பொதுப் போக்குவரத்தை குவாட் திட்டங்களுக்கு பலியிடும் திமுக அரசு
Subbaraj V
பொதுப் போக்குவரத்தில் Gross Cost Contracting modelஐ திராவிட மாடல் அமல்படுத்தப் போகிறது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மூடு விழா நடத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 400 சாதாரண பேருந்துகள் மற்றும் 100 ஏசி பேருந்துகள் என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகளை இயக்க OHM Global Mobility எனும் தனியார் நிறுவனத்துடன் அரசு போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி,
OHM Global Mobility நிறுவனம், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) நிறுவனத்திடம் இருந்து இந்த 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து. பராமரித்து சாலைகளில் இயக்கும்.
இப்பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி, பெரம்பூர் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும்.
ஒரு தடவை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை ஓடும் திறனுள்ள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு ஒவ்வொரு பேருந்தும் 200 கிமீ தூரம் இயக்கப்படும்.
டிப்போக்களில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களின் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை OHM Global Mobility நிறுவனமே கவனித்துக்கொள்ளும். டிரைவர்களையும் அந்த நிறுவனமே நியமித்துக் கொள்ளும்.
அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துநர்களை நியமித்து டிக்கெட் வசூல் செய்யும் வேலையை மட்டும் செய்யும்.
கிமீ ஒன்றுக்கு சாதாரண பேருந்துக்கு 77.16 ரூபாயும், ஏசி பேருந்துக்கு 80.86 ரூபாயும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும். ஒப்பந்தக் காலம் 12 ஆண்டுகள்.
அதாவது…
பெர்மிட், ரூட்டு, லொட்டு லொசுக்கு என பிக்கல் பிடுங்கல் இல்லாமல், ஒரு தனியார் பஸ் போக்குவரத்து நிறுவனம் தொழில் செய்வதற்கு அரசு உறுதுணையாக இருக்கப் போகிறது.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள், சென்னையின் சாலைகளில் இந்த தனியார் நிறுவனம் இயக்கும் மின் பேருந்துகள், அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெயரில் ஓடப் போகின்றன.
இந்தியாவில் இயக்கப்படும் மின்பேருந்துகள் பெரும்பாலும் 200 - 300 KWh திறன் கொண்டவை.
Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME II) என்ற திட்டத்தின்படி, மோடி அரசு மின் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு ஒரு KWhக்கு 20000 ரூபாய் தொடங்கி பேருந்தின் விலையில் 40% வரை மானியம் தருகிறது. இந்த வகைப் பேருந்துகளின் விலை சுமார் 2 கோடி. எனவே பேருந்து ஒன்றுக்கு 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. 300 கோடி முதல் 400:கோடி வரை மோடி அரசின் மானியம் இந்த OHM Global Mobility நிறுவனத்திற்கு கிடைக்கும்.
----------------------------------------------------
மிகமிக….மிக முக்கியமான சங்கதி
அரசு போக்குவரத்துக் கழகம் தனது நிதியில் இருந்து நேரிடையாக மின்பேருந்துகளை வாங்கினால் மத்திய அரசின் மானியம் கிடையாது. GCC model படி, தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் போட்டு வாங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும். அதுவும் அந்த தனியார் நிறுவனத்திற்குத் தான் வழங்கப்படும்.
ஒப்பந்தம் செய்துள்ள இந்த OHM குளோபல் மொபிலிட்டி நிறுவனமானது அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டி (மின் பேருந்துகளை உற்பத்தி செய்யும் துணை நிறுவனம்) நிறுவனங்களின் துணை நிறுவனம் ஆகும்.
- Subbaraj V (முகநூலில்)
https://www.facebook.com/share/p/17nLsmJHit/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு