“நூரம்பர்க்” குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் இந்துக்களையும் உள்நாட்டு அகதிகளாக்கி படுகொலை செய்யும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலைக் கருவறுப்போம்!!

சமரன்

“நூரம்பர்க்” குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் இந்துக்களையும் உள்நாட்டு அகதிகளாக்கி படுகொலை செய்யும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலைக் கருவறுப்போம்!!
நூரம்பர்க்குடியுரிமைச் சட்டங்களை ஏவி இசுலாமியர்களையும் இந்துக்களையும் உள்நாட்டு அகதிகளாக்கி படுகொலை செய்யும் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலைக் கருவறுப்போம்!!
இந்துத்துவ பாசிச மோடி கும்பல் இஸ்லாமியர்களையும் ஒடுக்கப்பட்ட இந்துக்களையும் நாடற்றவர்களாக மாற்றி இந்துநாட்டை உருவாக்கும் தனது இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக இரண்டு பாசிச சட்டங்களை இந்திய மக்கள் மீது ஏவியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act-2019) மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டம் (National Registers of Citizens Act) எனப்படும் இந்த பாசிச சட்டங்கள் இந்து ராஜ்ஜியத்தையும் அதன் மூலம் ஏகாதிபத்திய புதிய காலனிய சாம்ராஜ்ஜியத்தையும் சட்டபூர்வமாக அமைப்பதற்கான எதிர்ப் புரட்சிகர சட்டங்களாக திகழ்கின்றன. இச்சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவிக் காடையர்கள் இராணுவ உடையில் மக்களின் இரத்தத்தைக் குடிக்கின்றனர். பிணந்திண்ணிக் கழுகுகளான மோடி-அமித்ஷா  கும்பல் போராடிவரும் மாணவர்களையும், பெண்களையும் சுட்டுத் தள்ளுகிறது.அடக்குமுறைகளை மீறி அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் கிளர்ச்சி வடிவத்தை எட்டியுள்ளன. தமிழகம் முழுவதும் மாணவர்கள்-இளைஞர்கள் வீறுகொண்டு போராடிவருகின்றனர். இந்திய மக்கள் மீது ஓர் மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை திணித்துள்ளது பாசிச மோடி கும்பல்.
இந்து ராஜ்ஜியத்தை நிறுவும் குடியுரிமை சட்டம்
1955 குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை என்பதை அனுமதிக்கிறது. இச்சட்டத்தைத் திருத்தி மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மோடி-அமித்ஷா காட்டுமிராண்டி கும்பல். இது இவர்களின் அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அரசு மதமாக உள்ள இஸ்லாமிய மதத்தால் ஒடுக்கப்படும் இந்துக்கள், பார்சிகள், சமணர்கள் (ஜைனர்கள்), பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்தவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தஞ்சம் அடைவதாகவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும், இஸ்லாமியர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகளாக இங்கு வருவதை தடுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். பண்டார பரதேசிக் கூட்டம் பிதற்றுகிறது.
ஆனால் பாகிஸ்தானில் இந்துக்களை விட அதிகமாக ஒடுக்கப்பட்டு இந்தியாவிற்கு வரும் இலட்சக்கணக்கான அஹமதியாஇஸ்லாமியர்களுக்கும், மியான்மர் அரசின் பவுத்த பாசிசத்தால் ஒடுக்கப்படும் ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கும், பூடான் கிறித்தவர்களுக்கும், சிங்கள பவுத்த பேரினவாத பாசிசத்தால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கும், வங்கதேச இஸ்லாமியர்களுக்கும், ஆப்கானின் ஷியா இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிச சட்டங்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக பண்டாரங்கள் நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டன. குடியுரிமைச் சட்டத்தின் நடைமுறை வடிவமே தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டமாகும்.
குடியுரிமைச் சட்டம் இசுலாமிய மதத்தால் ஒடுக்கப்பட்டவர்களை பற்றி மட்டுமே பேசுவதால் இது இசுலாமிய எதிர்ப்பையும், இந்து மதம் மற்றும் அதன் நட்பு மதங்களையும் உள்ளடக்கிய இந்து நாட்டை அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. அதுவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளை மட்டுமே இணைத்து, பவுத்த பாசிச இலங்கை-மியான்மர் நாடுகள் மற்றும் நேபாள இந்து மதவெறி நாடுகளை இணைக்காமல் விட்டது என்பது அப்பட்டமாக இந்து மதவெறி தேசத்தை அமைப்பதற்கான சட்டமாக இவை விளங்குவதோடு, அந்நாடுகளின் இந்து மதம் மற்றும் பவுத்த மத பாசிசத்தையும் ஆதரிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்து மதம், பவுத்த மதம் மற்றும் இஸ்லாம் மதம் போன்றவை தமது சொந்த மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினரை ஒடுக்குவதை இந்துத்துவ கோட்பாட்டின்படி ஆதரிக்கிறது.
எனவே, இச்சட்டங்கள் அப்பட்டமாக இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவதோடு, இந்து மதம் மற்றும் பவுத்த மத பாசிசத்தால் ஒடுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும், ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கும் (அதாவது ஆர்.எஸ்.எஸ் மொழியில் இந்துக்களுக்கும்) எதிரானதாக விளங்கி அவர்களையும் உள்நாட்டு அகதிகளாக மாற்றும் இந்து ராஜ்ஜிய சட்டங்களாகும்.
இச்சட்டங்கள் யூதர்களுக்கு குடியுரிமை மறுத்து நாடற்றவர்களாக மாற்றி இனச் சுத்திகரிப்பு செய்த நூரம்பார்க் சட்டங்களுக்கு இணையான பாசிச சட்டங்களாகும். ஜெர்மனியின் தூய ஆரிய இனவாத பாசிசத்திலிருந்து இந்துத்துவம்பிறந்ததை போலவே, மோடியின் குடியுரிமைச் சட்டங்களும் ஹிட்லரின் நூரம்பர்க் சட்டங்களிலிருந்தே பிறந்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்தின் நடைமுறை வடிவமே பதிவேடுகள் சட்டம்
குடியுரிமைச் சட்ட திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடுகள் சட்டம் இரண்டும் பிரித்து பார்க்க முடியாததாகவும் பிரிக்கக் கூடாததாகவும் உள்ளன. இன்னும் சொல்வதெனில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு பதிவேடுகள் சட்டம் சேவை செய்கிறது. அதற்கு நடைமுறை வடிவம் தருகிறது.
பதிவேடுகள் சட்டம் அசாம் மாநிலத்திற்கு மட்டும் என முதலில் சொல்லிவிட்டு தற்போது இந்தியா முழுவதும் அமல்படுத்தவுள்ளதாக மோடி கும்பல் அறிவித்துள்ளது.
அசாமிற்கு 1971 மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு அதாவது வங்கப் பிரிவினைக்குப் பிறகு, வங்காள தேசத்திலிருந்து (பங்களாதேஷ்) சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி 1979ல் அசாமில் போராட்டம் வெடித்தது. வங்கதேசப் பிரிவினைக்கு பாசிச இந்திரா கும்பலும் சோவியத் சமூக ஏகாதிபத்திய-அமெரிக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளும் பின்புலமாக இருந்தன. 2000க்கும் மேற்பட்டவர்கள் வந்தேறிகள் என கொல்லப்பட்டனர்.
1985 ஆம் ஆண்டு ராஜீவ் அரசுடன் அசாம் மாணவர் அமைப்பு உள்ளிட்ட போராளி குழுக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. 1971 மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்கப்பட முடியாதவர்களின் பெயர்கள் குடியுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படவில்லை.
தேசிய குடியுரிமை பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி 2009 ஆம் ஆண்டில் அபிஜீத் சர்மா என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பதிவேட்டை புதுப்பிக்கும் பணியை துவங்க உத்தரவிட்டது. அதன்படி 1971 மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிற்கு முன்பு வந்தவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாதவர்கள், 1971-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்கள் இந்த தேதிக்கு முன்பே குடியேறியவர்கள் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் பட்டிலியிடப்பட்டு அகதிகளாக்கப்படவுள்ளனர். இதில் பெரும்பகுதி இசுலாமியர்களும், இந்துக்களும், அசாம் வெள்ள பாதிப்புகளால் தங்கள் அடையாளங்களை இழந்தவர்களும் அடங்குவர்.
பட்டியலில் இல்லாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றிருந்த சூழலில் தற்போது மோடி கும்பல் இதில் இந்துக்களை மட்டும் இங்கேயே அனுமதித்து இசுலாமியர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.  
1955 குடியுரிமை சட்டத்தில் புலம் பெயர்ந்து இங்கு வாழ வந்தவர்கள் 11 ஆண்டுகள்  வசித்தப் பிறகு குடியுரிமை பெறலாம் என்று இருந்ததை ஆறு ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் இசுலாமியர்கள் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது மோடி ஆட்சி. காங்கிரசு கும்பல் 1985இல் பெருந்தேசிய வெறி பாசிசத்திலிருந்து இதை அணுக, பாஜக கும்பலோ இந்துத்துவ பாசிசத்திலிருந்து அணுகுகிறது. இதனாலேயே தற்போது அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கும், மேற்கு வங்கத்திலும் கலவரங்கள் வெடித்துள்ளன.
அசாம் மாநிலம் மட்டுமன்றி எல்லா மாநிலங்களுக்கும் பதிவேடுகள் சட்டம் விரிவுபடுத்தப்படும் என்பதன் பொருள் இந்தியாவெங்கும் உள்ள இசுலாமியர்களையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களையும், சாதி, மத, இனக் கலவரங்களால் தங்களுடைய அடையாளங்களை இழந்தவர்களையும் நாடற்றவர்களாக உள்நாட்டு அகதிகளாக மாற்றும் தேசத் துரோக நடவடிக்கையாகும்.
இந்துக்களுக்கு எதிரான இந்து ராஜ்ஜியம்
இசுலாம் மதத்தால் ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்பதன் மூலம் அரசியல், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு வருபவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது; ஆனால் இந்த தேசிய இன மக்கள் சிங்கள-பௌத்த மதத்தால் ஒடுக்கப்படுவது பற்றி மூச்சு விடவில்லை மோடி ஆட்சி. எளிமையாகச் சொல்வதெனில் தேசிய இன ஒடுக்குமுறையை வெறும் மத ஒடுக்குமுறையாக - அதுவும் இசுலாம் மத ஒடுக்குமுறையாக மட்டுமே சித்தரிக்கிறது மோடி கும்பல். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற வாதத்தை, தமிழர்கள் இந்துக்களா இல்லையா என்ற வாதமாக சங்பரிவாரங்கள் திசைத் திருப்புகின்றன.
தேசிய இனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி சாதி-மத-இனக் கலவரங்களை மோடி ஆட்சி தூண்டி வருகிறது என்பதற்கு நேற்று காஷ்மீரமும், இன்று அசாமும், நடூர் சாதி தீண்டாமை படுகொலைகளும் நேரடி உதாரணங்களாகும். ஆந்திர தேசிய இனத்தை இரண்டாக உடைத்த காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு முன்னோடியாகும்.
தேசிய இனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்திய பிறகு சாதி ரீதியாக பிளவுபடுத்துவது இந்துத்துவாவின் - இந்து ராஜ்ஜியத்தின் திட்டமாகும். தமிழ் தேசிய இனம் வன்னியர் தேசம், கொங்கு தேசம், பறையர் தேசம், தேவர் தேசம் என கூறு போடப்பட்டு ஒரு கோடி பேருக்கு ஒரு மாநிலம்என்ற ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் இந்தியா நூறு சமஸ்தானங்களாக மாற்றப்படும். இந்த இந்து ராஜ்ஜியம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய இன உணர்வை பிளவுபடுத்தி திசைதிருப்புவதன் மூலம் வலுவாக ஏகாதிபத்திய புதிய காலனிய சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டு இந்நாட்டின் மூலப்பொருட்களும், இயற்கை வளங்களும், மனித உழைப்பும் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படும். இந்திய துணை கண்டம் உள்ளிட்ட காலனிய பிரதேசங்கள் மீண்டும் மத்தியகால சுரண்டலுக்கு ஆட்படவுள்ளன. அதற்காகவே சர்வதேச நிதி மூலதன சேவைச் சட்டத்தைமோடி கும்பல் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே புதிய காலனிய பொருளாதார கொள்கைகள் ஏற்படுத்திவரும் நெருக்கடியால் சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் இச்சட்டத்தால் மேலும் கடுமையாக பாதிக்கப்படும். இச்சட்டத்தின் மூலம் தங்குதடையற்ற கட்டற்ற நிதி மூலதனம் அனுமதிக்கபடுவதால் ஏற்படப்போகும் நெருக்கடிகளை எதிர்த்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும், போராட்டங்களே எழாமல் இருப்பதற்கும்தான் இந்து ராஜ்ஜியம் கட்டியமைக்கப்படுகிறது. சர்வதேச நிதி மூலதன சேவைச் சட்டத்தின் மூலம் அந்நிய நிதி மூலதனத்திற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்குகிறது.
ராம ராஜ்ஜியத்தில் ராமர் யார்? அனுமர்கள் யார்?
மோடி கும்பலின் இந்து ராஜ்ஜியம் உண்மையில் இந்துக்களுக்கான ராஜ்ஜியம் அல்ல. இந்துக்கள் மீதான ஏகாதிபத்திய - தரகு வர்க்க - நிலவுடைமை வர்க்கம் ராஜ்ஜியமாகவே அது இருக்கும். இந்துக்களின் தேசிய வெறி - மதவெறியின் மீது கட்டப்படும் இந்த ராமராஜ்ஜியத்தில் ராமர்களாக ஆட்சியில் அமரப் போவது ஏகாதிபத்தியவாதிகளே ஆவர்; அம்பானிகளும் அதானிகளும்- மூப்பனார்களும் வாண்டையார்களும் அனுமார்களாக விளங்குவார்கள். இந்த ராஜ்ஜியத்திற்குள் இஸ்லாமியர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் இடமில்லை. அவர்கள் கொத்தடிமைகளாகவும் மலிவான கூலி உழைப்பின் மூலம் மூலதனத்தைப் பெருக்கும் அத்துக் கூலிகளாகவும், கார்ப்பரேட் அடிமைகளாகவும் இருப்பர். நாடெங்கும் அசாம் மாதிரியில் வதைமுகாம்கள் உருவாக்கப்படும். இந்தியா தேசிய இனங்களின் வதைக் கூடங்களாக- கொலைக் களங்களாக மாறும். எனவே ராம ராஜ்ஜியம் என்பது எதிர்புரட்சிகர ராஜ்ஜியமாகும்.
இல்லாத ராமனுக்கு கோவில்; இருக்கிற அஹமதுக்கும் சுப்பனுக்கும் வதை முகாம்:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களின் மத உரிமையை மோடி கும்பலும் உச்சநீதிமன்றமும் பறித்து விட்டது. இஸ்லாமியர்களின் மசூதிகளும், தாஜ்மஹாலும் இந்துக்களின் கோவில்களை இடித்து கட்டப்பட்டதாக அவர்கள் நம்பினால் அனைத்து மசூதிகளையும் இடிப்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டியாக விளங்குகிறது. இந்து மதவெறி சங்பரிவார பண்டாரங்களால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களின் மத உரிமை மறுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது குடியுரிமையும் மறுக்கப்படுகின்றது. குடியுரிமைச் சட்டங்கள் அவர்களை ஏதிலிகளாக மாற்றுகிறது. கோத்ரா, குஜராத் மற்றும் அயோத்தி வகைப்பட்ட கலவரங்களால் இஸ்லாமியர்களும் சாதிக் கலவரங்களால் அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட இந்துக்களும், இனக் கலவரங்களால் அடையாளங்களை இழந்த தேசிய இன மக்களும் அகதிகளாக்கப்படுவர். இல்லாத ராமனுக்கு கோவில் கட்டும் இந்த ராமராஜ்ஜியத்தின் மூலம் உயிரோடு இருக்கும் அஹமதையும், சுப்பனையும், குப்பனையும் நாடற்றவர்களாக்கி வதை முகாம்களில் அடைத்து நூரம்பர்க்படுகொலைகளை ஓநாய் மோடி ஆட்சி நிகழ்த்தவுள்ளது.
மோடி கும்பலின் எதிர்புரட்சிகர யுத்தத்தை புரட்சிகர யுத்தத்தால்தான் முறியடிக்க முடியும்
இந்தியாவில் தேசிய இனங்களுக்கிடையிலும், ஒரு தேசிய இனத்திற்குள்ளேயும் விவசாயிகளும் தொழிலாளர்களும் புதிய காலனிய பொருளாதார கொள்கைகளாலும் கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளாலும் இடம் பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக-எழுத்தில் வடிக்க முடியாத துயரத்தில் அலைந்து திரியும் குழுக்களாக செத்து மடிகின்றனர். இந்த பாசிச சட்டங்கள் தமிழகம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களையும் மேலும் ஒடுக்குவதாக உள்ளது.
தமிழர்கள் மும்பை-கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்வதற்கும், பீகாரிகள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்வதற்கும் காரணம் மத்திய, மாநில அரசுகளின் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். இந்துக்கள் என்பதால் இவர்களின் இடப்பெயர்வுகள் நடக்கவில்லை. கூலியுழைப்பை மேலான விலைக்கு விற்பதற்கே இந்த இடப் பெயர்வுகள் நிகழ்கின்றன. இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை எதிரிகளாக பாவிப்பது பாட்டாளிவர்க்க அனுகுமுறையல்ல. தமிழர்களின் வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் புதிய காலனிய - புதிய பொருளாதார கொள்கைகளே ஒழிய பிற மாநில மக்களின் இடப் பெயர்வுகள் அல்ல.
அசாம் தேசிய இன மக்களின் வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் காரணமல்ல, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைகளே காரணம். இன்னும் சொல்வதெனில் வங்கதேச பிரிவினைக்குக் காரணமே பாசிச மத்திய அரசுதான். எனவே, பிரிவினைக்குப் பிறகு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் குடியேறியுள்ள வங்காள (பங்களாதேஷ்) தேசத்தின் இந்து, இஸ்லாம் மக்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது மட்டுமின்றி அசாம் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் மத்திய அரசின் தார்மீகக் கடமையாகும். ஆனால் அசாம் தேசிய இனத்தை மத ரீதியாக பிளவுபடுத்தி, குறுகிய தேசிய இன உணர்வையும் தூண்டிவிட்டு அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை கலவர பூமியாக்குகிறது பாசிச மோடி ஆட்சி.
ஆகவே, இந்திய துணைக் கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தும் பாசிச மத்திய அரசின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளால் ஒடுக்கப்படுகின்றன என்பதை போராடும் தேசிய இன மக்கள் உணர்ந்து ஐக்கியப்பட்டு மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராட வேண்டுமே ஒழிய தங்களுக்குள் பகைமையை வளர்த்து மாண்டுவிடக்கூடாது.
 
இந்த புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களில் இருந்து அமல்படுத்தப்படுகின்றன. அமெரிக்க - நேட்டோ மற்றும் சீன-ரஷ்ய ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்கான காலனியாதிக்கம், பனிப்போரால் முன்பை விட நெருக்கடிகள் தீவிரம் பெறுவதும், அது பாசிசத்திற்கு இட்டுச் செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டன. ஏகாதிபத்திய நிதிமூலதன முரண்பாடுகளும் நெருக்கடியும் காலனி நாடுகளை காவு கேட்கின்றன.
மெக்சிகர்கள், ஆப்பிரிக்கர்கள் மீதான அமெரிக்க பாசிசம், சிரிய அகதிகள் மீதான ரஷ்ய பாசிசம், உய்குர் முஸ்லிம்கள் மீதான சீன பாசிசம், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் பாசிசம், தமிழீழ-மலையக மக்கள் மீதான சிங்கள பாசிசம் மற்றும் இஸ்லாமியர்கள் - இந்துக்கள் மீதான இந்துத்துவ பாசிசம் அனைத்திற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களின் - காலனிய நாட்டு தரகு வர்க்க கும்பல்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே தோற்றுவாய் ஆகும்.
மெக்சிகோ சுவர் முதல் நடூர் தீண்டாமைச் சுவர் வரை, ருவாண்டா இனப்படுகொலை முதல் யூத இனப்படுகொலை வரை, சிரியா ஜார்ஜியா மீதான ருஷ்யாவின் ஆக்கிரமிப்பு முதல் ஹாங்காங் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு வரை, இஸ்லாமியர் இந்துக்கள் மீதான இந்திய பாசிசம் முதல் ஈழத் தமிழர் மீதான சிங்கள பாசிச வரை அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் அகதிகளாக்கப்படுவதற்கு காரணம் ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்க கொள்கைகளே ஆகும். ஏகாதிபத்தியத்தை சவக்குழிக்கு அனுப்பாமல் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை.
ஏகாதிபத்திய நிதிமூலதன-அதிகார தரகு வர்க்க மூலதனத்தின் நலன்களுக்கான இந்தியப் பாசிசத்தால் ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், சிறு குறு நடுத்தர தேசிய முதலாளிகள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பிற புரட்சிகர, சனநாயக சக்திகள் அனைவரையும் உள்ளடக்கி கீழிருந்து ஒருபாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும்.
உடனடி கடமையாக, இந்த நூரம்பர்க்குடியுரிமை சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராடுவது நமது கடமையாகும். ஹிட்லர் பாசிசத்தை ஸ்டாலின் தலைமையிலான சோசலிச அரசு வீழ்த்தியது. மோடி-அமித்ஷாக்களின் வடிவில் ஹிட்லர்கள் தோன்றும்போது ஸ்டாலின்கள் தோன்றுவதும் தவிர்க்க முடியாததாகும்.
இச்சட்டங்களை ஆதரித்து வாக்களித்த அதிமுக, பாமக போன்ற தமிழின துரோகி-இந்துத்துவ எடுபிடி எம்.பி.க்களை பதவி விலகக் கோரி அவர்களை முற்றுகையிடுவதும், இப்போராட்டங்களை இந்தியாவெங்கும் கட்டியமைப்பதும் அவசியமாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான முற்றுகை போராட்டங்கள் இந்த பாசிச சட்டங்களை குப்பைத் தொட்டியில் நிச்சயம் தூக்கி எறியும். மோடி கும்பலின் எதிர்புரட்சிகர யுத்தத்தை புரட்சிகர யுத்தத்தால்தான் முறியடிக்க முடியும். அதற்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மற்றும் பாரதி முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போரை நாம் முன்னெடுப்பது வரலாற்றுத் தேவையாகும். இதுவே இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவல்ல  புதிய ஜனநாயகப் புரட்சியை சாத்தியப்படுத்தும்.  
சமரன் டிசம்பர்  2019
=======================================================================================================
தேசிய இனங்களை மத ரீதியாக துண்டாடும் குடியுரிமைச் சட்டம், பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்களை முறியடிக்க ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்
இந்துத்துவ பாசிச மோடி-அமித்ஷா கும்பலின் காட்டுமிராண்டி ஆட்சியானது, குடியுரிமைச் சட்டத்தின் (CAA) நடைமுறை வடிவமான இந்தியக் குடிமகன்களின் தேசிய பதிவேடுகள் (NRIC) திட்டம் நாடெங்கும் அமல்படுத்தப்படும் என அறிவித்ததையடுத்து, இவ்விரு பாசிச ஒடுக்குமுறை திட்டங்களுக்கும் முதல் படியாக (First Step)உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டதையும் (NPR) அமல்படுத்த துவங்கிவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக உருவான திட்டத்தை முதன்முதலில் ‘சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது’ எனும் பெயரில் இசுலாமியர்களை வெளியேற்றும் ஈனத்தனமான திட்டமாக-குடியுரிமை பற்றிய திட்டமாக முன்வைத்துள்ளது மோடியின் கழிசடை ஆட்சி. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு எனும் இந்து ராஜ்ஜியம் இதோ நம் கண்முன்னே நடைமுறைக்கு வர துவங்கிவிட்டது.
நாளொரு சட்டம்-பொழுதொரு அடக்குமுறை என்று பாசிசத்தை ஏவிவரும் மோடி ஆட்சி இந்தப் புதிய காலனிய நூரம்பர்க் குடியுரிமை சட்ட-திட்டங்களை அமல்படுத்தி சட்ட பூர்வமாக ஓர் இந்து ராஜ்ஜியத்தை நிறுவ துடிக்கிறது. இதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியத்தையும்,இதற்குச் சேவை செய்யும் இந்தியா விஸ்தரிப்புவாத-அகண்ட பாரத ராஜ்ஜியதையும் மேலும் வலுவாக நங்கூரமிட்டு நிலை நிறுத்த முயல்கிறது தேசத்துரோக மோடி ஆட்சி. இதன் மூலம் உள்நாட்டு நெருக்கடி, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை மூடிமறைத்து இவற்றிற்கு காரணமான ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களை எதிர்த்த தேசவிடுதலைப் போரை திசை திருப்பிவிடலாம் என மனப்பால் குடிக்கிறது மங்குனி மோடி ஆட்சி. ‘அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி ஆட்சியை’ எதிர்த்து நாடெங்கும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி வருகின்றன.
சாதி-மத-இனப் பகைமைகளை மூட்டி பிரச்சனையை திசை திருப்பிவிடலாம் எனவும், ஆட்சியை எதிர்த்த போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் எனவும் கனவில் மூழ்கிக் கிடந்த மோடி ஆட்சியின் மீது மக்கள் காரி உமிழத் தொடங்கிவிட்டார்கள். தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், வனிகர்களும், பெண்களும் சதி-மதம்-இனம் கடந்து ஓர் வர்க்கமாக அணிதிரண்டு போராடி வருகின்றனர்.
ஜெர்மனியில் அன்று, யூதர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாஜி வதை முகாம்களில் அடைத்து ‘இனச் சுத்திகரிப்பு’ (Ethnic cleansing)எனும் பெயரில் யூத இனப்படுகொலை நிகழ்த்தியது ஹிட்லர்-கோயபல்ஸ் கும்பலின் நூரம்பர்க் குடியுரிமைச் சட்டம்; இந்தியாவில் இன்று, இசுலாமியர்களின் குடியுரிமைப் பறித்து அவர்களை நாஜி முகாம் வகைப்பட்ட முகாம்களில் அடைத்து ‘மதச் சுத்திகரிப்பு’ எனும் பெயரில் இசுலாமிய மதப் படுகொலைகளை நிகழ்த்துகிறது மோடி-அமித்ஷா கும்பலின் குடியுரிமைச் சட்டம். இதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்பதுதான் மோடி ஆட்சிக்கு அடிக்கப்பட்டுள்ள சாவுமணியாகும்.
தமிழகத்திலுள்ள கல்லூரிகளிலும், ஜாமியா, அலிகார், ஜே.என்.யு உள்ளிட்ட பல்கலைக் கழகங்களிலும், வட கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக அசாம், திரிபுராவிலும் மாணவர்களும் மாணவியர்களும் தீரமுடன் போராடி வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட போராளிகள் (இந்துக்கள் உட்பட) இந்து ராஜ்ஜிய மோடி அரசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நெஞ்சில் குண்டுகள் வாங்கி மடிந்து நாட்டின் விடுதலைப் போர் மரபையும், பகத் சிங்கின் வாரிசுகள் என்பதையும் நிரூபித்து வருகின்றனர். வீட்டு வாசலில் பெண்கள் இந்தச் சட்டங்களை எதிர்த்து போர்க் ‘கோலம்’ இடுகின்றனர். ‘ஆட்சியை விட்டு வெளியேறு’ எனும் முழக்கங்கள் காவிப் பரதேசிகளின் காது சவ்வைக் கிழிக்கின்றன. பா.ஜ.க குண்டர்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு அவர்கள் மீது செருப்புகள் வீசப்படும் கண்கொள்ளா காட்சிகள் அரங்கேறுகின்றன. 56”இன்ச் மோடியின் ஆதரவாளர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுக்கின்றனர். 56” மோடியும் அமித்சாவும் அசாம் பயணங்களை இரத்து செய்து பதுங்குகின்றனர். துப்பாக்கிகளை எதிர்கொள்ள விரல்களே போதும் என நம் நாட்டின் வீரத்திருமங்கைகள் புதிய வரலாற்றை எழுதுகின்றனர். இசுலாமியர்களும் இந்துக்களும் கைகோர்த்துப் போராடி காவிக் கும்பலின் முகத்தில் கரியைப் பூசுகின்றனர். மக்கள் போராட்டங்கள் அலை அலையாக நாடு முழுக்க கிளர்ச்சி வடிவத்தை எட்டும்பட்சத்தில் மோடி ஆட்சியும், குடியுரிமைச் சட்டங்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிப்படுவது திண்ணம்.
குடியுரிமைச் சட்டம், குடிமகன்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்களுக்கு இடையிலான தொடர்பு என்ன?
துவக்கத்தில் இம்மூன்று சட்ட திட்டங்களுக்கும் எவ்வித தொடர்பில்லை எனவும், இவை வெறும் கணக்கேடுப்பு மட்டுமே எனவும், பதிவேடுகள் திட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் மார்தட்டிய மோடி-அமித்ஷா கும்பல், கிளர்ந்தெழுந்த போராட்டங்களைக் கண்டு பின்வாங்கி நாடெங்கும் பதிவேடுகள் திட்டம் விரிவுபடுத்தவில்லை எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமான கணக்கெடுப்புதான் எனவும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால், இம்மூன்று சட்ட திட்டங்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது மட்டுமின்றி ஒன்று மற்றொன்றிற்குச் சேவை செய்து இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றும் இந்து ராஜ்ஜியத்திற்கு அடித்தளம் போடுகிறது என்பதே உண்மை.
அது குறித்து ஒவ்வொன்றாக காண்போம்.
அ) குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA -Citizenship Amendment Act)
 
குடியுரிமை மற்றும் பதிவேடு சட்ட திட்டங்களை மோடி அரசு அமல்படுத்தியிருந்தாலும், ‘மோசமான கட்சியிலுள்ள நல்ல மனிதர்’ என திராவிட கருணாநிதி கும்பலால் பட்டம்பெற்றவரும் ஆர்.எஸ்.எஸ். எடுபிடியுமான வாஜ்பாய் ஆட்சிதான் இவற்றைத் துவைக்கிவைத்தது. 1955 குடியுரிமைச் சட்டத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்து 2003-ல் “குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகம் 2003” என்ற குடியுரிமை விதிகளைக் கொண்டு வந்தார் வாஜ்பாய்.
மோடி கும்பல் தற்போது இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருந்தாலும், 2015ம் ஆண்டிலேயே இதற்கான முன் தயாரிப்புகளை செய்யத் துவங்கிவிட்டது. அதாவது 1955 குடியுரிமைச் சட்டத்தில் செப்டம்பர் 7, 2015 மற்றும் ஜூலை 18, 2016ம் தேதிகளில் அரசாணை ஒன்றை பிறப்பித்து தற்போது அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மோடி கும்பலின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசுகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இவை செல்லுபடியாகாது என்கிறது மத்திய அரசு.
1955 குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் குடிமகன் யார்? சட்டவிரோத குடியேறிகள் யார்? என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது:
இந்தியாவில் பிறந்த அனைவரும் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் என்கிறது இச்சட்டம்.
யார் சட்ட விரோத குடியேறிகள்? என்பது பற்றி அது கூறுவதாவது:
“உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வருவோரும்; உரிய ஆவனங்களுடன் வந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் இங்கு இருப்பவரும் சட்ட விரோத குடியேறிகள் (illegal immigrants)”என்கிறது இச்சட்டம்.
இதில் மதம் ஒரு அளவுகோலாக வைக்கப்படவில்லை எனினும் இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்குள் குடியேறி இங்கேயே வாழத் துவங்கிய இஸ்லாமியர்களுக்கும், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந்து இங்கு வரும் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கும், பர்மிய அகதிகளுக்கும் (இன்றைய மியான்மர்), நேபாள அகதிகளுக்கும் காங்கிரசு கட்சி கொண்டு வந்த 1955 சட்டத்தின்படியே குடியுரிமை மறுக்கப்பட்டு இதுகாறும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்தார்கள்; வருகிறார்கள். 1955 குடியுரிமை சட்டத்தின் மூலமாகவே அண்டை நாடுகளிலிருந்து இவ்வாறு உரிய ஆவணங்களின்றி வரும் (அகதிகளுக்கு ஆவணம் ஏது?) அனைத்து மதத்தினருக்கும் காங்கிரசு கட்சி குடியுரிமை மறுத்து வந்தது. இச்சட்டத்தில் பாஜக திருத்தம் கொண்டுவந்து அதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை மறுத்துள்ளது. 6 மதப் பிரிவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு (இஸ்லாமிய மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருவதால்) குடியுரிமை உண்டு என்கிறது இந்துத்துவ பாசிச மோடி ஆட்சி. மத அடிப்படையில் இல்லாமல் பாரபட்சமின்றி அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க காங்கிரசு பாஜக கட்சிகள் தயாரில்லை.
குடியுரிமை பற்றிய காங்கிரசு கும்பலின் பாசிச நிலைப்பாடு  1985 அசாம் ஒப்பந்தத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. இதற்கென 1987 ஆம் ஆண்டு பாசிச ராஜீவ் அரசு 1955 குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வந்தது.அந்த  திருத்தமே தற்போதைய மோடி அரசின் குடியுரிமை சட்டத்திற்கு அடித்தளமாகும். பெருந்தேசிய வெறி பாசிச கண்ணோட்டத்துடன் இப்பிரச்சினையை ராஜீவ் கும்பல் அணுகியது. அதாவது வங்க தேசப் பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாகாணங்களில் குடியேறிய வங்கதேசத்து மக்கள் அனைவரும் (இந்து-இசுலாம் மதத்தைச் சேர்ந்த அனைவரும்) வெளியேற்றப்பட வேண்டும் என்ற அசாம் போராளி குழுக்களின் கோரிக்கையை ஏற்று 1985 அசாம் ஒப்பந்தத்தில் ராஜீவ் அரசு கையெழுத்திட்டது. அசாம் மக்களின் குறுகிய தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அந்த ஒப்பந்தத்தை காங்கிரசு நிறைவேற்றவில்லை. தற்போது இவர்களில் இந்துக்களை அனுமதித்து இசுலாமியர்களை மட்டும் வெளியேற்றுகிறது மோடி கும்பல்.
காங்கிரசு கும்பல் பெருந்தேசிய வெறி பாசிசத்திலிருந்து இதை அணுக, பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலோ இந்துத்துவ பாசிசக் கண்ணோட்டத்திலிருந்து அணுகுகிறது; அவ்வளவே. அதாவது இந்து-இசுலாம் மதத்தைச் சேர்ந்த அனைத்து வங்கதேசத்து மக்கள் மீதும் பெருந்தேசிய வெறியாக - இந்திய தேசிய இன ஒடுக்குமுறையாக - தரகு முதலாளித்துவ தேசிய ஒடுக்குமுறையாக - ஏகாதிபத்திய நிதி மூலதன ஒடுக்குமுறை பாசிசமாக காங்கிரசு கும்பல் தன்னை வெளிபடுத்துகிறது எனில்; அவர்களில் இசுலாமியர்களை மட்டும் நீக்கி விட்டு இந்துக்களை அனுமதிக்கும் இந்துத்துவ பாசிசமாக -தரகு முதலாளித்துவ பாசிசமாக-ஏகாதிபத்திய நிதி மூலதன ஒடுக்குமுறைப் பாசிசமாக பாஜக கும்பல் தன்னை வெளிப்படுத்துகிறது. ஆக இரண்டின் வர்க்கப் பண்பும் ஒன்றுதான். பாசிசத்தின் வடிவம் மட்டுமே மாறுபடுகிறது, அவ்வளவுதான்.
இதன் காரணமாகவே, அசாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிபவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” என 1955 குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதித்து 1987-ல் ராஜீவ் கும்பல் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்தமே வாஜ்பாய் கொண்டுவந்த சட்ட திருத்தத்திற்கும், தற்போது மோடி கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கும் வழிவகுத்துள்ளது. 2004-ல் வாஜ்பாய் ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது; குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் திருத்தப்பட்டது. இது தெளிவாக இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றும் உள்நோக்கம் கொண்டதாகும். தற்போது மோடியின் சட்டதிருத்தமோ வெளிப்படையாகவே, உரிய ஆவணங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இசுலாமியர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களை நாடற்றவர்களாக அறிவித்துள்ளது; மேலும் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் சட்ட விரோத குடியேறிகளாக இருந்தாலும் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் போன்ற 6 மதப்பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு நிபந்தனையின்றி குடியுரிமை வழங்குகிறது. மேலும் இவர்கள் மீது கடவுச் சட்டம் 1920, வெளிநாட்டினர் சட்டம் 1946 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் இருப்பின் அவை தள்ளுபடி செய்யப்படுவது மட்டுமன்றி, காலக்கெடுவையும் 11 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைத்துள்ளது.மேலும் இலக்குதேதியை 31.12.2014 என நிர்னையித்து உள்ளது. இந்த 6 மதப்பிரிவினரும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இசுலாமிய மத ஒடுக்குமுறைக்கு ஆளாவதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது என வெளிப்படையாக இந்து ராஜ்ஜிய திட்டத்தை பிரகடனம் செய்கிறது.
ஆறு மதப்பிரிவினரும் வெறும் மத ஒடுக்குமுறைக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர்கள் அரசியல்-பொருளாதார-இராணுவ ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இசுலாமிய மதத்தை அரசு மதமாக கொண்டிருப்பினும் (இந்தியாவின் அரசு மதம் இந்து மதம் என பாபர் மசூதி தீர்ப்பு உறுதிப்படுத்திவிட்டது) அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள். தேசிய இன ஒடுக்குமுறையை வெறும் மத ஒடுக்குமுறையாக -அதுவும் இசுலாம் மத ஒடுக்குமுறையாக மட்டுமே சித்தரிக்கிறது மோடி அரசு. ஆனால் இந்துக்களை விட அதிகமாக ஒடுக்கபட்டு இங்கு வரும் பாகிஸ்தானின் அஹமதியா மற்றும் ஷியா பிரிவு முசுலிம்களுக்கும், மியான்மரின் பவுத்த பாசிசத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ரோஹிங்கியா முசுலிம்களுக்கும், பூடானின் கிறித்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஹஜாரஸ் முசுலிம்களுக்கும், சிங்கள பௌத்த பேரினவாத பாசிசத்தால் ஒடுக்கப்படும் மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது; அவர்களை நாடற்றவர்களாக அறிவிக்கிறது காவிக் கழிசடை கும்பல். காரணம், இசுலாம் மத ஒடுக்குமுறைக்கு மட்டும் ஆளாகிறார்கள் என்று கூறி ஆறு மதப் பிரிவினரின் இசுலாம் வெறுப்பை அறுவடை செய்து இந்துத்துவ பாசிசத்திற்கான சமூக அடித்தளத்தையும், அதன் மீது இந்து ராஜ்ஜிய திட்டத்தையும் கட்டியமைக்கப் பார்க்கிறது மோடி கும்பல்.
காவி கும்பலைப் பொறுத்தவரை இசுலாமியர்கள் மட்டுமே வந்தேறிகள்; சட்ட விரோத குடியேறிகள்; இவர்களே இந்துக்களின் துன்பத்திற்கும், நாட்டின் வறுமைக்கும் காரணம் என்று கூறி (காலனியாதிக்க கொள்கைகள்தான் காரணம் என்பதை மூடி மறைக்க) இந்துக்களின் மதவெறி-தேசிய வெறியைத் தூண்டி இசுலாம் வெறுப்பின் மீது (யூத வெறுப்பின் மீது ஹிட்லர் இனவெறிப் பாசிசத்தைத் கட்டியமைத்தது போல) இந்துத்துவ பாசிச ஆட்சியை நிறுவத் துடிக்கிறது. இவ்வாறு பல கோடி இந்துக்களின் மத வெறியினைத் தூண்டி அந்த சமூக அடித்தளத்தின் மீது ஒரு இந்து நாடு உருவாக்கப்பட்டால் அது அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு அகண்ட பாரத அரசாக-இந்திய விஸ்தரிப்புவாத அரசாக இருக்கும். இது அந்த நாடுகளின் சந்தைகளை அமெரிக்க ஏகாதிபத்திய-தரகு முதலாளித்துவ கும்பல்களுக்கு தங்கு தடையின்றி திறந்துவிடுவதாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு இளைய பங்காளியாக செயல்படுவது எனும் மத்திய அரசின் செயல்வடிவமாக இந்து ராஜ்ஜியம் இருக்கும்.
உண்மையில் சட்ட விரோத குடியேறிகள் யார்? இது உழைக்கும் மக்களுக்கு சொந்தமான பூமி. எந்த உழைப்பையும் செலுத்தாமல் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டித் தின்றுவிட்டு அவர்கள் மீதே பாசிசத்தை ஏவும் ஏகாதிபத்தியவாதிகளும், தரகு வர்க்க - நிலவுடமை கும்பல்களுமே உண்மையில் சட்ட விரோத குடியேறிகள் ஆவர். அவர்களே குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாற்றப்பட வேண்டியவர்கள்.
ஆ) இந்தியக் குடிமகன்களின் தேசியப் பதிவேடு (NRIC- National Registar of Indian Citizens) 
வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் வங்கதேசப் பிரிவினையின் போதும் (1971 மார்ச் 24) அதற்குப் பிறகும் அங்கிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அசாம் போராளி குழுக்களின் கோரிக்கையை ஏற்று 1985ல் ராஜிவ் அரசு அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதைக் கணக்கெடுக்க 2009ல் தொடுக்கப்பட்ட தனிநபர் வழக்கில், உச்சநீதி மன்றம் உத்திரவிட்டதையடுத்து பதிவேடுகள் தயாரிக்கும் பணி துவங்கி தற்போது முடிந்துள்ளது. இதுவே தேசிய குடிமகன்கள் பதிவேடு (NRC)ஆகும். அதன்படி 40 இலட்சம் பேர் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு, பின்பு இறுதிப் பட்டியலில் 19 லட்சமாக குறைந்தள்ளது. இதில் 12 லட்சம் இந்து வங்காளிகளும், 6 லட்சம் இசுலாம் வங்காளிகளும், 1 லட்சம் அசாமியர்களும் அடங்குவர். இதில் இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டு இந்துக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், இலக்கு தேதியும் (Cut-Off date) 1971 மார்ச் 24 என்பதிலிருந்து டிசம்பர் 31 2014 என்று மாற்றப்படும் என்றும் மோடி கும்பல் குடியுரிமைச் சட்டம் வாயிலாக அறிவித்துள்ளது. அண்மையில் மோடி கும்பல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினருக்குப் பிறகு (1948 ஜூலை 19) வந்தவர்களிலும் இசுலாமியர்களை வெளியேற்றி பிற மதத்தினரை அனுமதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தான் தற்போது அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற்று அசாம் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர். 
டிசம்பர் 31, 2014 என்ற காலக்கெடு (Cut-Off date)நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் 2014ம் ஆண்டு வந்தவர்களும் 2019-2020 வரை 5 ஆண்டுகள் வசித்த கணக்கில் வருவதால் அவர்களும் (6 மதப்பிரிவினரும்) குடியுரிமை பெறும் தகுதி பெறுவர் என்பதால் இந்த தேதியை மோடி அரசு நிர்ணயித்துள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இயல்பாகவே 5 ஆண்டுகளில் 6 மதப்பிரிவினரும் குடியுரிமை பெறுவர்.
தேசிய குடிமகன்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் வகையில், ‘குடிமகன்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை வினியோகம் 2003’ விதிகளில் அரசாணை ஒன்றை பிறப்பித்து (Gazette Notification) இந்தியக் குடிமகன்களின் தேசிய பதிவேடு (NRIC) என்று பெயர் மாற்றி நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதற்கான சதிவேலையை மோடி அரசு செய்துள்ளது. 31.07.2019ல் வெளியிடப்பட்ட அரசாணைக் குறிப்பு கூறுவதாவது.
“2003 குடியுரிமை விதிகளில் (குடிமகன்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை வினியோகம் 2003) பிரிவு 3ன் உபவிதி 4ன்படி, அசாமைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ளூர் பதிவாளரின் (Local Registrar) அலுவலக எல்லைக்குள் ஒருவர் வாழ்கின்றாரா என்பது குறித்து அனைவரிடமும் தகவல் சேகரிக்கும் பணிக்காக, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டைத் தயாரித்து செழுமைப்படுத்தி களப்பணிக்கு தயாராக வேண்டும். தகவல் சேகரிக்கும் பணியானது 01.04.2020 முதல் 31.09.2020 வரை நடைபெறும்.” என்கிறது. 
இந்த அரசாணைக் குறிப்பானது தேசிய பதிவேடுகள் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்பதையும், மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கும் குடியுரிமை பதிவேடு திட்டங்களுக்கும் உள்ள உறவையும் எடுத்துக்காட்டுகின்றன. அசாமிற்காக கொண்டுவரப்பட்ட தேசியப் பதிவேடுகள் (NRC) திட்டம், இந்தியா முழுமைக்கும் இந்தியக் குடிமகன்களின் தேசியப் பதிவேடு திட்டம் (NRIC) எனும் பெயரில் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் (NRIC)அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களுக்கு பொருந்தும் என இந்தியாவின் கோயாபெல்ஸ் அமித்ஸா அறிவித்துள்ளார். இதன்படி மாநிலம் தோறும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு அதில் குடிமகன்கள் தாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் என தாமாகவே நிரூபித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் வதை முகாம்களில் அடைக்கப்படுவர் என்கிறது மோடி கும்பல், அம்முகாமிற்கு “தடுப்பு முகாம்” என்று ஈனத்தனமாக பெயரிட்டுள்ளது இக்கும்பல். இது நாஜி முகாம்களுக்கு இணையான வதை முகாம்களாகும். 
இ) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு  (NPR - National population Register)
மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை முதன்முதலில் இந்து ராஜ்ஜியம் அமைப்பதற்கான குடியுரிமைச் சட்டங்களாக முன் வைத்துள்ளது காவி காடையர் கூட்டம். மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமே குடியுரிமை மற்றும் பதிவேடுகள் சட்டங்களுக்கு முதல்படியாகும். இத்திட்டத்திற்கும் இந்திய குடிமகன்களின் பதிவேடுகள் திட்டத்திற்கும் உள்ள தொடர்பை 2003 குடியுரிமை விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை குறிப்பு பின்வருமாறு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது;
தேசிய குடிமகன்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளுக்கு முதல்படி மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டமே என்று அரசாணை குறிப்பே கூறுகிறது. 2003 குடியுரிமை விதிகளில் உபவிதி 5 கூறுவதாவது:
‘மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவேட்டிலிருந்து குடிமகன்களின் விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றை இந்தியக் குடிமகன்களின் உள்ளூர் பதிவு அலுவலர் (Local Registrar) பராமரித்து நிர்வகிப்பார்’ என்கிறது மேலும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 01.04.2020 முதல் 30.09.2020 வரை நடைபெறும் எனவும் அக்குறிப்பு கூறுகிறது.
மிகவும் மையமான விஷயம் என்னவெனில், கணக்கெடுப்பு படிவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 கேள்வி-பதில் பத்திகள் முழுக்க இசுலாமியர்களை குறி வைக்கும் நோக்கோடு கேட்கப்பட்டுள்ளன என்பதே.
கணக்கெடுப்பு படிவத்தின் பக்கம் 2ல் பத்தி 3 (Column-3)பின்வருவனவற்றைக் கோருகிறது:
‘அம்மா, அப்பா பிறந்த தேதி; இந்தியாவிற்குள் பிறந்திருந்தால் மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிடவும்; இந்தியாவிற்கு வெளியே பிறந்திருந்தால் நாட்டின் பெயர் மற்றும் (பதில் தரப்படவில்லை எனில் பின்னர் தெரிவிக்க வேண்டும்) மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவும்” என கேட்கப்பட்டுள்ளன.
இக்கேள்விகள் ஐயத்திற்கிடமின்றி 1948 ஜூலை 19 (பாகிஸ்தான் பிரிவினை) மற்றும் 1971 மார்ச் 24 (வங்கதேசப் பிரிவினை) தேதிகளை மனதிற்வைத்தே கேட்கப்பட்டுள்ளன.
மோடி அரசு மக்களின் போராட்டங்களைக் கண்டு அஞ்சி ‘இக்கேள்விகள் கட்டாயம் இல்லை; சுய விருப்பம் அடிப்படையில் பதில் அளிக்கலாம்’ என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லிக் கொண்டேதான் மோடி கும்பல் அனைவருக்கும் கட்டாயப்படுத்தியது நாம் மறக்கவில்லை.
எனவே இக்கேள்விகள் இரு பிரிவினைகளின் போதும், பிரிவினைகளுக்குப் பிறகும் இந்தியா முழுவதும் குடியேறி இங்குள்ள தேசிய இனங்களுடன் ஒன்று கலந்துவிட்ட இசுலாமியர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக, சட்ட விரோத குடியேறிகளாக-இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் ஈனத்தனமான இந்து ராஜ்ஜிய திட்டமே ஆகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (NPA) திட்டமானது, 31.07.2019 தேதியன்று அரசாணைக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட 2 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசானது எல்லா மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சட்டவிரோத குடியேறிகளை அடைப்பதற்கான தடுப்பு முகாம்கள் (Detention Centre) அமைக்கும் பணிகளை துவங்குமாறு ஆணையிட்டு உள்ளதாக பல தேசிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கும், குடியுரிமைச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மோடி கும்பல் கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. அமித்ஷாவின் பின்வரும் கூற்றே அவர்களின் பொய்யை அம்பலப்படுத்துகிறது;
‘மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளூர் அளவில் தயாரிக்கப்படுகிறது. 1955 குடியுரிமைச் சட்டம் மற்றும் குடியுரிமை விதிகள் 2003- ஆகியவற்றின் (1955) உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமம், சிறு நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் தயாரிக்கப்படுகிறது” என்கிறார் அமித்ஷா.
அமித்ஷா 1955 சட்டத்தின் படி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறுவது அப்பட்டமான பொய்யாகும். 1955 சட்டம் என்பது 2019 குடியுரிமைச் சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. 2003 குடியுரிமை விதிகளும், அரசாணையும் தேசிய குடிமகன்கள் பதிவேட்டிற்குச் சேவை செய்கிறது; மக்கள் தொகை கணக்கெடுப்பு இவற்றின் முதல்படியாக  (First Step) உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு அவை தேசிய குடிமகன்கள் பதிவேடுகளில் ஏற்றப்படும். பிறகு குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக அறிவிக்கப்பட்டு நாடெங்கும் தயாராகிவரும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். பணக்கார இசுலாமியரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது; ஏழை இசுலாமியரைக் கொன்று விடுவது எனும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
புதிய காலனியாதிக்கத்தின் விளைவாக நடக்கும் புலம் பெயர்தலும், புலம் பெயர்பவர்களின் கூலி உழைப்பை வதை முகாம்களில் அடைத்து காலனியாதிக்கத்திற்காக மீண்டும் சுரண்டுதலும் ஒரு தேசிய இனத்திற்குள்ளும், தேசிய இனங்களுக்கிடையிலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற காலனிய அடிமை நாடுகளுக்கிடையிலும் எல்லா மதங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் புலம் பெயர்வதற்கு காரணம் இந்நாடுகளில் நிலவும் புதிய காலனிய-தரகு-முதலாளித்துவ- நிலவுடைமை உற்பத்தி முறையினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே  (Uneven Development) ஆகும். இந்த சமசீரற்ற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நெருக்கடியும், வறுமையும் வேலைவாய்ப்பின்மையும், இதனால் மக்கள் பிழைப்பிற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம் பெயர்வதும் ஏகாதியத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் தவிர்க்க இயலாத விதியாகும் (Law of Imperialist Finance Capital). இந்த உற்பத்தி முறைக்குச் சேவை செய்யும் புதிய காலனிய-புதிய தாரளமய-கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளால் இலட்சக்கணக்கான விவசாயிகள் செத்து மடிவதும், கிராமங்கள் காலியாவதும், மக்கள் புலம் பெயர்வதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. தொழிற்சாலைகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் சேவை மையங்களாக மாற்றப்படுவதாலும், தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு வருவதாலும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். படித்தவர்கள் வேலை தேடுவதையே வேலையாக் கொண்டு மனநோயாளிகளாகி வருகிறார்கள். எனவே இவர்களின் இடம் பெயர்வுகள் தடுக்க முடியாததாகி விட்டன. இந்த இடம் பெயர்வுகளை சட்டங்களாலும், உள்நாட்டு பாஸ்போர்ட் (ILPS -Inner Line Permit System) மற்றும் விசா முறைகளாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நிலவுகிற உற்பத்தி முறையை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம தகர்த்தெறிந்து மக்கள் ஜனநாயக சர்வாதிகார குடியரசை நிறுவினால்தான் புலம் பெயர்தல்களை தடுத்து நிறுத்த முடியும்.அசாம், மணிப்பூர், தமிழகம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அப்போதுதான் வெல்ல முடியும்.
இந்தியாவில் 42 கோடி கட்டிட தொழிலாளர்கள் (இந்துக்கள்)எந்த ஆவணங்களும் இல்லாமல் வாழ்கின்றனர். குடியுரிமை சட்டங்களால் இவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். இவர்களுக்கு நிலையான வீடு இல்லை. அலைந்து திரியும் நாடோடிகளாக செத்து மடிகின்றனர். 3 மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா, 3 மாதம் மும்பை என அலைந்து திரியும் குழுக்களாக ஒரு துன்பியல் வாழ்வை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அர்ஜூன் சென் குப்தா கமிட்டி அறிக்கையானது “இந்தியாவில் 84 கோடிபேர் 28 நாட்களுக்கு மேல் ஒரிடத்தில் தங்கி வேலை செய்வதில்லை” என்கிறது. இந்த 84 கோடி ஒடுக்கப்பட்ட மக்களும் (இந்துக்களும்) உள் நாட்டு அகதிகளாக அலைந்து திரிகின்றனர். தமது கூலி உழைப்பை மேலான விலைக்கு விற்பதற்காக மாநிலம் விட்டு மாநிலமும்-மாநிலத்திற்குள்ளும்-அண்டை நாடுகளுக்கும் புலம் பெயர்கின்றனர். இவர்களிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே இவர்களும் வதை முகாம்களில்-திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்படவுள்ளனர். ஏன்? தற்போது இவர்களின் கூலி உழைப்பு சிதறிக் கிடக்கின்றது. இன்னும் முறையாக அமைப்பாக்கப்படவில்லை. சிதறிக் கிடக்கும் இந்த கூலி உழைப்பையும் கொத்தடிமைத் தனத்தையும் வதை முகாம்கள் மூலம் நிறுவனப்படுத்தி, கார்ப்பரேட் கும்பல்களுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட கூலி உழைப்பை தாரை வார்க்கிறது காவி கழிசடை ஆட்சி. இதுவே ஆதி திரட்டல் சுரண்டல் முறையாகும். பழைய காலனியத்தில் திருச்சபைகள் செய்த இந்த வேசித்தனத்தை,தற்போது புதிய காலனியத்தில் மோடி கும்பலின் இந்த ராஜ்ஜியம் செய்கிறது. இதற்கனவே கட்டற்ற தடையற்ற அந்நிய நிதி மூலதன வருகையை உத்திரவாதப்படுத்தும் சர்வதேச நிதிச்சேவை மையச் சட்டத்தை  நிறைவேற்ற உள்ளது மோடி அரசு. 
இந்துக்களுக்கு எதிரான இந்து ராஜ்ஜியமும் அதன் வதை முகாம்களும்
இந்து ராஜ்ஜியம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் இந்துத்துவக் கோட்பாட்டினுடைய அரசு வடிவமாகும். இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் உள்ள இந்துக்களின் (பின்தங்கிய வாழ்நிலையால் பலப்படும்) இந்து மத உணர்வை இஸ்லாமியாக்ளுக்கு எதிரான இந்து மத வெறி மற்றும் தேசிய வெறியாகத் தூண்டி கோடிக்கணக்கான அம்மக்களின் சமூக அடித்தளத்தின் மீது கட்டப்படும் ராஜ்ஜியமே இந்து ராஜ்ஜியம் (அ) இந்து ராஷ்டிரா (அ) இந்து நாடு திட்டமாகும். இது அண்டை நாடுகள் மீதான இந்திய விஸ்தரிப்பு வாத-அகண்ட பாரத அரசு அமைப்பதையும், அதன் மூலம் வலுவான புதிய காலனியை சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவும் நோக்கம் கொண்டதாகும்.
இந்து ராஜ்ஜியம் பல கட்டங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசப் பிரிவினைகளின் போது இங்கு குடிபெயர்ந்து தங்கியுள்ள கோடிக்கணக்கான இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவது; பூடான் கிறித்துவர்கள், ரோஹிங்கியா இசுலாமியர்கள், ஆப்கனின் ஹஜாரா இசுலாமியர்கள், பாகிஸ்தானின் அஹமதியா மற்றும் ஷியா இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவது; இந்தியாவிலேயே பிறந்து வாழும் இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; இந்து மதத்திலேயே இருக்கிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களையும், ஈழத்தமிழர்கள் மற்றும் பழங்குடிகளையும் நாத்திகர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; தேசிய இனங்களை மத அடிப்படையில் துண்டாடிய பிறகு வன்னியர் நாடு-பறையர் நாடு-கொங்கு நாடு என சாதி அடைப்படையில் துண்டாடுவது; காஷ்மீர், தனித்தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் பாணியில் தேசிய இனங்களை துண்டாடுவது; சாதி-மத-இனக் கலவரங்களாலும் பேரிடர்களாலும் ஆவணங்களை இழந்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; இந்தியாவின் பெரு நகரங்களை (சென்னை, ஹைதராபாத்) டெல்லியைப் போன்று காஷ்மீரைப் போன்று அதிகாரமற்ற யூனியன் பிரதேசங்களாக-பஞ்சாயத்து கவுன்சில்களாக மாற்றுவது; ஒரு கோடி பேருக்கு ஒரு மாநிலம் என தேசிய இனங்களை துண்டாடி மீண்டும் சமஸ்தான ஆட்சியை நிறுவுவது; உள்நாட்டு அகதிகளாக இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டவர்களை வதை முகாம்களில் அடைத்து தேசிய இன உருவாக்கத்தை சுக்கு நூறாக்கி ஏகாதியத்திய எதிர்ப்பு தேச விடுதலை உணர்வை நசுக்குவது; இசுலாமியர்களை குடியுரிமை பெறாத கூலி அடிமைகளாகவும், இந்துக்களை குடியுரிமை பெற்ற கூலி அடிமைகளாகவும் மாற்றுவது; அதன் மூலம் இந்திய விஸ்தரிப்புவாத-அகண்ட பாரத -புதிய காலனிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிலைநிறுத்தி மத்திய காலச் சுரண்டலுக்கு -ஆதி திரட்டல் வடிவிலான சுரண்டலுக்கு -கிழக்கிந்திய கம்பனி ஆட்சி வடிவிலான சுரண்டலுக்கு நாட்டை ஆட்படுத்துவது என பல கட்ட தேசத்துரோக செயல்தந்திரங்களைக் கொண்டது தான் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் இந்து ராஜ்ஜியத் திட்டமாகும்.
ஏகாதியத்திய ராமராஜ்ஜியம் எனப்படும் இந்து ராஜ்ஜியத்தின் மன்னர்களாக-ராமர்களாக ஏகாதித்திய நிதியாதிக்க கும்பல்களே விளங்குவர். அனுமார்களாக அம்பானிகளும்-மூப்பனார்களும்--யாதவர்களும் (தரகு முதலாளிகளும் நிலவுடமையாளர்களும்) விளங்குவர். இந்த எதிர்புரட்சிகர ராஜ்ஜியத்தில் இசுலாமியர்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களும் ஈழத்தமிழர்களும் (அதாவது ஆர்.எஸ்.எஸ் பாஷையில் இந்துக்களும்), நாத்திகர்களும் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு இவர்களுக்கு அதாவது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமை வேலை செய்யும் கூலி அடிமைகளாக அத்துக் கூலிகளாக அறுபட்டுச் சாவர். 
வதை முகாம்கள் அமைப்பது என்பது தேசிய இனங்களை நிரந்தரமாகத் தூண்டாடும் மாபெரும் தேசத்துரோகச் செயலாகும். உதாரணமாக, பீகாரிகள் கர்நாடகா-தமிழகத்திலும், தமிழர்கள் மும்பை-கர்நாடகாவிலும், கன்னடர்கள் கோவாவிலும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். இது தேசிய இனங்களுக்கிடையில் ஓயாத சாதி, மத இனக் கலவரங்களை கட்டியமைப்பதற்கு வழிவகுக்கும். எல்லா மாநிலங்களிலும் நாஜி வதை முகாம் பாணியிலான வதை முகாம்கள் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன. அசாமில் 10 முகாம்களும், 1 முகாம் நவி மும்பையிலும், 1 முகாம் கர்நாடகாவிலும் (நீலமங்களா) செயல்படத் துவங்கிவிட்டன. நாடு முழுவதும் 6 லட்சம் கோடி செலவில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. ஏகாதியத்திய நிதியாதிக்க கும்பல்களின் நெருக்கடியையும், இந்திய தரகு வர்க்க கும்பல்களின் நெருக்கடியையும் தீர்த்து அவற்றின் கால்களை நக்கிப் பிழைக்கவே மோடி கும்பல் இந்த ஈனத்தனமான நீசத்தனமான துரோகச் செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்து ராஜ்ஜியத்தின் வதை முகாம்களில் இசுலாமியர்கள் மட்டுமன்றி ஈழத்தமிழர்களும், பிற மாநிலங்களுக்கு பிழைப்பைத் தேடி செல்லும் உள்நாட்டு அகதிகளும் (அதாவது இந்து மதத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், நாடோடிகள் மற்றும் பழங்குடிகள்) அடைக்கப்பட உள்ளனர். இந்தியாவில் இந்து மதத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தில் 15 % குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இந்து மதத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 28 % குழந்தைகளுக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவில் 39% குழந்தைகளுக்கும், பழங்குடிகளில் 44% குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் குழந்தைகள் முகாம்களில் (Juvenile camps) அடைக்கபடுவர். எந்த ஆவணமும் இல்லாத சுமார் 80 இலட்சம் நாடோடி இன மக்கள் மற்றும் பிரிட்டன் அரசால் ‘ஆதிவாசி குற்றப் பரம்பரை’ என வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டு மிஞ்சியுள்ள கோடிக்கணக்கான ஆதிவாசிகளும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். இது கற்பனை அல்ல. இதுதான் அசாமில் நடந்து வருகிறது. வதை முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான அசாமியர்களின் வீடுகள் நாசப்படுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அசாம் முகாம்களில் இதுவரை இந்துக்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர். 
இந்த முகாம்கள் இந்தியாவின் ‘குவாண்டனோமா’ (Guantanamo detention camps) வதை முகாம்களகாக, ‘நாஜி’ வதை முகாம்களாக செயல்படும். கேடு கெட்ட இந்த இந்து நாடுதான் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்து வணிகர்களை நடுத்தெருவில் நிறுத்தி, பல லட்சம் இந்து விவசாயிகளை கொன்று குவித்து வருகின்றது. எனவே இந்து ராஜ்ஜியம் இசுலாமியர்களுக்கு எதிரானது மட்டுமின்றி இந்துக்களுக்கும் எதிரானதே என்பது எளிதில் விளங்கும்.
ஹிட்லரின் நாஜி வைகைப்பட்ட-இந்த ஈனத்தனமான-கழிசடையான நூரம்பார்க் குடியுரிமைச் சட்டங்களையும், நூரம்பார்க் படுகொலைகளையும் நாம் அனுமதிக்கப் போகிறோமா? இன்னொரு யூதப் படுகொலையை-ரோஹிங்கியா படுகொலையை-ருவாண்டா படுகொலையை-குஜராத் படுகொலைகளை-இரத்த வேட்டையை- பிணக்காட்டை-காட்டுமிராண்டித்தனத்தை நாம் அனுமதிக்கப்போகிறோமா? அவ்வாறு அனுமதித்தால் நம்மை மனிதர்கள் என்று அழைத்துக்கொள்ள நமக்கு அருகதை உண்டா?
இவ்வாறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக உள்ள இந்தியத் துணைக் கண்டம், தேசிய இனங்களின் வதை முகாம்களாக-கொத்தடிமைத் தளங்களாக-கொலைக் களங்களாக மாற்றப்பட்டு ஏகாதியத்திய நிதி மூலதனத்தின் ஆதி திரட்டல் வடிவிலான சுரண்டலுக்கு ஆட்படவுள்ளன. அதாவது மனிதர்களும், மூலப் பொருட்களும், உற்பத்தி சக்திகளும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதன் ஊற்றுக்கண் ஏகாதியத்திய நிதி மூலதன காலனியாதிக்கமே.
ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிகளை தீர்க்கவே இந்து ராஜ்ஜியம்!
ஏகாதியத்திய நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளும், பூசல்களும் தீவிரம் பெற்று வருகின்றன. அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும், சீன-இரசிய முகாமிற்குமிடையில் உலகை மறு பங்கீடு செய்வதற்கான “பனிப்போர்” துவங்கியதால் அவற்றின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகின்றது. குர்தீஸ்தான் படைகள் மீதும், ஈரான், ஈராக வெனிசுலா மற்றும் சிலி போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற புதிய காலனிய நாடுகள் மீதும், ஏகாதியத்திய நாடுகளின் காலனியாதிக்கமும், பாசிசமும், போர் வெறியும் அனுதினமும் ஆழமாக திணிக்கப்பட்டு வருகின்றன. நெருக்கடியின் சுமைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட புதிய காலனிய நாடுகள் மீதே சுமத்தப்படுகின்றன. அந்நிய நிதி மூலதன நெருக்கடியானது இந்தியாவில் நெருக்கடியை ஆழப்படுத்துகிறது. இந்தியாவின் தேசிய உற்பத்தி 2% சதத்திற்கும் கீழ் வீழ்ந்து விட்டது. இதனால் வறுமை, வேலைவாய்ப்பின்மை பஞ்சம், பட்டினி சாவுகள், தலைவிரித்தாடுகின்றன. மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இப்போராட்டங்களை நசுக்கி பிளவுபடுத்தி மக்களை மேலும் ஒட்டச் சுரண்டவே மோடி கும்பல் பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது. காஷ்மீர் தேசிய இனத்தை 370 இரத்தின் மூலம் துண்டாடியது; பாபர் மசூதியை காவிக் கிரிமினல்களிடம் ஒப்படைக்கும் தீர்ப்பை பெற்று இசுலாமியர்களின் மத உரிமையைப் பறித்தது மோடி கும்பல்; தற்போது குடியுரிமைச் சட்டங்கள் மூலம் அவர்களின் குடியுரிமையையும் பறிப்பது என பாசிசம் தீவிரம் பெற்று வருகிறது. இதன் பொருட்டே தேசிய இனங்கள் துண்டாடப்பட்டு அவற்றின் சந்தைகள் ஒருமுகப்படுத்தப்பட்டு மையப்படுத்தப்படுகின்றன. தற்போது இந்து ராஜ்ஜிய குடியுரிமைச் சட்டங்கள் இந்த தேச துரோகத்தனத்தை மேலும் தீவிரப்படுத்தவே அமல்படுத்தப்படுகின்றன.
வடகிழக்கு தேசிய இனங்களின் வளங்களை கொள்ளையடிக்கும் ‘கிழக்கில் செயல்படும் கொள்கை 2014’
இச்சட்டங்கள் சட்ட விரோத குடியேற்றங்களைத் தடுக்கும் சட்டம் என்று மோடி கும்பல் கூறுவது பச்சையான பொய்யாகும். உண்மையில் 6 மதப்பிரிவினருக்கும்,வடகிழக்கு மகாணங்களிலுள்ள பழங்குடி வாழ் பகுதிகளுக்கும் விலக்கு அளித்துள்ளதன் மூலமும் அப்பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி மஸ்தான் அரசு. வடகிழக்கு மாகாணங்களின் மலைவாழ் பகுதிகளில் (பழங்குடி வாழ்பகுதிகள்) இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் கொட்டிக் கிடப்பதால் அப்பகுதிகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது; காரணம், வட கிழக்கு தேசிய இனங்களை பழங்குடிகள்-இந்து-இசுலாம் வங்காளிகள் என துண்டாடி, இந்த பல்முனை முரண்பாடுகளின் ஊடாக ஏகாதிபத்திய ஆதிக்கத்தை அங்கு வலுவாக நிறுவத் துடிக்கிறது மத்திய அரசு. அப்பகுதிகளில் மோடி கும்பல் அமெரிக்க ஏகாதியத்திய நிதியாதிக்க கும்பல்களின் நலன்களுக்காக அந்நாட்டுடன் போட்டுள்ள “கிழக்குப் பகுதிகளில் செயல்படுவது 2014 (Act East 2014)” எனும் ஒப்பந்தத்திற்காக இந்த சதித்தனத்தை செய்துள்ளது மோடி அரசு. கிழக்கில் செயல்படும் கொள்கை (Act East policy) எனும் பெயரில் மன்மோகன் கும்பல் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தமே தற்போது “கிழக்கில் செயல்படு 2014” என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சீனாவுடன் வடகிழக்கு மாகாணங்களை இணைக்கும் புதிய பட்டுச் சாலையின் (New silk Road-One belt One Road) ஒரு பகுதியாக ஸ்டிட் வெல் சாலை (Stidwel Road) அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஜிக்கா எனப்படும் ஜப்பானின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஜப்பான்-வடகிழக்கு மாகாண சாலை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்து ராஜ்ஜியம் என்பது அந்நிய நிதி மூலதனத்திற்கு குடியுரிமை வழங்கும் புதிய காலனிய சாம்ராஜ்ஜியம் என்பதற்கு இதை விடவும் ஆதாரம் தேவையா? 
இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தையும், அதை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போராகவும் வளர்த்தெடுக்கவேண்டிய நேரமிது. 
ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் இந்து ராஜ்ஜிய குடியுரிமை சட்ட-திட்டங்களை முறியடிக்க முடியும்!!
மோடி கும்பலின் குடியுரிமைச் சட்டங்கள் பற்றிய பிரச்சனை உண்மையில் ஒரு தேசிய இனப் பிரச்சனை ஆகும். ஆனால் இது ஒரு மதப் பிரச்சனையாக முன்னிறுத்தப்படுவதும், அதற்கு முதலாளித்துவ தேசியவாதிகள் பலியாவதும் இந்து ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டங்களை பலவீனப்படுத்தவே செய்யும். ஒரு தேசிய இனத்திற்குள்ளும், தேசிய இனங்களுக்கு இடையிலும் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணம் புதியகாலனி அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். எனவே நாம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போரிட வேண்டுமே தவிர அசாம், திரிபுரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்குள் பகையை வளர்த்து மாண்டுவிடக்கூடாது. மத்திய அரசை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடக்கும் சூழலில் அயலாரை வெளியேற்று என பீகார் தொழிலாளிக்கு எதிராக முழங்குவது அப்பட்டமான முதலாளிய தேசியவாதமே. இது மறைமுகமாக இந்து ராஜ்ஜியத்திற்கு சேவை செய்வதே.
பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆரிய மாயைகளை எதிர்த்து போரிட கால்ட்வெல் பாதிரியின் திராவிட இன மாயை மாற்றாகுமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இவ்விரு கருத்தாக்கங்களும் ஜோன்ஸ்- கால்ட்வெல் போன்ற ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உருவாக்கிய கற்பனையான கோட்பாடுகளாகும். ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தைகளே. ஒன்று காவி மடம். மற்றொன்று கருப்பு மடம். ஆரிய மாயைக்கு மாற்று திராவிட மாயை அல்ல. திராவிட இனவாதம் தமிழ் தேசிய உணர்வு வளர்வதற்கு பெரும் தடையாக உள்ளது. ஆரிய - திராவிட இனவாத மாயைகள் பழைய காலனியத்திற்கு சேவை செய்தது போலவே புதிய காலனியத்திற்கும் சேவை செய்கிறது.
கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளின் இந்துத்துவ கோட்பாட்டின் நடைமுறை வடிவமே இந்து ராஜ்ஜியம் என்பதை அனைத்து தேசிய இனங்களும் உணர்ந்து ஒன்றாக போராடவேண்டும். கோல்வால்கர் கூறுவதாவது, “இந்திய மண்ணை தாய் பூமியாகவும், புனித பூமியாகும் கருதுபவர்களே இந்தியர்கள்; இஸ்லாமியர்களுக்கு புனித பூமி மெக்கா; கிறித்தவர்களுக்கு புனித பூமி ஜெருசலம்; எனவே அவர்கள் இந்தியர்களாக கருதப்பட மாட்டார்கள்” என்கிறார். “நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” என்ற நூலில் அவர் மேலும் கூறுவதாவது “இந்துக்கள் அல்லாதோர், இந்து பண்பாடு மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இந்து மதத்தை மதிக்க வேண்டும்; இந்து இனத்தை புகழ் பாட வேண்டும்; அவர்கள் இந்து நாட்டிற்கும் முழுதும் கீழ்ப்படிய வேண்டும்; எந்த உரிமையும் கோரக் கூடாது; எந்த சிறப்புரிமைகளையும் விரும்பக் கூடாது; குடியுரிமையைக் கூட கோரக்கூடாது; இவற்றை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் வாழலாம்; இல்லையெனில் அவர்கள் அயல்நாட்டினர் என்றே கருதப்படுவார்கள்” என்கிறார். சாவர்க்கர் “இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே நாட்டில் ஒன்றாக வாழ முடியாது” என்று கூறுகிறார். அவர் இந்து நாடு-முஸ்லிம் நாடு என்ற இரு நாட்டுக்(Two Nation Theory) கொள்கையை முன்வைக்கிறார். மேற்கூறப்பட்ட காவிக் குண்டர்களின் கொள்கைகளே தற்போது குடியுரிமைச் சட்டம், பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதை நாம் ஒருகாலும் அனுமதிக்க இயலாது. தேச பக்தர்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமை இயக்கத்தையும்-தேச விடுதலைப் போரையும் முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. 
ஒத்துழையாமை இயக்கம் என்றால் என்ன?
தொழிலாளர்கள்-விவசாயிகள் தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தில் மாணவர்கள், பெண்கள், வணிகர்கள், தேசிய முதலாளிகள், மீனவர்கள், மா-லெ குழுக்கள், புரட்சிகர சனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழையாமை இயக்கத்தினை மக்கள் மத்தியில் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
1.         மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளிடமும், கணக்கெடுக்க வருபவர்களிடமும் எந்தத் தகவல்களையும், ஆவணங்களையும் தர மறுப்பது;
2.         பதிவேடு திட்ட அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள மறுப்பது; வதை முகாம்களுக்கு செல்ல மறுப்பது;
3.         இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது; இந்து-இசுலாமியர் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் போராட்டங்களை முன்னெடுப்பது;
4.         அந்நியப் பொருட்களை வாங்க மறுப்பது; அந்நியப் பொருட்களை எரிப்பது;
5.         வரி செலுத்த மறுப்பது; கார்ப்பரேட்டுகளை வரி கட்டச் சொல்லுமாறு போராடுவது;
6.         அவசியமற்ற பொருட்களை வாங்க மறுப்பது; அரசு விழாக்கள், திருமணம், பண்டிகைகளை புறக்கணிப்பது;
7.         எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவும், வாக்களிக்கவும் மறுப்பது.
8.         வங்கிகளைப் புறக்கணிப்பது; காவல்துறை, சிறைத்துறை மற்றும் நீதிமன்றத்தை புறக்கணிப்பது;
9.         அரசு ஊழியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு கொள்ள மறுப்பது; அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் கல்லூரிகள் பள்ளிகளுக்கும் செல்ல மறுப்பது;
10.       குடியுரிமைச் சட்டங்களை ஆதரித்து துரோகமிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களை முற்றுகையிடுவது; பதவி விலக கோரி போராடுவது;
போன்ற ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் இந்து ராஜ்ஜிய சட்டங்களை உறுதியாக நிர்மூலமாக்க முடியும். ஒத்துழையாமை இயக்கங்களை அலை அலையாக கட்டியமைத்து மக்கள் எழுச்சியை உருவாக்குவதும், வெடித்துக் கிளம்பும் போராட்ட நெருப்பை நாடெங்கும் பற்றிப் பரவச் செய்தும் நிச்சயம் குடியுரிமை சட்டங்களை சாம்பலாக்கும். அத்தகைய ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போருக்கு அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய மிகச் சரியான தருணம் இது.
சமரன்
ஜனவரி 2020
=======================================================================================================
பிற்சேர்க்கை -1 
குடியுரிமை திருத்த மசோதா: முற்றிலும் தவறான நியாயப்படுத்தவே முடியாத சட்டம்
(இது ஒரு மொழி பெயர்ப்பு கட்டுரையாகும். சமரன் நிலைப்பாட்டிலிருந்து
விமர்சன பூர்வமாக படிக்குமாறு வாசகர்களைக் கோருகிறோம் - ஆசிரியர்.)
டிசம்பர் 13, 2019 அன்று குவஹாத்தியில் சிகிஙிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அனுமதிக்கப்படத்தக்க இறுதி தேதியாக ஏன் 31 டிசம்பர் 2014 தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த, புலம்பெயர்ந்தவர்களுடைய விஷயத்தில் மட்டும் குடியுரிமை பெறுவதற்கான பன்னிரெண்டு வருட கட்டாயத் தகுதி எதற்காக்க குறைக்கப்பட்டது என்பதை CAB தெளிவுபடுத்தவில்லை.
குடியுரிமை (திருத்தம்) மசோதா, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டையோ அல்லது இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சரிசமமான பாதுகாப்பு போன்ற அரசியலமைப்பிற்கே உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியைடைந்தது. எந்தவொரு சட்ட விதிகளின் செல்லுபடித் தன்மையையும் தீர்மானிப்பதற்கான இன்றியமையாத சோதனை என்னவென்றால், அந்தச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் சமமான சூழ்நிலைகள் மற்றும் சமமான நிபந்தனைகளின் கீழ் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பது தான் என இந்திய அரசியலமைப்பு குறித்த பாடப்புத்தகங்கள் கூறுகின்றன. இந்த சோதனையின் மூலம் உய்த்தறியப்படுவது யாதெனில், நியாயமானவர்கள் எந்தவொரு பாரபட்சமில்லாமல் கருதப்படவேண்டும் எனவும் நேர்மையற்றவர்கள் ஒருபோதும் சம உரிமை உடையோராக பாவிக்கக்கூடாது என்பதே ஆகும். ஆகவே, அரசியலமைப்பின் 14 வது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சரிசமமான பாதுகாப்பை எவர்க்கும் இந்திய அரசு மறுக்கக் கூடாது. மேலும் எந்த ஒரு வர்க்கத்தைச் சார்ந்தோருக்கும் எதிராகப் பாகுபாட்டினை அனுமதிக்கக்கூடாது என தெளிவாக கூறுகிறது. அதே நேரத்தில் அது உத்தரவாதம் அளித்த சமத்துவ உரிமைகளை செயல்படுத்தும் நோக்கங்களுக்காக நபர்களை வகைப்படுத்துவதைத் தடுக்கவும் செய்யாது என்பதே ஆகும்.
அனுமதிக்கப்பட்ட வகைப்பாட்டிற்கு, அரசியலமைப்பு இரண்டு நிபந்தனைகளை வகுக்கிறது: முதலாவது, அது ஒரு எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். அதாவது ஒரே வகுப்பிலிருந்து பிரிந்தவர்களிடமிருந்து ஒற்றை வகுப்பில் இணைக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களது வாழ்நிலைகளை வேறுபடுத்த வேண்டும்; இரண்டாவது, சிக்கலாக உள்ள சட்டத்தின் வழியே அத்தகைய வேற்றுமைத் தன்மைகள் எப்போதும் இலக்கோடு பொருந்திய நியாயமான பிணைப்பினை சம்பாதிக்க/வென்றெடுக்க முயல வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோசனையில் உள்ள சட்டத்தின் நோக்கத்திற்கும் வகைப்படுத்தலின் அடிப்படை முகாந்தரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கொள்கையைத் தலைகீழாக மாற்றுவதற்கு குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAB) முயல்கிறது. 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 2 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உட் பிரிவு (ஆ) “சட்டவிரோதமாக குடியேறியவரை” பின்வருமாறு வரையறுக்கிறது:
இந்திய நாட்டிற்குள்ளே நுழைந்த ஒரு அயல்நாட்டவர்
(i)         செல்லத்தக்க நுழைவுரிமையோ அல்லது இன்ன பிற பிரயாண அடையாளச்சீட்டுக்களோ மேலும் அவ்வகைப்பட்ட ஆவணங்களோ அல்லது எந்த ஒரு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதன் மூலமோ ஒரு அதிகாரியால் வேண்டப்படுகிறவை இல்லாமலோ, அல்லது
(ii) செல்லத்தக்க நுழைவுரிமையோ அல்லது இன்ன பிற பிரயாண அடையாளச் சீட்டுக்களோ மேலும் அவ்வகைப்பட்ட ஆவணங்களோ அல்லது எந்த ஒரு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதன் மூலமோ ஒரு அதிகாரியால் வேண்டப்படுகிறவை வைத்திருந்தபோதிலும் அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்கு மேலாக அவ்விடத்தில் இருந்தாலோ அவர் “சட்ட விரோதமாகக் குடியேறியவர்” என்றே பொருள்படும்.
இந்த வரையறைக்கு உட்படுத்த குடியுரிமைச் சட்ட மசோதா (CAB) விலக்கு கூறு ஒன்றை இதனிடையே உட்புகுத்துகிறது.
அந்த விலக்குக் கூறு தெரிவிப்பது:
“ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி அல்லது கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும், 2014 டிசம்பர் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ இந்தியாவிற்குள் வந்திருந்தாலும், 1920-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘நுழைவுரிமை (இந்தியாவிற்குள் பிரவேசித்தல்) சட்ட’த்தின்  [Passport(entry into India)Act, 1920] பிரிவு(3)இன் துணை பிரிவு(2)இன் உட்பிரிவு(இ) என்பதன் படியோ அல்லது அதன் காரணமாகவோ அல்லது 1946-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அயல்நாட்டவர்கள் சட்ட’த்தின் [Foreigners Act-1946] ஷரத்துகளிலிருந்தோ அல்லது அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் அல்லது விதிகளிலிருந்தோ மத்திய அரசாங்கத்தால் விலக்களிக்கப்பட்டவர் எவரும் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்”.
இந்த விலக்குக் கூறின் இரகசியம் தேனொழுக கருத்தாளும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. குடியுரிமைச் சட்ட திருத்தத் மசோதாவுடன் இணைக்கப்பட்ட நோக்கம் மற்றும் நியாய அறிக்கை (Statement of Object and Reason-SOR), இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள தற்போதையே எல்லை பகுதிகளின் ஊடாக மக்களின் இடம்பெயர்வு தொடர்ந்து நடந்து வருகிறது என்று விவரிக்கிறது. அந்த அறிக்கை (SOR) மேலும் கூறுவது: “1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்பட்டபோது பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரிக்கப்படாத இந்தியாவின் இலட்சக் கணக்கான குடிமக்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அந்த எல்லையோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் அரசியலமைப்புகள், அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவையாக இருப்பதற்கு அனுமதியளிக்கிறது. இதன் விளைவாக, இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் கிறிஸ்த்துவ சமயத்தைச் சேர்ந்த பலர் அந்த நாடுகளில் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளைச் சந்தித்தனர். இத்தகைய அடக்குமுறைகளைப் பற்றி அவர்களில் சிலர் தங்கள் அன்றாட வாழ்க்கையில், அங்கு தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், பகிரங்கமாக அறிவிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்குமான உரிமை இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கலக்கம் கொண்டுள்ளனர். இதுபோன்ற பல நபர்கள் வாழ்விடம் தேடி இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளனர். அவர்களின் பிரயாண அடையாளச் சீட்டுகள் காலாவதியானாலும் அல்லது முழுமையற்றதாக இருந்தாலும் அல்லது அடையாள ஆவணங்களே இல்லாவிட்டாலும் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள்”.
கவனிக்கத்தக்க தவறுகள்
இந்த மூன்று நாடுகளின் முஸ்லிம்கள் “மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளை” எதிர்கொள்ளவில்லை என்று குடியுரிமைத் திருத்த மசோதா மேற்கோள்காட்டுகிறது என்பது தெளிவு, ஏனெனில் இஸ்லாம் அங்கு அரச மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. மத அடக்குமுறைகளை எதிர்கொண்டு இந்தியாவுக்கு தப்பி வருபவர்களில் முஸ்லிம்களும் அடங்குவார்களா என்பதில் விளக்கங்கள் ஏதுமற்ற கள்ள மௌனத்தையே கூடுதலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
அரசாங்கத்திலும் சரி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திலும் சரி இந்த மசோதாவின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் உள்ள அஹமதியர்களும், ஷியாக்களும் ஏன் மத ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்ற பொது வரையறைக்குள் உட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு கள்ளத்தனமான மௌனத்தையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இசுலாம் அல்லாத பிற மதங்களை அரச மதமாக கொண்டுள்ள அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்தில் உள்ள சிறுபான்மையினர்களும் கடந்த காலங்களில் இந்தியாவிற்குள் தப்பி வந்துள்ளனர். இந்த மசோதாவின் சட்ட வரம்புக்குள் இவர்களும் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விக்கு இந்த மசோதா மீண்டும் விளக்கம் ஏதுமற்ற சமரசத்தையே முன்வைக்கிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் ஆப்கானிஸ்தானை ஒப்புமைப் படுத்துவதற்கும் கூட எந்த நியாயமான காரணங்களும் இல்லை. மியான்மரில் நடத்தப்பட்ட மத ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பெருமளவில் இந்தியாவுக்கு தப்பி வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களையும், மத ஒடுக்குமுறைக் காரணமாக புகலிடம் நாடிய அண்டை நாடுகளைச் சேர்ந்த நாத்திகர்களையும் தெரிந்தே சேர்க்காமல் தவிர்த்திருப்பது இந்த மசோதாவின் விவரிக்க முடியாத மற்றும் கவலைக்குரிய மற்றொரு அம்சமாகும்.
அரசாங்கம் பிற வகுப்பினரையும் அவர்களது பூர்வீக நாடுகளையும் உள்ளடக்கி இந்தப் பட்டியலை மேலும் விரிவுபடுத்தக்கூடும் என்ற யோசனை பூசல் நிறைந்தது மட்டுமன்றி ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல. இந்த மசோதாவின் ஆதரவாளர்களே கூட இதுபோன்ற கொள்கை விஷயத்தில் அரசாங்கத்தின் தெரிவு என்பது சட்டத்தால் நிலைநாட்டக்கூடியதல்ல என நிராகரிக்கின்றனர். அரசியலமைப்பின் 14-வது பிரிவின் இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறியதே இந்த மசோதாவின் தோல்வி. இதுவே பலருக்கு அதிருப்தி அளிப்பதாக தோன்றியது. இந்தச் சட்டத்தின் தற்போதைய விதிகளின் கீழ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்குள் செல்லத்தக்க நுழைவுச் சீட்டுகளின்றி அல்லது எவருடைய அனுமதிக்கப்பட்ட பிரயாணக் காலம் காலாவதியானதோ அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவர். மேலும் இந்தச் சட்டத்தின் பிரிவு-5 அல்லது பிரிவு-6 இன் கீழ் இந்தியக் குடியுரிமைப் பெறுவதற்கானத் தகுதியையும் இழப்பர்.
நுழைவுரிமை (இந்தியாவிற்குள் பிரவேசித்தல்) சட்டம், 1920, மற்றும் அயல்நாட்டவர் சட்டம், 1946 மட்டுமல்லாமல் செப்டம்பர் 7, 2015, மற்றும் ஜூலை 18, 2016 தேதியிட்ட அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள், அறிவிப்புகள் அல்லது ஆணைகள் ஆகியவற்றின் பாதகமான தண்டனை விளைவுகளிலிருந்து இது போன்ற புலம்பெயர்ந்தோருக்கு மைய அரசு விலக்கு அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 8, 2016 மற்றும் செப்டம்பர் 14, 2016 தேதியிட்ட ஆணைகளின் மூலம் இந்தியாவில் நீண்ட கால அடிப்படையில் தங்குவதற்கான நுழைவிசைவுச் சீட்டைப் பெறுவதற்கு இவர்களைத் தகுதியுடையோராக அறிவித்தது. அத்தகைய குடியேறியவர்களை இந்திய குடியுரிமைக்கு தகுதியுடையவர்களாக மாற்றத் தேவையான நாடாளுமன்ற ரீதியிலான ஆதரவை வழங்குவதாக்க குடியுரிமைத் திருத்த மசோதா முன்மொழிந்தது…
நோக்கம் மற்றும் நியாய அறிக்கை (SOR) விளக்குவது:
“வரையறுக்கப்பட்ட கெடு தேதியான டிசம்பர் 31, 2014 வரை இந்தியாவிற்குள் வந்த சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அவர்களுடைய குடியுரிமை விவகாரங்களைக் கட்டுப்படுத்த ஒரு தனிப்பட்ட நிருவாக அமைப்பு தேவை. இந்த நோக்கத்திற்காக, இந்த சட்டத்தால் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நடத்தை முறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அல்லது அதனால் குறிப்பிடப்பட்ட ஒரு ஆணையத்தின் மூலம் பதிவுச் சான்றிதழ் அல்லது குடியுரிமைப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்களில் பலர் நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவிற்குள் வந்திருப்பதால், அவர்கள் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய குடியுரிமைக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாலோ அல்லது இந்தச் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் உள்ள விலக்கு கூறின் கீழ், குடியுரிமைப் பெறுவதற்கானத் தகுதிகளைப் பூர்த்தி செய்தாலோ அவர்களுக்கு இந்தியாவில் நுழைந்த நாளிலிருந்து இந்தியாவின் குடியுரிமை வழங்கப்படலாம்”.
சட்டத்தின் 6-வது பிரிவு அதன் மூன்றாவது அட்டவணையின் அடிப்படையில் 12 வருட கட்டாயக் குடியிருப்பை வெளிநாட்டவர் இயற்கையாக குடியுரிமை பெரும் முறையின் மூலம்  [By Naturalisation] குடியுரிமைப் பெறுவதற்கான தகுதியாகப் பரிந்துரைக்கிறது. இந்த மூன்று நாடுகளைச் சார்ந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தற்போதுள்ள 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்கு இந்தியாவில் குடியிருந்ததாக நிறுவ முடியுமானால், இயற்கையாகக் குடியுரிமைப் பெரும் முறையின் மூலம் குடியுரிமைப் பெற தகுதி வாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு மூன்றாவது அட்டவணையில் திருத்தம் செய்ய குடியுரிமைத் திருத்த மசோதா முயல்கிறது. நோக்கம் மற்றும் நியாய அறிக்கையின்(SOR) 7வது பத்தி இந்த குறைப்பு நடவடிக்கைக்கு அரைகுறையான விளக்கத்தை மட்டுமே வழங்கியது: “மேற்கூறிய (மூன்று) நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு-5 இன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர் [பதிவுசெய்வதின் மூலம் குடியுரிமை பெறுவதை குறிக்கிறது]. ஆனால் அவர்களுடைய இந்திய வம்சாவளியை நிரூபிக்க அவர்களால் முடியவில்லை. எனவே, அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இயற்கையாக குடியுரிமை பெரும் முறையின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள், இது மற்ற விதிகளுக்கிடையில், சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின், 12 வருட குடியிருப்பின் அடிப்படையில் இயற்கையாகக் குடியுரிமைப் பெறுவதற்கான தகுதியையே பரிந்துரைக்கிறது. அவர்கள் பெரும்பாலும் நிரந்தரமாக இந்தியாவில் குடியிருந்தாலும் இது போன்ற விதிகள் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உதவிகளையும் மறுக்கிறது”.
இறுதியான கெடு தேதியாக 31 டிசம்பர், 2014 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரின் விஷயத்தில் மட்டும் 12 வருட குடியிருப்புக்கான நிபந்தனை ஏன் குறைக்கப்பட்டது என்பதை குடியுரிமைத் திருத்த மசோதா தெளிவுபடுத்தவில்லை. இதன் தொடர்ச்சியாக அத்தகைய புலம்பெயர்ந்தோருக்கு கூடுதலான சலுகைகளை வழங்க குடியுரிமைத் திருத்த மசோதா(CAB) முயல்கிறது. சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு(6பி)-இன் துணைப்பிரிவு (3) இன் கீழ், சட்டவிரோத குடியேற்றம் அல்லது குடியுரிமை தொடர்பாக ஒரு நபருக்கு எதிராக நிலுவையில் உள்ள எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு அல்லது அவளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் குறைக்கும்.
பழங்குடியினப் பகுதிகளுக்கான விலக்குரிமை
பிரிவு 6பி-இன் துணைப்பிரிவு (4) அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் அல்லது திரிபுராவின் பழங்குடிப் பகுதியையும், 1873-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்காள கிழக்கு எல்லை விதிமுறை’களின்  [Eastern Frontier Regulation, 1873] கீழ் அறிவிக்கப்பட்ட “உட்புற எல்லை”யின்  [Inner Line] கீழ் உள்ள பகுதியையும் குடியுரிமைச் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கிறது. ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு உத்தரவாதத்தையும், வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை’யின் (1873) “உள் எல்லை இசைவு” Inner Line Permit-ILP) நிருவாக முறையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் சட்டரீதியான காப்புறுதியையும் பாதுகாப்பதற்காக இந்த விலக்கு நியாயப்படுத்தப்படுகிறது. ஆறாவது அட்டவணை தன்னாட்சி சபைகள் மூலம் பழங்குடியினரின் முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கும், இந்த பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் தனித்துவமான சமூக பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பதற்கும், அங்கு வாழும் மக்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கும் இயற்றப்பட்டது.
அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்துக்கு இந்திய குடிமக்கள் உட்பட எவரும் நுழைவதை ‘உள் எல்லை இசைவு’ (ILP) முறை கட்டுப்படுத்துகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ஒரு சட்டவிரோதக் குடியேறி குடியுரிமையைப் பெற்றவுடன், அவர் அல்லது அவள் மற்ற இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும் அதே கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு குடியுரிமைத் திருத்த மசோதா (CAB) எதற்காக விலக்களிக்கிறது என்பதை ‘நோக்கம் மற்றும் நியாய அறிக்கை’ (SOR) விளக்கவில்லை.
[டிசம்பர் 9 ம் தேதி, நாகாலாந்து அரசாங்கம் ‘உள் எல்லை இசைவு’(ILP) நிருவாக முறையை திமாபூர் மாவட்டம் வரை விரிவுபடுத்தியது. அதுவரை திமாபூர் அம்மாநிலத்தில் ‘உள் எல்லை இசைவு’(ILP) முறையின் கீழ் இல்லாத ஒரே மாவட்டமாக இருந்தது. டிசம்பர் 11 அன்று, இந்திய ஜனாதிபதி மணிப்பூர் மாநிலம் முழுதையும் உள்ளடக்கும் வகையில் ‘உள் எல்லை இசைவு’(ILP) நிருவாக முறையை விரிவுபடுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்.]
ஒரு ஆண் அல்லது பெண், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தால் (அதாவது, அந்த நபர் இந்தியாவின் முன்னாள் குடிமகனாக இருந்திருந்தால் அல்லது அவ்வாறு இருந்தவரின் வாரிசாக இருந்தால்) அல்லது ஒரு இந்திய வம்சாவளி வந்தவரை துணைவராகக் கொண்டிருந்தால் ஒரு அயல்நாட்டவர் இந்தச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் அயல்நாட்டு குடிமகனாக (OCI) பதிவு செய்து கொள்ளலாம். அதிக முறை வருகை, பல்நோக்கு வாழ்நாள் நுழைவிசைவு  [Multipurpose Lifelong Visa], இந்தியாவில் நீண்ட காலம் தங்குவதற்கான வெளிநாட்டவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு, வேளாண்மைக்குரிய அல்லது தோட்டப் பண்ணைகள் தொடர்பானச் சொத்துக்களை விலைக்கு வாங்கும் உரிமை தவிர்த்து நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு [NRI] நிகரான சம அந்தஸ்து போன்ற சலுகைகள் அத்தகைய அயல்நாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.மத்திய அரசு அறிவித்த எந்தவொரு சட்டத்தையும் ஒரு நபர் மீறியிருந்தால் அட்டைதாரரின் கருத்தை கேட்க ஒரு நியாயமான வாய்ப்பை வழங்கிய பின்னர், இந்தியாவின் அயல்நாடு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இம்மசோதா திருத்துகிறது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அயல்நாட்டு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்ய 1955 சட்டம் ஏற்கனவே வழங்கியபோது, இந்த ஷரத்தை சேர்க்க வேண்டியதற்கான காரணத்தை இந்தச் சட்டத்தின் ‘நோக்கம் மற்றும் நியாய அறிக்கை’(SOR) விளக்கவில்லை. இது சட்டமன்றத்தின் அதிகப்படியான அதிகாரமளிக்கும் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக மைய அரசால் அறிவுறுத்தப்பட்டு அயல்நாட்டு குடிமகனுக்கான(OCI) பதிவை ரத்து செய்வதற்கு பயன்படும் சட்டங்களின் தன்மை குறித்து எந்த வழிகாட்டலையும் குடியுரிமைத் திருத்த மசோதா(CAB) வழங்கவில்லை.
சட்டவிரோதக் குடியேறிகளில் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அவர்களின் பிறப்பிடம், மதம், இந்தியாவில் நுழைந்த தேதி மற்றும் இந்தியாவில் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்த மசோதாவின் (CAB) அணுகுமுறை கடுமையான அரசியலமைப்பு சவாலுக்கு உட்பட்டது. இத்தகைய வேறுபடுத்தும் காரணிகள் நியாயமான குறிக்கோளிற்கு உதவும் வகையில் அதாவது இந்த மசோதா அடைய விரும்பும் இலக்கிற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதே முதன்மையான மற்றும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக இருந்தால், குடியுரிமை திருத்த மசோதா (சிகிஙி) குறிப்பிட்ட நாடுகளையும், மதத்தையும் தெரிவுசெய்து உள்ளடக்கியிருப்பது மேலும் அதே நோக்கத்தின் அடிப்படையில் சேர்ப்பதற்கு தகுதியுள்ள மற்றவர்களை விலக்கி வைத்ததன் மூலம், பாகுபாடு காட்டாத கொள்கையை  [Non-discrimination Policy] பூர்த்தி செய்வதற்கான சாத்தியப்பாட்டை இழந்தது. இந்த மதங்கள் மற்றும் மூன்று நாடுகள் குறித்து தற்போது மத்திய அரசால் முன்வைக்கப்படும் நியாயவாதம் பலருக்கு நம்பிக்கை அளிக்கவில்லை, மேலும் அரசியலமைப்பின் அடிப்படையில் சரியான காரணத்தை வழங்கவில்லை.
மூன்று நாடுகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது இந்தியாவின் ஆட்சிப் பகுதிக்குள் உள்ள சட்டங்களின் கீழ் சமமான பாதுகாப்பு போன்ற உரிமைகள் வழங்கப்படாதது குறித்தும், மேலும் இந்த மசோதாவின் வெளிப்படையான தெரிவிக்கப்பட்ட நோக்கத்திற்காக, அதாவது, அண்டை நாடுகளில் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பதனை நிறைவேற்ற இத்தகையவர்களின் புறக்கணிப்பு எவ்வாறு சேவை செய்கிறது என இவர்கள் கேள்வி எழுப்பலாம். இந்தியாவில் குடியுரிமைக் குறித்த முக்கியமான அறிஞரான அனுபமா ராய் கருத்துப்படி, மத ஒடுக்குமுறை வகைபாட்டிற்கான ஒரு நியாயமான அடிப்படையாக இருந்தாலும், இந்திய குடியுரிமையின் அஸ்திவாரங்களான மதச்சார்பின்மை மற்றும் பாகுபாடற்ற குடியரசுத் தன்மை போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இதைப் புகுத்த முடியாது. அரசியலமைப்பின் நியாயமுறைகள் ஒருபுறம் இருக்க, ஒரு சட்டத்தின் செல்லுபடித் தன்மையைச் சோதிக்க சமீப காலங்களில் நீதிமன்றங்களையே பெருமளவில் நம்ப வேண்டிய நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பிரண்ட்லைன், ஜனவரி 03, 2020
வி.வெங்கடேசன்
சமரன் 
ஜனவரி 2020
=======================================================================================================
பிற்சேர்க்கை -2 

CAA & NRC  II: அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவு பற்றிய
கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்
(இது ஒரு மொழி பெயர்ப்பு கட்டுரையாகும். சமரன் நிலைப்பாட்டிலிருந்து
விமர்சன பூர்வமாக படிக்குமாறு வாசகர்களைக் கோருகிறோம் - ஆசிரியர்.)
அசாம் என்.ஆர்.சிக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.ஐ.சி ஆகியவற்றின் கீழ் “சந்தேகத்திற்கிடமான குடியுரிமை” அல்லது “சட்டவிரோதமாகக் குடியேறியவர்” என்பதற்கான அடையாள செயல்முறை தயாரிக்கப்படுவது குறிப்பிட்டதல்ல, இது தன்னிச்சையான மற்றும் தவறான பயன்பாட்டிற்கான மகத்தான வாய்ப்பாக அமையக் கூடும். மேலும் இவை அனைத்தும் முஸ்லிம்களை குறிவைத்து, அவர்களை வடிகட்டுவதற்கான செயல்பாடேயாகும்.
இப்போது 2019 ஆம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிர்ப்புக்களும், எதிரான போராட்டங்களும் இதுவரை பரவியுள்ள நிலையில் அதை ஒடுக்க, தடை உத்தரவுகளாளும் (பிரிவு 144) மற்றும் இணையதள பணிநிறுத்தங்களாளும் அரசு செய்துவருகிறது. இதன் மூலம் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளதால், இந்தச் சட்டங்களைப் பற்றிய உண்மையான பொருள் மற்றும் உட்குறிப்பு குறித்து நிறைய குழப்பங்கள் பரவியுள்ளன. இந்த சட்டம் மற்றும் மக்கள் தொகைப் பதிவு (PR), தேசிய மக்கள் தொகைப் பதிவு (NRC), குடிமக்களின் தேசியப் பதிவு (NRC) மற்றும் இந்திய குடிமக்களுக்கான தேசியப் பதிவு (NRIC) உடனான அதன் இணைப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அரசாணையில் அறிவிப்புகள், சட்டங்கள் மற்றும் விதிகள் எவை எவை என்பதன் மூலம் இவற்றில் உள்ள தாக்கங்கள் மற்றும் இணைப்புகள் குறித்த ஒரு உண்மையான சோதனை நிலைபாடு இல்லை மற்றும் இதைப் பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு குழப்பத்தின் மூடுபனியை அழிக்க அரசு முயல்கிறது.
கட்டுக்கதை 1: கூறியதாவது, நாடு முழுவதும் NPR அறிவிக்கப்படவில்லை. இது அதிகாரப்பூர்வ அரசாணையில் மக்கள் தொகைப் பதிவு அறியப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: ஜூலை 31, 2019 இன் அரசாணை அறிவிப்புடன் நாடு தழுவிய என்.ஆர்.சி.யைத் தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
“குடியுரிமை (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள், 2003இன் விதி 3இன் துணை விதி (4)ஐ பின்பற்றி, மக்கள் தொகைப் பதிவு (PR) மற்றும் களப்பணி ஆகியவற்றைத் தயாரிக்கவும் புதுப்பிக்கவும் மத்திய அரசு இதன்மூலம் முடிவு செய்கிறது. பொதுவாக உள்ளூர் பதிவாளரின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் தொடர்புடைய தகவல்களை சேகரிப்பதற்காக அசாம் தவிர நாடு முழுவதும் வீடு வீடாக கணக்கிடப்படுவது 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும்”.
வரைவு 1: NRC அறிவிக்கப்பட்டது, ஆனால் ழிஸிமிசி என்று அழைக்கப்படுகிறது:
அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள், 2003, (2003-ன் விதிகள்), “என்.ஆர்.ஐ.சி மற்றும் அதன் துணை விதி (4)” தயாரித்தல் “இந்திய குடிமக்களின் தேசியப் பதிவு”.
வரைவு 2: 2003 சட்டத்தின் 3 விதிகள்
இது நாடு தழுவிய என்.ஆர்.சி அறிவிக்கப் படவில்லை என்ற சந்தேகங்களை நீக்க வேண்டும். என்.ஆர்.சி என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக - இது அசாமுக்கு குறிப்பிட்டது மற்றும் 1985 ஆம் ஆண்டின் அசாம் ஒப்பந்தம் மற்றும் உச்ச நீதிமன்றம் (SC)-இது என்.ஆர்.ஐ.சி என்று அழைக்கப்படுகிறது மற்றும் இரண்டையும் வேறுபடுத்துவதற்கு அசாமை விலக்குகிறது.
கட்டுக்கதை 2: மக்கள் தொகைப் பதிவு மற்றும் என்.ஆர்.ஐ.சி இணைக்கப்படவில்லை.
உண்மைச் சோதனை: அவை இணைக்கப் பட்டுள்ளன.
“மக்கள் தொகைப் பதிவு” அதிகாரபூர்வ அரசாணை அறிவிப்பில் என்.ஆர்.ஐ.சி தயாரிப்பதற்கான முதல் படியைக் குறிப்பிடுகிறது. 2003 விதிகளின் விதி 3இன் துணை விதி (5) இவ்வாறு கூறுகிறது: “இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் மக்கள் பதிவேட்டில் இருந்து சரியான சரிபார்ப்பிற்குப் பிறகு நபர்களின் விவரங்கள் இருக்கும்”.
வரைவு 3: PR / NPR மற்றும் NRC / NRIC க்கு இடையிலான இணைப்பு
“2020 ஏப்ரல் முதல் நாள் முதல் 2020 செப்டம்பர் 30 வரை” மக்கள்தொகை பதிவிற்கான வீடு வீடாக கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அரசாணை அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இது என்.ஆர்.ஐ.சிக்கு முதல் படியாகும், ஏனெனில் துணை விதி (5) இது மக்கள் தொகைப் பதிவின் “சரியான சரிபார்ப்பிற்குப் பிறகு” தயாரிக்கப்படும் என்று கூறுகிறது.
மக்கள் தொகைப் பதிவு மற்றும் இந்திய குடிமக்களின் தேசியப் பதிவு (NRIC) என்றால் என்ன?
குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள், 2003 மக்கள் தொகைப் பதிவை இவ்வாறு வரையறுக்கிறது:
“மக்கள் தொகைப் பதிவு என்பது ஒரு கிராமம் அல்லது கிராமப்புறம் அல்லது நகரம் அல்லது வார்டு அல்லது ஒரு நகரத்தில் அல்லது நகர்ப்புறத்தில் உள்ள ஒரு வார்டுக்குள் உள்ள வார்டு அல்லது எல்லை நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் (குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரலால் வரையறுக்கப்பட்டுள்ளது) பொதுவாக வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவு”.
என்.ஆர்.ஐ.சி பற்றி, அது பின்வருமாறு கூறுகிறது:
“இந்திய குடிமக்களின் தேசியப் பதிவு என்பது இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழும் இந்திய குடிமக்களின் விவரங்களைக் கொண்ட பதிவு”. என்.ஆர்.ஐ.சி நான்கு துணைப் பகுதிகளாகப் பிரிக்கப்படும்: (அ) இந்திய குடிமக்களின் மாநிலப் பதிவு (ஆ) இந்திய குடிமக்களின் மாவட்டப் பதிவு (இ) இந்திய குடிமக்களின் துணை மாவட்டப் பதிவு மற்றும் (ஈ) இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவு மற்றும் “குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரலுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு விவரங்களைக் குறிப்பிடலாம்”. (விதி 3)
மக்கள் தொகைப் பதிவு, என்.ஆர்.ஐ.சி க்கு எவ்வாறு மாற்றப்படும்?
விதி 4 இன் துணை விதி (3) கூறுவது: இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேடு தயாரித்தல் மற்றும் பதிவேட்டில் சேர்ப்பதற்கான நோக்கங்களுக்காக, மக்கள்தொகை பதிவேட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் தனிநபரிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உள்ளூர் பதிவாளரால் அல்லது குடிமக்கள் பொது பதிவு-பதிவாளர் ஜெனரலால் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் உதவியால் சரிபார்க்கப்பட்டு ஆராயப்படும்.
“சந்தேகத்திற்குரிய குடியுரிமை”யை அடையாளம் கண்டு சரிபார்க்கும் செயல்முறை இன்னும் வழங்கப்படவில்லை 2003 விதிகளின் விதி 4இன் துணை விதி (4)-இல் இந்த சரிபார்ப்பு மற்றும் ஆய்வு செயல்பாட்டின் போது என்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவுபடுத்துகிறது: “சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, ​​குடியுரிமை சந்தேகத்திற்குரிய நபர்களின் விவரங்கள் உள்ளூர் பதிவாளரால் மக்கள் தொகைப் பதிவேட்டில் பொருத்தமான குறிப்புடன் மேலதிக விசாரணைக்கு உள்ளிடப்படும், மேலும் சந்தேகத்திற்கிடமான குடியுரிமை ஏற்பட்டால், தனிநபருக்கு அல்லது குடும்பத்திற்கு ஒரு தகவல் தெரிவிக்கப்படும் சரிபார்ப்பு செயல்முறை முடிந்தவுடன் உடனடியாகச் சார்பு வடிவம் குறிப்பிடப்பட்டுள்ளது”. எனவே, செயல்முறைத் தெளிவாக உள்ளது; “சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்” மக்கள் தொகைப் பதிவேட்டில் மேலதிக விசாரணைக்கு குறிக்கப்படுவார்கள், பின்னர் குடும்ப உறுப்பினர்களுக்கு “ஒரு குறிப்பிட்ட சார்பு வடிவத்தில்” தெரிவிக்கப்படும்.
(அ) “சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்” எந்த அடிப்படையில் அடையாளம் காணப்படுவார்கள் அல்லது குறிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, (ஆ) “குறிப்பிட்ட முறையான படிவம்” இன்னும் பொது களத்தில் இல்லை. இவை விளக்கப்பட்டு வெளியிடப்படும் வரை செயல்முறை விசாரணை ரகசியமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
2003 விதிகளின் நோக்கம் என்.ஆர்.ஐ.சி திட்டத்தைச் செயல்படுத்த நடைமுறை வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை வழங்குவதாகும். குறிப்பிட்ட செயல்முறையின் இல்லாமை உள்ளூர் அதிகாரிகளின் விருப்பங்களையும் ஆர்வங்களையும் பொறுத்து தன்னிச்சையாக பாதிக்கப்படக்கூடியது என்பதை தெளிவுபடுத்துகிறது. இது இப்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் என்.ஆர்.ஐ.சி ஜூலை 2019 அரசாணை அறிவிப்புடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விதி 4 இன் துணை விதி (5) “சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்” என்று துணை மாவட்டத்திலோ அல்லது குடிமக்களின் பதிவின் தாலுகா பதிவாளரிடமோ கேட்கப்படும் என்று கூறப்படுவதால், அவர்களை என்.ஆர்.ஐ.சி. பின்பற்ற வேண்டிய செயல்முறைக்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்று குறிப்பிடவில்லை. இதற்கு நேர்மாறாக, அஸ்ஸாம் விஷயத்தில், ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பைத் தேடும் முழு செயல்முறையும்-வெளிநாட்டினரின் தீர்ப்பாயத்திற்கு முன்பும் அதற்கு அப்பாலும் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகுக்கும் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் வெளிப்படையானவை.
கட்டுக்கதை 3: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021இன் PR/ NPR & NRIC பகுதி.
உண்மைச் சோதனை: இல்லை, இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேறு (நோக்கம்).
என்.ஆர்.ஐ.சி செயல்பாட்டில் அடுத்தது: “இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டின் வரைவு துணை மாவட்டம் அல்லது தாலுகா பதிவாளரால் வெளியிடப்படும், ஏதேனும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அல்லது சேர்ப்பதற்காக அழைக்கப்படுவார்கள்...” (2003 விதிகளின் விதி 4 இன் துணை விதி (6) (அ)).
நபர்களின் பெயர்கள், அவர்களின் முகவரி அல்லது பிற விவரங்கள் போன்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை அல்லது வேறு எந்த செயல்முறைக்கும் பயன்படுத்தப்படவில்லை. தவிர, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேறு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது-1948 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டம்.
ஆனால் பி.ஆர்/என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.ஐ.சி ஆகியவை 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (2003இன் சி.ஏ.ஏ) மற்றும் 2003 விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுக்கதை 4: பி.ஆர்/என்.பி.ஆர்&என்.ஆர்.ஐ.சி UPA அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இது வாஜ்பாய் ஆட்சி 2003இல் திருத்தத்துடன் தொடங்கியது.
1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் மக்கள் பதிவு மற்றும் என்.ஆர்.ஐ.சி எப்போது, ​​எப்படி வந்தது?
2003ஆம் ஆண்டில், முந்தைய என்.டி.ஏ ஆட்சியின் போது, ​​1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் 2003 ஆம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் (2003ஆம் ஆண்டின் சிஏஏ) திருத்தப்பட்டது (அ) “சட்டவிரோதமாகக் குடியேறியவர்” மற்றும் (ஆ) (என்ஆர்ஐசி). 2003ஆம் ஆண்டின் CAA இன் பிரிவு 2 கூறுகிறது: “சட்டவிரோதமாகக் குடியேறியவர்” என்பது இந்தியாவுக்குள் நுழைந்த ஒரு வெளிநாட்டவர் சார்பில் (i) செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் மற்றும் வேறு எந்த ஆவணமும் அல்லது அதிகாரமும் இல்லாமல் எந்தவொரு சட்டத்தாலும் குறிப்பிடப்படலாம்; அல்லது ii) செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் மற்றும் அந்த சார்பாக எந்தவொரு சட்டத்தினாலும் அல்லது கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிற ஆவணங்கள் அல்லது அதிகாரத்துடன் ஆனால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அதில் இருக்கும் “(பிரிவு 2)
2003 ஆம் ஆண்டின் CAA ஆல் பிரிவு 14கி சேர்க்கப்பட்டபோது NRIC வந்தது.
2010-11ஆம் ஆண்டில் UPA ஆட்சியின் போது NPR செயல்முறை முதன் முதலில் தொடங்கப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஆதார் திட்டத்துடன் (இந்தியர்களுக்கான தனித்துவமான அடையாளம்) ஈடுபட்டதால், அது ஒருபோதும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறவில்லை NPR  2015இல் புதுப்பிக்கப்பட்டது, ஆனால் மீண்டும், அது NRICக்கு முன்னேறவில்லை.
மக்கள் தொகைப் பதிவு அல்லது NPR- குடியுரிமைச் சட்டத்தில் இல்லை:
சுவாரஸ்யமாக, பிரதானச் சட்டத்தில் மக்கள் தொகைப் பதிவேட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை-1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் இப்போதும் உள்ளது, அதாவது 2003 திருத்தத்திற்குப் பிறகும்.
இது 2003 விதிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.
2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணியில் என்.ஆர்.ஐ.சி எவ்வாறு மாநிலத்தின் பின்புறக் கதவு வழியாக பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மேற்கு வங்கத்தின் சிவில் உரிமைகள் அமைப்பான ரன்ஜித் சுர்-ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் (ஏபிடிஆர்). 2003 விதிகள் மூலம் மட்டுமே நாடு தழுவிய சட்டரீதியான சக்தியை உருவாக்க முடிவும்.
பிரதான சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு இல்லாததால், பல வழக்கறிஞர்களையும் கலந்தாலோசித்ததாக அவர் கூறுகிறார். ஏபிடிஆரின் அம்பலத்தைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய மக்கள் தொகைப் பதிவு அல்லது என்.பி.ஆர் பணிகளை நிறுத்தி வைத்தது. பீகார், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இப்போது இணைந்து NPR மற்றும் NRICக்கு தங்கள் எதிர்ப்பை அறிவித்துள்ளனர்.
கட்டுக்கதை 5: NPR, NRC மற்றும் CAA இடையே எந்த தொடர்பும் இல்லை. உண்மைச் சோதனை: அவை அனைத்தும் இணைக்கப்பட்டவை மற்றும் முஸ்லிம்களை வடிகட்டுவதற்கான செயல்பாடேயாகும்.
நாடு முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பின்வாங்குவதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் இணைக்கும் பொது உரைகளை ஒருவர் புறக்கணித்தாலும், “சட்டவிரோத குடியேறுபவர்” மூலமாகவும், என்.ஆர்.ஐ.சி 2003 ஆம் ஆண்டின் CAA மூலம் கொண்டு வரப்பட்டதன் மூலமாகவும் ஒரு தெளிவான இணைப்பு நிறுவப்பட்டுள்ளது. CAA (2019 இன்)-சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது- “சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு” குடியுரிமை வழங்குவதிலிருந்து முஸ்லிம்களை வடிகட்டுகிறது என்பதற்கு இப்போது அதிகச் சான்றுகள் உள்ளன.
பிசினஸ் டுடே அணுகப்பட்ட ஆவணங்கள்:
சிவப்பு நிறத்தில் சூழப்பட்ட சிகிகி தொடர்புடைய ஆவணங்களுடன் கீழ்கண்டவாறு மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன-மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிவான்களுக்கும் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிவான்களுக்கும் (டி.எம் மற்றும் ஏ.டி.எம்) விநியோகிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் “தேசிய மக்கள் தொகைப் பதிவு-2020 (ழிறிஸி-2020)” தயாரிக்கும் போது மக்களிடமிருந்து பெற வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ளன.
பக்கம் 2இல், நெடுவரிசை 3 “தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம், இந்தியாவுக்குள் இருந்தால், மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரை எழுதுங்கள். இந்தியாவுக்கு வெளியே இருந்தால், நாட்டின் பெயரை எழுதி வைக்கவும் (பின்னர் காலியாக நிரப்பப்பட வேண்டும்) மாவட்டத்திற்கு”.
வரைவு 4: கொடியது கொடுங்கள்: NPR-2020 “சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை” அடையாளம் காண முற்படுகிறது
NPR-2020 இன் நோக்கம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காண்பது என்பது மட்டுமல்ல, கொடியசெயலாக, இது முடியும், அனைத்து முஸ்லிம்களும் CAA (2019 இன்) மூலம் வடிகட்டப்பட்டு நாடு முழுவதும் தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். உண்மையில், மக்கள் தொகைப் பதிவேடு அல்லது என்.பி.ஆர் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அரசாணை அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் (ஜூலை 31, 2019 இல்), ஒரு முக்கிய தேசிய நாளேடு வெளியிட்டது, மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தலா ஒரு தடுப்பு மையத்தையாவது அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு (தடுப்பு மையம்) வீடு என்று.
அசாமில் என்.ஆர்.சி தேர்வில் தோல்வியுற்றவர்கள் அல்லது இந்தியாவில் வேறு எங்கும் என்.ஆர்.ஐ.சி தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, நாடு முழுவதும் குறைந்தது 12 தடுப்பு மையங்கள் தயார் செய்யப்படுகின்றன. அவைகளான, அசாமில் 10, நவி மும்பையில் மற்றும் பெங்களூர் (நெலமங்களா) கிராமத்தில் தலா ஒன்று.
ஆவணங்கள் அல்லது தகவல்களில் தெளிவு தேவையில்லை: 12, 14 அல்லது 15 செட்.
மேலே காட்டப்பட்டுள்ள NPR-2020 இல் தந்தை மற்றும் தாய் பிறந்த இடம் பற்றிய தகவல்களைத் தேடுவது 2003 விதிகளில் இல்லை.
ஏனெனில், 2003 விதிகள் 12 தகவல்களைத் தேடுகின்றன: “இது (மக்கள் தொகைப் பதிவேட்டில்) 12 விவரங்களைக் கொண்டிருக்கும்: பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், குடியிருப்பு முகவரி (தற்போதைய மற்றும் நிரந்தர), திருமண நிலை (எப்போதாவது திருமணம் செய்து கொண்டால், மனைவியின் பெயர்), காணக்கூடிய அடையாளக் குறி, குடிமகனைப் பதிவுசெய்த தேதி, பதிவுசெய்த வரிசை எண் மற்றும் விதி 13 இன் கீழ் வழங்கப்பட்ட தேசிய அடையாள எண். (2003 விதிகளின் விதி 3 இன் துணை விதி 3). மறுபுறம், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் என்.பி.ஆர் பற்றிய விவரங்களை வழங்க அதன் வலைதளத்தை புதுப்பித்தது. இது “தேசியம்” உட்பட 15 செட் தகவல்களைத் தேடியது, ஆனால் “தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம்” அல்ல.
என்.பி.ஆர் -2020 செயல்முறை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கியுள்ளது: என்.ஆர்.ஐ.சி-க்கு முதல் படியாக:
ஜூலை 31, 2019இன் அரசாணை அறிவிப்பு மட்டுமல்ல, NPR இன் தொடக்கமும் செய்தித்தாள்களால் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11, 2019இன் பி.டி.ஐ அறிக்கை கூறியது: “ஆர்ஜிஐ ஏற்கனவே 1,200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40 நகரங்கள் மற்றும் நகரங்களில் 5,218 கணக்கீட்டுத் தொகுதிகள் மூலம் ஒரு பைலட் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, அங்கு அது மக்களிடமிருந்து பல்வேறுத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. இறுதி கணக்கீடு ஏப்ரல் 2020இல் தொடங்கும் மற்றும் செப்டம்பர் 2020 இல் முடிவடையும்”.
அது மேலும் கூறியது: “தேசிய பயிற்சியாளர்களின் பயிற்சி 2019 அக்டோபர் 14 முதல் தொடங்க உள்ளது, மேலும் பயிற்சியின் அட்டவணை குறித்து மூத்த மாநில அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது”.
மேற்கு வங்கத்தில் இது காணப்பட்டதால் D.M மற்றும் ADMகளுக்கான பயிற்சி டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டது. அவர்கள் இப்போது மற்ற அதிகாரிகளின் பயிற்சியாளர்களாக இருப்பார்கள், அவர்கள் அடி மட்டத்திலும் அதற்கு மேலாகவும் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
ஆகவே, என்.பி.ஆர் அல்லது என்.ஆர்.ஐ.சி/என்.ஆர்.சி செயல்முறை அறிவிக்கப்படவில்லை அல்லது தொடங்கப்படவில்லை என்று சொல்வது உண்மை இல்லை. அது தொடங்கியுள்ளது. அடுத்து வீடு வீடாக கணக்கீடு ஏப்ரல் 2020 முதல் தொடங்கும்.
(நன்றி: பிசினஸ் டுடே, டிசம்பர்-24, 2019)
சமரன்
ஜனவரி 2020