பாவம் சாம்சங் தொழிலாளர்கள்! சிபிஐ சிபிஎம் கட்சிகளின் திமுக விசுவாசம்!!

சத்திய நாராயணன்

பாவம் சாம்சங் தொழிலாளர்கள்! சிபிஐ சிபிஎம் கட்சிகளின் திமுக விசுவாசம்!!

போராடுன ஆயிரத்து ஐநூறு நபர்கள்ல நூத்தி ஐம்பது பேரை தான் சாம்சங் உள்ளே அனுமதித்திருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் பதில் என்னவென்றால் நெடு நாளைக்கு ஒரு எம்ப்ளாயி லீவ் எடுத்தால் அவருக்கு இண்ட்ஸ்ட்ரியல் டிரெயினிங் தர வேண்டும் என்பதே.

அதாவது 1500 நபர்களை 150 ஆக பிரித்து டிரெய்னிங் தருவார்கள். 

ஆக 1500 நபர்களும் ஒன்றாக வேலையில் சேர பத்து மாத காலம் ஆகும்.

போராட்டத்தில் முனைப்பாக இருந்த நபர்களை பிரித்து அவர்களை கடைசி செஷனிலோ அல்லது தனித்தனியாகவோ தான் டிரெய்னிங் தருவார்கள்.

டிரெய்னிங் ஆனது Technical, Mentor, HR என பிரித்து தரப்படும்.

போராடிய 1500 தொழிலாளர்களும் சாம்சங் நிறுவனத்தில் பல வருடங்களாக பணி புரிந்தவர்கள். அவர்களுக்கு Technical பயிற்ச்சி தேவையே இல்லை.

ஆக Mentor மற்றும் HR நபர்களே போராடிய தொழிலாளர்களுக்கு அதிக நேர பயிற்ச்சி என்கிற பெயரில் மூளை சலவை செய்வார்கள்.

மசிகிற நபர்களுக்கு அவரவர் கல்வி தகுதி அடிப்படையில் சூப்பர்வைசர், ஃபோர்மேன், அஸிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளை கொடுத்து ஸ்டாப் கேட்டகிரியாக மாற்றி சங்கத்தில் இருந்து ரிமூவ் செய்யப்படுவார்கள்.

அப்படி மாறியவர்களை பார்த்த மற்ற தொழிலாளர்கள மனதில் ஏற்படும் சலனத்தை நிர்வாகம் தனக்கு சாதகமாக மாற்றி அவர்களை கோள்மூட்டும் நபர்களாக உருமாற்றி தொழிலாளர் ஒற்றுமையை சீர்குலைகும்.

படியாத தொழிலாளர்களை ரிட்டையர்மெண்ட் வரை  வேலைக்கு வர தேவையில்லை, ஆனால் சம்பளம், போனஸ், படி உயர்வு மாதாமாதம் வரும் அதாவது Silent Employe or Un direct employe ஆக நிர்வாகம் மாற்றும்.

அதனால் தொழிற்சாலை ஓர்மை சீர்குலைக்கப்படும்.

அதற்கும் படியாத நபர்களை குறைத்து சங்கத்தின் strength குறைக்கப்பட்டு சங்கம் ஃவீக் ஆகும்.

இதற்காகவே MBA(Hr and Labours Law) படித்த அநேக கை தேர்ந்த மேலாளர்கள் உண்டு.

இவ்வளவு தான் மேட்டர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் அரங்கமான CITU முன்னெடுத்த போரட்டத்தில் திருமா நடு நாயகமாக உட்காந்து பேட்டி கொடுத்த நிகழ்வுகள் இப்படியான முடிவை நோக்கி நகரும் என்பது அப்போதே தெரியும்.

மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உள் மோதலை சரியாக பயன்படுத்திக் கொண்டது திமுக சர்க்கார்.

மார்க்ஸிஸ்ட் கட்சிக்கோ அதன் அரங்கமான CITUவிற்க்கோ தனியாக மாநிலம் முழுதும் ஒரு ஆர்ப்பாட்டம் செய்து அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்த திராணி இல்லை.

நாம் தமிழர் கட்சியினரும், திமுகவினரும் "கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பொட்டி வாங்கிட்டு உங்கள தெருவுல விட்றுவான்..." என்று சொன்ன அவப் பெயரை தான் கடைசியில் தாங்கி நிற்கிறோம்.

பாவம் அந்த தொழிலாளர்கள்.

- சத்திய நாராயணன் (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02SBb6noZWbBgX3DuKcm9syjmheHCvxqmpNuTxt8LDk8MsgbQaXhH5JC5QZ7wEYoGCl&id=100076536180950&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு