இஸ்ரேலுக்கு 20000 தொழிலாளர்கள் ஏற்றுமதி: சீனாவின் நடுநிலை வேஷம் கலைந்தது

ராய்ட்டர்ஸ்

இஸ்ரேலுக்கு 20000 தொழிலாளர்கள் ஏற்றுமதி: சீனாவின் நடுநிலை வேஷம் கலைந்தது

இஸ்ரேல்-ஈரான் மோதல்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது சீனா.

அக்டோபர் 1ல் ஏற்பட்ட இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றமான சூழலில் சிக்கியுள்ள அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் செயல்படவும், பதற்றநிலையை அதிகரிக்காமல் தவிர்க்கவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கோரியுள்ளார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுடனான தொலைபேசி உரையாடலில், லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப் படையினரின் (UNIFIL) பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் இஸ்ரேலை வலியுறுத்தினார்.

காசா மோதல்களில், உடனடி மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தம் என்ற சீனாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய அமைச்சர் காட்ஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதில் ஈரான் முன்னிலை வகிப்பதாககவும், அது ஹமாஸ், ஹெஸ்புல்லா போன்ற அதன் பினாமி அமைப்புகள் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும்" பேசினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் சீனத் தொழிலாளர்கள் சுமார் 20000 பேர்  போரின்போதும் கூட இஸ்ரேலின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாலும், "போரில் சீனா நடுநிலையான - நியாயமான நிலைப்பாட்டையே முன்வைக்கும்" என்று தான் எதிர்பார்த்ததாக காட்ஸ் கூறினார்.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.reuters.com/world/middle-east/china-urges-caution-israel-iran-tensions-calls-ceasefire-2024-10-14/