அளவிலான ஊழியர் சங்கங்களில் உறுப்பினராகவோ அல்லது பதவி வகிக்கவோ கூடாது. மேலும் எந்த வகையான அரசியல் அமைப்பிலும் ஈடுபடக் கூடாது." எனக் குறிப்பிட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது மட்டுமல்ல, அவற்றை அவமதிக்கும் செயலும் ஆகும்.

எனவே, மேற்படி வாசகங்களுடன் கூடிய சுற்றறிக்கையினை திரும்பப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்

S.தமிழ்ச்செல்வி, மாநிலத் தலைவர்

J. லெட்சுமிநாராயணன். பொதுச்செயலாளர்

10.8.23

- சேரன் வாஞ்சிநாதன்

(முக நூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு