இஸ்ரேல் - இந்திய வர்த்தக உறவுகள்

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தயாரிப்புகள்: இஸ்ரேலிய பிராண்டுகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம்!! - சுமித் அரோரா

இஸ்ரேல் - இந்திய வர்த்தக உறவுகள்

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தயாரிப்புகள்

இந்தியாவும் இஸ்ரேலும், பலதரப்பட்ட கலாச்சார வரலாற்றை கொண்டவை; மேலும் பல ஆண்டுகளாக இராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றன. அந்த உறவுகள் அரசியல் மற்றும் இராஜதந்திரத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டும், வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளன.

வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்ட வருங்காலத் துறைகளில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலுள்ள முக்கியமான கூட்டுறவுகளை பற்றி மட்டும் இந்த கட்டுரையில் ஆராய்வோம். சர்வதேச உறவுகள் மற்றும் வணிகத் துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த ஆய்வு மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.

இஸ்ரேல் வர்த்தக உறவுகள்

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக கூட்டுறவு செழித்து அவை இரு நாடுகளுக்கும் சாதகமாக்கப்பட்டுள்ளன. இந்தியா முக்கியமாக முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், இரசாயன மற்றும் கனிம பொருட்கள், இயந்திரங்கள், மின் உபகரணங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம், இந்தியா இஸ்ரேலில் இருந்து இயந்திரங்கள், மின் சாதனங்கள், அடிப்படை உலோகங்கள், பாதுகாப்பு தொடர்பான உபகரணங்கள், இயந்திரங்கள், போக்குவரத்து உபகரணங்கள்,  இரசாயன மற்றும் கனிம பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தகங்கள் இரு நாடுகளுக்குமிடையே அதிகரித்து வரும் பொருளாதார உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேலிய தயாரிப்புகளின் பட்டியல்

மேக்ஸ் பிரென்னர் (Max Brenner),  புகழ்பெற்ற சாக்லேட் நிறுவனம், இஸ்ரேலிய பங்குதாரர்களான மேக்ஸ் ஃபிக்ட்மேன் (Max Fichtman) மற்றும் ஓடெட் பிரென்னர் (Oded Brenner) ஆகியோரால் நிறுவப்பட்டது. நியூயார்க்கில் தலைமையகம் இருந்தாலும், நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலின் ரானானாவில் தோற்றுவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, மேக்ஸ் பிரென்னர் ஆஸ்திரேலியாவில் செல்வாக்கு பெற்றதோடு உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பாளரான லேலைன் (Laline), டெல்-அவிவ்வில் ஒரு சிறிய கடையாகத் தொடங்கப்பட்டது,  பின்னர் நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட கடைகளை நிறுவி, அதன் தயாரிப்புகளை உலகளவில் விநியோகித்து, பரந்த அளவில் வளர்ந்துள்ளது.

ஹீப்ரு மொழியில், சோப்பு "சபோன்" என்று குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேல் இந்த தயாரிப்புகளை "சபோன் ஷெல் பாம்" என்ற பிராண்டின் கீழ் தொடர்ந்து சந்தைப்படுத்துகிறது, இது "பாரம்பரிய சோப்பு" என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. 

அந்நிறுவனம் உப்பு மற்றும் பாசி போன்ற உயர்தர இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறது, இவை அனைத்தும் சாக்கடலில் இருந்து பெறப்படுகின்றன, மேலும் அவற்றின் அனைத்து தயாரிப்புகளும் இஸ்ரேலிலேயே இன்னும் தயாரிக்கப்படுகின்றன.

மைக்கேல் நெக்ரின் (Michal Negrin), நகை நிறுவனம், நாடு முழுவதும் 65க்கும் மேற்பட்ட கடைகளில் நேர்த்தியான விலையுயர்ந்த நகைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்களை விற்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, நச்லட் பின்யாமினிலுள்ள மார்க்கெட்டில் கைவினை பொருள் விற்பனை  கடையாகத் தொடங்கப்பட்டது.

தடிமனான தோலுக்கும், விதையற்ற தன்மைக்கும் பெயர் பெற்ற ஜஃபா ஆரஞ்சு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யக்கூடிய தரத்திலானது. பிற மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்தாலும், இஸ்ரேல்  ஜஃபா ஆரஞ்சுகளின் ஏற்றுமதி (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு) முக்கிய பங்கை வகிக்கிறது.

டேனியல்லா லெஹாவி (Daniella Lehavi), தோல் காலணிகள், கைப்பைகள் உள்ளிட்ட உயர்தர பொருட்களின் வடிவமைப்பாளர், இவை அனைத்தும் இஸ்ரேலில் பெருமையான தயாரிப்புகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. 1990 இல் அவர் தனது முதல் ஸ்டுடியோவைத் திறந்ததிலிருந்து, அமெரிக்கா, கனடா மற்றும் கொரியா போன்ற நாடுகளுக்கும் தனது அடையாளத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய பிராண்ட் பட்டியல் - 2023

உடல்நலம், மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள்

  • சூப்பர் பார்ம்
  • தேவா பார்மாசூட்டிகல்ஸ்
  • கார்டியாக்சென்ஸ் லிமிடெட்
  • தேவா ஆக்டிவ் பார்மாசூட்டிக்கல் இன்கிரிடியன்ட்ஸ்

உணவு & பால் பொருட்கள்

  • டைம் (சிகரெட்)
  • டிவ் டாம்
  • ட்னுவா
  • ஓட்கா பெர்பெக்ட்
  • விஸ்சோட்ஸ்கி டீ
  • ஏஞ்சல் பேக்கரிஸ்
  • பாம்பா (சிற்றுண்டி)
  • பெர்மன் பேக்கரி
  • பிஸ்லி (இஸ்ரேலிய கோதுமை சிற்றுண்டி)
  • கார்மல் அக்ரெக்ஸ்கோ
  • கார்மல் ஒயினெரி
  • கவ் சாக்லேட்
  • ஐன் கெடி மினரல் வாட்டர்
  • கலிலி கிரீன்
  • கிளிக் (மிட்டாய்)
  • கிரெம்போ
  • எல்'சைம் வோட்கா
  • லேண்ட்வர் காபி
  • லோன் ட்ரீ ப்ரூவரி
  • மேக்டேவிட்
  • மேக்ஸ் ப்ரென்னர்
  • மெய் ஈடன்
  • நெவியோட் (ஸ்பிரிங் வாட்டர்)
  • நோபிலெஸ்ஸி (சிகரெட்)
  • ஓசெம் (கம்பெனி)
  • ரப்ல் (கம்பெனி)
  • ஸ்ட்ராஸ் க்ரூப்
  • தாரா (இஸ்ரேல்)
  • டெம்போ பீர் இண்டஸ்ட்ரீஸ்

ஆடை & ஃபேஷன் பொருட்கள்

  • கோட்டெக்ஸ் (நீச்சலுடை வடிவமைப்பாளர்)
  • ஹானிக்மேன்
  • கென்வெலோ
  • நாட் (காலணிகள், செருப்புகள்)
  • சோர்ஸ் சான்டல்ஸ் (டெக்கிங், ஹைகிங் செருப்புகள்)
  • எலி தஹாரி
  • டிஎன்டி (ஆடை)
  • சொமெட் பார்ம்
  • ஒய்வெல் (நெக்லஸ்கள், மோதிரங்கள், காதணிகள், வளையல்கள்)
  • லீபிஷ் & கோ (இயற்கை வைரங்கள் பொதித்த ஆடம்பர நகைகள்)
  • காசிடி
  • காஸ்ட்ரோ
  • ஃபாக்ஸ் (ஆடை)

முன்னணி இஸ்ரேலிய நிறுவனங்கள்

இந்தியாவில் செயல்படும் இஸ்ரேலிய நிறுவனங்களின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வாட்டர்ஜென், இஸ்ரேலிய நிறுவனமானது, வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள் (AWG) என அழைக்கப்படும் காற்றில் இருந்து குடிநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. அவர்களின் GEN-L மாடல் தினசரி 6,000 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மொபைல் பாக்ஸ் எனும் மற்றொரு மாடல், காற்றில் இருந்து 25 லிட்டர் வரை சுத்தமான குடிநீரை தயாரிக்க கூடியது.
  • மிகப்பெரிய இஸ்ரேலிய மருந்து நிறுவனமான Teva Pharmaceutical Industries Ltd. இன் அங்கமாகிய தேவா (Teva) இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மையமான ஒயிட்ஃபீல்டுக்கு அருகில் அமைந்துள்ளது.
  • சொகுசு ஹோட்டல் குழுமமான டான் ஹோட்டலும் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
  • தொழில்முறை மொழிபெயர்ப்பு, தரக்கட்டுப்பாடு சேவைகளை வழங்கும் நன்கு அறியப்பட்ட நிறுவனமான நெட் டிரான்ஸ்லேட்டர்ஸ் (Net-Translators), சமீபத்தில் குருகிராமில் ஒரு புதிய கிளையைத் துவக்கியது.
  • சரைன் (Sarine), ரத்தினக் கற்கள், வைரங்களை தயாரிக்கும் மேம்பட்ட உபகரணங்களின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
  • மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும்  ஸ்பின் மெல்ட் அல்லாத நூற்பு துணிகளை தயாரிப்பதில்  முன்னணியில் இருக்கும் அவகோல் நான்-ஓவன்ஸ் (Avgol Nonwovens) நிறுவனம், போபாலின் மண்டிதீப்பில் அதன் உற்பத்தி தளத்தைக் கொண்டுள்ளது.
  • மின்னணு பெருக்கிகள், டிஜிட்டல் எலக்ட்ரானிக் அளவுகள் மற்றும் எலக்ட்ரான் குழாய்களை பெரிய அளவில் தயாரித்து விநியோகிக்கும் நியோலிங்க் (NeoLync) நிறுவனம், இந்தியாவில் இயங்கி வருகிறது.
  • உலகளவில் நுண்ணீர் பாசன தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் ரிவுலிஸ் (Rivulis), சொட்டு நீர் பாசன முறைகளை வழங்குவதற்காக ரிவுலிஸ் இரிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்டை இந்தியாவில் நிறுவியுள்ளது.

இஸ்ரேல் பிராண்டுகளின் முக்கியத்துவம்

முன்னேறிய தொழில்நுட்பங்களுக்காக இஸ்ரேல் "ஸ்டார்ட்-அப் நேஷன்" என்ற பெயரைப் பெற்றுள்ளது. சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள் மற்றும் பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களை அது உருவாக்கியுள்ளது. இந்த இஸ்ரேலிய நிறுவனங்கள் தத்தமது தொழில்களை மட்டும் மேம்படுத்திக் கொள்ளாமல், உலகளாவிய பெரிய நிறுவனங்களுடன் கூட்டை உருவாக்கியும் சிலவற்றை  கையகப்படுத்தியும் வளர்ந்துள்ளன. 

இஸ்ரேலின் பொருளாதாரம்

இஸ்ரேலின் பொருளாதார அணுகுமுறையானது தேசியப் பொருளாதாரத்தை உலகச் சந்தைகளில் படிப்படியாக இணைத்து வளர்ச்சியைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான மக்கள்தொகை பெருக்கம், பெரும்பான்மையான அரபு நாடுகளின் புறக்கணிப்பு, அதிகமான பாதுகாப்புச் செலவுகள், இயற்கை வளங்களின் பற்றாக்குறை, உயர்ந்த பணவீக்க விகிதம் மற்றும் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தி போன்ற சவால்களை எதிர்கொண்ட போதிலும், இஸ்ரேல் அதன் நோக்கங்களை அடைவதில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

ஆனால், பொருளாதார முன்னேற்றம் சீராக இல்லை. இஸ்ரேலிய யூதர்களுக்குள்ளும் இஸ்ரேலிய அரேபியர்களுக்குள்ளும் அவர்களுக்கிடையிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பாரதூரமானவை. இஸ்ரேலிய அரேபியர்கள் பொருளாதார படிநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளனர்.

அந்நிய நேரடி முதலீடு (FDI)

இஸ்ரேல் இந்தியாவில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இருப்பினும் அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் பார்த்தால் அது ஒரு சிறிய பங்களிப்பாளராகவே உள்ளது. இந்தியாவில் முக்கிய இஸ்ரேலிய நிறுவனங்களான Avgol Nonwovens, Teva Pharmaceutical Industries Limited உள்ளிட்ட பிற நிறுவனங்களின் இருப்புதான் பொருளாதார கூட்டுறவுக்கு பங்களித்துள்ளது.

இந்தியாவில் இஸ்ரேலிய உணவுப் பொருட்கள்

இஸ்ரேலிய நிறுவனங்களின் இருப்பு இந்திய சந்தையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. Alumayer, Plasson, Huliot, Metzerplas, IDE, Netafim, Naa'n Dan Jain, Rivulis, NeoLynk, Ecoppia, Aqwise, Polemix, Eli Hajaj, and Avgol Nonwovens உள்ளிட்ட பல புகழ்பெற்ற இஸ்ரேலிய பிராண்டுகளின் தயாரிப்பை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் கணிசமான பங்கை கொண்டுள்ளதோடு மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் முக்கிய இருப்பை நிலைநிறுத்தியுள்ளன. அங்கு Teva Pharmaceutical Industries Limited மற்றும் Avgol ஆகியவை தங்கள் செயல்பாடுகளை கொண்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் இஸ்ரேலிய வணிகங்கள்

Teva Pharmaceutical Industries Limited மற்றும் Avgol என்ற இரண்டு இஸ்ரேலிய நிறுவனங்கள், மத்தியப் பிரதேசத்தில் தங்கள் இருப்பை விரிவுபடுத்தி, அப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன. ஸ்டார்ட்அப் பிசினஸ்களின் எண்ணிக்கையில் உலகளவில் இஸ்ரேல் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உள்ளது. மேலும், NASDAQ-ன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் படி சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து, இஸ்ரேல்  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒத்துழைப்புக்கு சாத்தியமான துறைகள்

இந்தியாவும் இஸ்ரேலும் ஒத்துழைப்பதற்கான சாத்தியமுள்ள பல துறைகளை அடையாளம் கண்டுள்ளன:

  • பாதுகாப்பு: இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பலப்படுத்துகிறது.
  • வேளாண் நுட்பம்: விவசாய தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பதன் மூலம் இரு நாடுகளும் பயனடையலாம், துல்லியமான விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நிலையான விவசாயம் போன்ற துறைகளில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.
  • உணவு பதப்படுத்துதல்: உணவு பதப்படுத்துதலில் கூட்டு முயற்சிகள் இந்தியாவில் உணவு உற்பத்தியின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தி, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும்.
  • எலக்ட்ரானிக்ஸ்: எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒத்துழைப்பு புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், மேலும் இரு நாடுகளிலும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும்.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://currentaffairs.adda247.com/israel-brands-in-india-list/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு