பாலஸ்தீனம்: ஒரு வெறுப்புக் கொள்கையின் முடிவு

தி ஹிந்து

பாலஸ்தீனம்: ஒரு வெறுப்புக் கொள்கையின் முடிவு

Disclaimer: இது 2020ம் ஆண்டு வெளிவந்த தி ஹிந்து கட்டுரையின் மொழியாக்கம் என்பதுடன் இதனை செந்தளம் நிலைப்பாட்டில் இருந்து விமர்சனத்துடன் வாசிக்குமாறு கோருகிறோம்

டிரம்பின் "நூற்றாண்டின் ஒப்பந்தம்", இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை தீர்க்கும் என்று அவர் கூறியிருந்தார், 2020ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது. "செழிப்பிற்கான அமைதி: பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு பார்வை" என்று பிரமாண்டமாக தலைப்பிடப்பட்டுள்ளது, திட்டத்தின் கூறப்பட்ட இலக்கு "பாலஸ்தீன மக்களின் பொருளாதார திறனை ஊக்குவிப்பதாகும்". ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் 50 பில்லியன் டாலர் நிதியளிப்பதாக உறுதியளித்தது டிரம்ப் அரசு. அதற்கான நிதி பெரும்பாலும் பணக்கார வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க தனியார் நிறுவனங்களில் இருந்து திரட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம், நிதிகளுடன் அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், காசாவில் ஒரு புதிய துறைமுகம் போன்ற பொருளாதாரத் திட்டங்களையும் உள்ளடக்கியது. ஒஸ்லோ உடன்படிக்கை உட்பட அனைத்து முந்தைய அமெரிக்க அமைதி முயற்சிகளும், பாலஸ்தீனியர்களுக்கு மாநில அந்தஸ்து மற்றும் பொருளாதார செல்வத்தை உறுதி செய்தன.

ஆனால், இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானதாக உள்ளதோடு முழு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையின் பெரும்பகுதியை இஸ்ரேலுக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எந்தவொரு இறையாண்மையும் இல்லாத "பாலஸ்தீன அரசு" என்று அழைக்கப்படுவதை இத்திட்டம் அறிவுறுத்துகிறது. இஸ்ரேல் மேற்குக் கரையில் ஆக்கிரமித்த அனைத்து நிலங்களையும் வைத்திருக்கவும், அதன் குடியிருப்புகளை மேலும் விரிவுபடுத்தவும், ஜோர்டான் பள்ளத்தாக்கின் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். ஜோர்டான் நதியிலிருந்து கடல் வரையிலான யூத அரசை நிறுவுவது நீண்டகால ஜியோனிச இலக்காகும். டிரம்ப் மற்றும் கூட்டாளிகள் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் இன மேன்மைவாத கனவை நனவாக்க உதவுகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ், இஸ்ரேலியக் குடியேற்றங்களைக் கொண்ட பாலஸ்தீனிய அரசு, எந்த அரபு நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டிருக்காது. இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் 90 சதவீத பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேலுடையதாக பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். "நூற்றாண்டின் ஒப்பந்தம்", அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு "திரும்புவதற்கான உரிமையை" மறுக்கிறது. அவர்களில் பலர் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலை "யூத நாடாக" அங்கீகரிக்க வேண்டும் என்றும் திட்டம் கோருகிறது.

மேற்குக் கரையின் எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட சுமார் 3,50,000 பாலஸ்தீனியர்களை விரட்டியடித்து அவர்களின் நிலத்தை யூதக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்க "மக்கள்தொகை இடமாற்றம்" பற்றி இத்திட்டம் பேசுகிறது. இத்தகைய யோசனை பல இஸ்ரேலிய அரசுகளால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் பாலஸ்தீனிய உறுப்பினர் அய்மன் ஓடே, டிரம்பின் அறிவிப்பு "வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான ஏற்பாடு" என்று ட்வீட் செய்துள்ளார். டிரம்ப் அரசு சமாதானத் திட்டத்தின் பெயரில் இஸ்ரேலிய அரசின் இனவெறிக் கொள்கைகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் வழங்க முயல்கிறது. இதனால் இந்த காலனியாதிக்கத் திட்டத்தை பாலஸ்தீனியர்கள் "வெறுப்பு திட்டம்" என்கின்றனர்.

உதாசீனப்படுத்தப்பட்ட காயம்

பாலஸ்தீன அதிகார சபை (PA) பயங்கரவாதத்தை "தீவிரமாக எதிர்த்துப் போராடுகிறது" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் திருப்தி அடைந்த பிறகும்கூட ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்ட பாலஸ்தீன ஆட்சி பகுதிகள் கடுமையாக வெட்டப்பட்டது. பாலஸ்தீனியர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும், ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களை நிராயுதபாணியாக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்புகின்றன. இத்தகைய நடவடிக்கை பாலஸ்தீனியர்களிடையே உள்நாட்டுப் போரைத் தூண்டக் கூடும். உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கும் அந்நியர்களுக்கு எதிராக சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதற்கான உரிமையை ஐ.நா வழங்கியுள்ளது.

திட்டத்தை வெளியிடுவதற்கு முன், ஐ.நா.வுக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானன், நியூயார்க் டைம்ஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையில், "பாலஸ்தீனியர்கள் "தேசிய தற்கொலை" செய்தால் எந்தத் தவறும் இல்லை, அது சமாதானத்தைக் கொண்டுவரும், ஏனெனில் "சரணடைதல் என்பது அங்கீகாரம். ஏற்கனவே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ், உழைக்கும் வயதுடைய பாலஸ்தீனியர்களில் 31 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளனர் மற்றும் 29 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்" என்றார்.

இத்திட்டத்தை உருவாக்கும் போது பாலஸ்தீனியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், தொடக்கத்திலிருந்தே டிரம்ப் நிர்வாகத்தால் அவர்கள் அவமதிக்கப்பட்டனர். இஸ்ரேலின் "பிரிக்கப்படாத தலைநகராக" ஜெருசலேமை அங்கீகரிப்பதில் திடீர் நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து, அதன் தூதரகத்தை அங்கு மாற்றியது. பாலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் வேலை முகமைக்கான நிதியை இடைநிறுத்துவதன் மூலம், காசா மற்றும் மேற்குக் கரையில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் அது நிறுத்தியது. வாஷிங்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகமும் மூடப்பட்டது.

"அமைதி திட்டம்" என்று அழைக்கப்படுவதை உருவாக்கியவர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆவார், அவர் உறுதியான சியோனிஸ்டுகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நெதன்யாகு மற்றும் அவரது வலதுசாரி லிகுட் கட்சியின் நெருங்கிய நண்பரும் ஆதரவாளரும் ஆவார். கல்வியாளரும் பிராந்தியத்தின் நிபுணருமான ஜுவான் கோல்  "குஷ்னர் அடிப்படையில் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய நிலத்தில் ஒரு இஸ்ரேலிய குடியேற்றக்காரர், எனவே பாலஸ்தீனியர்களுக்கான அவரது திட்டம் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் தொடர வேண்டும் என்பதாகும். மேற்குக் கரையில் உள்ள அவர்களது நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இஸ்ரேலுக்கு வழங்கப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

'நூற்றாண்டின் நகைச்சுவை'

PA தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ட்ரம்பின் "நூற்றாண்டிற்கான ஒப்பந்தத்தை" "நூற்றாண்டின் நகைச்சுவை" என்று நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. பிப்ரவரி 1 அன்று கெய்ரோவில் அரபு லீக்கின் அவசரக் கூட்டத்தில் தனது வேண்டுகோளின் பேரில் பேசிய ஜனாதிபதி அப்பாஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான "பாதுகாப்பு உறவுகள்" உட்பட அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும் ட்ரம்பின் அமைதி திட்டத்தை "முற்றிலும் நிராகரிப்பதாகவும்" அறிவித்தார். மேற்குக் கரையில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் PA நீண்டகாலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருகிறது. PA அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்துடன் பாதுகாப்பு-பகிர்வு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது. ட்ரம்புடன் தன்னுடன் தொலைபேசியில் பேசவோ கடிதத்தைப் பெறவோ மறுத்துவிட்டதாக அப்பாஸ் கூறினார். அமைதித் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் தன்னிடம் கூற அமெரிக்கா விரும்பவில்லை என்றார். இந்த வழக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா நிச்சயமாக வீட்டோ செய்யும்,  அத்தகைய நடவடிக்கை பாலஸ்தீனியர்கள் தங்கள் வழக்கை ஐ.நா. வுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பளிக்கும். அங்கு அவர்களுக்கு பெரும் ஆதரவு இருந்தும் கூட ஐநாவுக்கு வழக்கை கொண்டு செல்லக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால் பாலஸ்தீனியர்களுக்கு இப்போது போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் "அமெரிக்காவின் நூற்றாண்டு ஒப்பந்தத்தை" நிராகரித்து, அது பாலஸ்தீன மக்களின் குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் பரிசீலனைகளை கூட பூர்த்தி செய்யவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒத்துழைக்க மாட்டோம் என்று அரபு நாடுகள் ஒப்புக்கொண்டன. 1967 போருக்கு முன்னர் எல்லை அடிப்படையில் இருதேசக் கொள்கையை வலியுறுத்தி, கிழக்கு ஜெருசலேம் சுதந்திரமான பாலஸ்தீனத்தின் தலைநகராக இருக்க வேண்டும் என்று கோரின. அந்தப் போருக்குப் பிறகு மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 242 இஸ்ரேல் அதன் 1967 எல்லைகளுக்கு திரும்ப வேண்டும். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பஹ்ரைன் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முன்னணி உறுப்பினர்கள், டிரம்பின் திட்டத்தை மறைமுகமாக ஆதரித்ததை போன்றதொரு உணர்வை ஆரம்பத்தில் கொடுத்தனர். ஓமன், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெள்ளை மாளிகை விழாவில் கலந்து கொண்டன. அங்கு டிரம்ப், நெதன்யாகுவுடன் நின்று அதை அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனிய நாட்டின் தலைநகராக இருக்கும் என்ற தவறான தகவலை தவிர திட்டத்தின் முழு விவரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று மூன்று நாடுகளும் தற்போது கூறுகிறார்கள். 

திட்டம் பகிரங்கப்படுத்தப்பட்டபோது டிரம்ப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார், இஸ்ரேலிய பிரதமர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார். வரும் தேர்தலில் வாக்குகளை தக்கவைக்க டிரம்ப் விரும்புகிறார். பாலஸ்தீனியர்களை நசுக்குவதற்கு இந்த செல்வாக்குமிக்க பிரிவு இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் வலதுசாரி அரசியலுக்கு தாராளமாக நிதியளிக்கும் பில்லியனர் ஷெல்டன் அடெல்சன் போன்ற அமெரிக்க ஜியோனிஸ்டுகளின் முழு ஆதரவையும் டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்பின் அந்த அறிவிப்பு நெதன்யாகுவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதுவரை உதவவில்லை. மார்ச் தேர்தலில் நெதன்யாகுவை தோற்கடிக்க போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரான பென்னி காண்ட்ஸையும் தனது திட்டத்தை வெளியிடுவதற்காக வாஷிங்டனுக்கு டிரம்ப் அழைத்திருந்தார்.

ட்ரம்பின் முன்முயற்சியைப் பாராட்டுவதாகவும், "அமெரிக்கப் பார்வையை கவனமாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும்" என்றும் எகிப்து ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியது. ஜனாதிபதி டிரம்ப் தனது திட்டத்திற்கு பல உலக தலைவர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றதாக பெருமையாகக் கூறினார். ஆனால் பிரிட்டன் போன்ற அதன்ஷநெருங்கிய கூட்டாளிகள் கூட திட்டத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி இப்போது சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், "மேற்குக் கரையை இஸ்ரேல் இணைக்கும் முயற்சிகள் பற்றிய அறிக்கைகளால் தனது நாடு கவலை கொண்டுள்ளது" என்று கூறினார். அத்தகைய நடவடிக்கை "பேச்சுவார்த்தைகளை மறுதொடக்கம் செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு சேதம் விளைவிக்கும், மேலும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்றும் அவர் கூறினார்.

ஜிம்மி கார்டரின் அறிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், டிரம்பின் திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்று பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை தடுக்க ஐ.நா.வை வலியுறுத்தினார். "புதிய அமெரிக்க திட்டம் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு நியாயமான சமாதானத்திற்கான வாய்ப்புகளை குறைக்கிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார். "இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த பிரச்சனைக்கு ஒரே சாத்தியமான தீர்வான இரு தேச தீர்வை புறந்தள்ளும்." டிரம்ப் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் மேலும் பாலஸ்தீன நிலங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அமெரிக்காவின் திட்டத்திற்கு பொதுவாக ஆதரவாக இருப்பதற்காக சில அரபு நாடுகளின் பெயரை குறிப்பிடாமல் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார். "அத்தகைய திட்டத்தை ஆதரிக்கும் சில அரபு நாடுகள் ஜெருசலேமுக்கு எதிராகவும், தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும், மேலும் முக்கியமாக அனைத்து மனிதகுலத்திற்கும் எதிராக தேசத்துரோகத்தை செய்கின்றன," என்று அவர் ஒரு உரையில் கூறினார். "ஜெருசலேமை முழுவதுமாக அபகரிக்கும் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை." "ஒரு முரட்டு அரசான" இஸ்ரேலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலிய பத்திரிகையாளர் கிடியோன் லெவியின் கூற்றுப்படி, நூற்றாண்டின் ஒப்பந்தம் "தீமையை செழிக்க வைக்கிறது. ஒரு தலைப்பட்சம், இனவெறி மற்றும் ஆணவத்தை மீண்டும் இந்த முறையும் உறுதிப்படுத்துகிறது". இஸ்ரேலிய நாளிதழான Haaretz இல் எழுதிய லெவி, பாலஸ்தீனியர்கள் பெறக்கூடிய அனைத்தும் "பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சுதந்திர அரசு என்பதையே  கேலிச்சித்திரமாக்கும். அதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டேன்”.

மேற்குக்கரை மற்றும் காசா முழுவதும் பாலஸ்தீனியர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் துப்பாக்கிச் சூடு மற்றும் விமானத் தாக்குதல்கள் ஏற்கனவே காசாவில் போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளன. இந்த போராட்டம் அரபு உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பெரும் போராட்டங்கள் வெடித்தன.

ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. நவம்பர் தேர்தலில் டிரம்பை எதிர்கொள்ளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருக்கக்கூடிய பெர்னி சாண்டர்ஸ், எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் "சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும்" என்று கூறினார். மற்றொரு ஜனநாயகக் கட்சியினரான எலிசபெத் வாரன், ட்ரம்பின் சமாதானத் திட்டம் "இணைப்புக்கான ரப்பர் ஸ்டாம்ப் என்றும், உண்மையான பாலஸ்தீன அரசுக்கு வாய்ப்பில்லை" என்றும் கூறினார்.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://frontline.thehindu.com/world-affairs/article30800372.ece