சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது கர்நாடக அரசு - ஐடி நிறுவனங்களில் 14 மணி நேரம் பணி: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

தினகரன் - தீக்கதிர்

சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது கர்நாடக அரசு - ஐடி நிறுவனங்களில் 14 மணி நேரம் பணி: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தி சட்டத்திருத்தம் மேற்கொள்ள திட்டமிடும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐடி நகரமாக பெங்களூரு திகழ்கிறது. மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் பெங்களூருவில் தான் உள்ளன. கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருந்தது.

கர்நாடகாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் நிர்வாகப்பணியில் 50%, நிர்வாகமல்லாத பணிகளில் 75% மற்றும் சி, டி பிரிவு பணிகளில் 100% கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் திறமை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் இந்த இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாநில அரசு இந்த முடிவிலிருந்து பின் வாங்கியது. அந்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டத்தையும் கைவிட்டது.

ஆனால், அதை கைவிட்ட கர்நாடக அரசு, ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தி சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கையிலெடுத்துள்ளது. கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961-ல், ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் அந்த கூட்டத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்தது. இது மனிதத்தன்மையற்ற செயல் என்று மிகக்கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது.

இதுதொடர்பாக ஐடி ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே ஐடி ஊழியர்கள் பணிச்சுமை, கூடுதல் நேரம் வேலை செய்வதால் மன அழுத்தம் மற்றும் உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். 9 மணி நேரம் வேலை எனும்போதே அதைவிட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரித்தால், அதைவிட அதிக நேரம் வேலை செய்ய வேண்டிவரும் என்பதால் அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் கர்நாடகாவில் ஐடி துறையில் பணியாற்றும் 20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது ஐடி-யில் 3 ஷிப்ட்டுகளாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை அதிகப்படுத்தினால் ஷிப்ட் இரண்டாக குறையும். எனவே பலர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே இந்த சட்டத்திருத்தத்தை உடனே மாநில அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் 20 லட்சம் ஐடி ஊழியர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐடி ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அரசு முயற்சிப்பது போல், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணி நேரம் என்றால், ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் ஆகும். இப்போது ஒரு வாரத்திற்கான பணி நேரம் சட்டப்படி 45 மணி நேரமாக இருக்கிறது. அதை 70 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. அண்மையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், கர்நாடக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்தது. ஆனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் அரசின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

- தினகரன்

https://m.dinakaran.com/article/News_Detail/1410075

==============================================

2

பெங்களூரு இந்தியாவின் சிலிகான் வேலி (அதிக ஐடி நிறுவனங்களை கொண்ட அமெரிக்க நகரம்) என்ற பெருமையை பெற்றுள்ளது கர்நாடக தலைநகர் பெங்களூரு. அங்கு 67,000க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அதில், கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறு வனங்கள் சட்டம் 1961-ஐ திருத்துவது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாகவும், இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம்  + 2 மணி நேரம் கூடுதல் பணி) என திருத்தம் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை ஐடி  நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, ​​தொழிலாளர் சட்டங்கள் 12 மணி  நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல்  நேரம்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன.

இதுவே மிகக் கடுமையான ஆனால், ஐடி துறையின் புதிய முன்மொழிவில்,  “ஐடி, ஐடிஇஸ், பிபிஒ (IT/ITeS/BPO) ஆகிய துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு  நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை  செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனு மதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்க வேண்டும்” என தகவல் வெளியாகி யுள்ள  நிலையில், கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படலாம்; அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  வேலை நேரத்தை நீட்டிக்கும் ஐடி நிறுவனங் களின் முன்மொழிவுக்கு, ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. கேஐடியு கண்டனம் ஐடி நிறுவனங்களின் கூடுதல் வேலை நேர முன்மொழிவுக்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான கேஐடியு (KITU) கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக கேஐடியு வெளியிட்டுள்ள  அறிக்கையில், “வேலை நேரம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திருத்தம் 3 ஷிப்ட்களாக உள்ளது. ஆனால் புதிய முன் மொழிவு 2 ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறு வனங்களை செயல்பட அனுமதிக்கும்.  இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் உண்டு. ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளையும், 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர் கொள்கின்றனர். இதற்கிடையே வேலை நேரத்தை மேலும் அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். ஊழியர்களை மனி தர்களாகப் பார்க்காமல் அரசு வெறும்  இயந்திரங்களாகப் பார்க்கிறது. தொழிலாளர் களை மனிதர்களாகக் கருத கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இந்தச் சட்டத் திருத்தம் காட்டுகிறது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை அரசு கருதுகிறது” என்று கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது

- தீக்கதிர்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு