மோடி ஆட்சியில் நீட் பயிற்சி மையங்களின் அசுர வளர்ச்சி!

கல்வி உரிமைக்கான மேடை

மோடி ஆட்சியில்  நீட் பயிற்சி மையங்களின் அசுர வளர்ச்சி!

2022 ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வந்த பின்பு பா.ஜ.க அண்ணாமலையும், அ.தி.மு.க எடப்பாடியும் நீட் தேர்வு முடிவில் தமிழகம் பிந்தங்கிவிட்டது, அரசுப் பள்ளிகளில்  நீட் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்துவதில் இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள். மாணவர்களில் நலனுக்காகவா? இல்லவே இல்லை. புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தவே. சரியாகச் சொன்னால் நீட் கோச்சிங் செண்டர் நடத்தும் முதலாளிகளின் நலனுக்காத்தான். 

நீட் பயிற்சி கொடுப்பதில் நாட்டிலேயே மிகப்பெரிய மையங்களான ஆலன்(ALLEN), ஆகாஷ்(Aakash), பிட்ஜ்ஜி(FIITJEE) ஆகியவை கடந்த மூன்று நாட்களாக தமிழ் பத்திரிக்கைகளில் எங்கள் மையத்தில் படித்த மாணவர்கள் தான் அகில இந்திய அளவில் முதல் மூன்று மற்றும் 100 க்குள்ளாகவும் தவரிசை பெற்றுள்ளனர் என்று முழு பக்க விளம்பரம் கொடுத்து வருவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இது பெற்றோர்களின் ஆசையைத் தூண்டி அடுத்த ஆண்டுக்கான ஆள்பிடிக்கத்தான்.

இந்த ஆண்டு அகில இந்திய அளவில் முதல் மூன்று தரவரிசை பெற்ற மாணவர்கள் ஒரே நேரத்தில் ஆலன், ஆகாஷ் இரண்டு கோச்சிங் செண்டர்களிலும் படித்துள்ளனர். ஒன்றில் 2 இரண்டு ஆண்டு வகுப்பறை திட்டம், மற்றொன்றில் தொலைதூர படிப்பு திட்டம்.

ஆலன் வகுப்பறை திட்டத்திற்கு ஒரு ஆண்டு கட்டணம் – 5 லட்சம், ஆகாஷ் தொலைதூர படிப்பு திட்டம் ஆண்டுக்கு 3 லட்சம். ஆகமொத்தம் ஒரு மாணவர் இரண்டு ஆண்டுகளுக்கும் 16 லட்சம் செலவு செய்கிறார். 

தவிர ஆலன் அல்லது ஆகாஷ், பிட்ஜ்ஜி போன்ற கோச்சிங் நிறுவனங்கள் பள்ளியுடன் இணைந்து நடத்தும் இண்டகிரேட் கோர்ஸ்-இல் 6 ஆம் வகுப்பில் இருந்து படிக்கிறார்கள். இதற்கு தனிக்கட்டணம்.

தற்போது நாடு முழுவதும் 544 நீட் கோச்சிங் நிறுவனங்கள் உள்ளன. CRISIL  என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 2021 –இல் இந்நிறுவனங்களின் ஆண்டு வருமானம் சுமார் 70 ஆயிரம் கோடிகள் என மதிப்பிடப்படுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 7 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரம் கோடி வருமானம் அதிகரித்துள்ளது என்றால் இதனுடைய கொள்ளையை புரிந்துகொள்ளுங்கள்.

 2021 இல் NATIONAL SAMPLE SERVEY நடத்திய ஆய்வில் ’’பெற்றோர்கள் தங்கள் குடும்ப வருமானத்தில் மாதம் 12% சதவீதத்தை இத்தகைய கோச்சிங்கிற்காக ஒதுக்குகின்றனர் என்கிறது.

 மருத்துவக் கல்விக்கு பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் சேரமுடியாது. அல்லது கோச்சிங், மருத்துவக் கல்வி ஆகியற்றிற்கு கோடிகள் வரை கல்விக்கடன் பெற்றுத்தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நிலை பெற்றோர்களிடையே இயல்பாக்கப்பட்டு வருகிறது.

- கல்வி உரிமைக்கான மேடை

Platform for Right to Education!

(முகநூலிலிருந்து)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு