இன்னுமாடா இது பெரியார் மண்ணு!
கதிர் நிலவன்

எதற்கெடுத்தாலும் " பெரியார் மண்" என்று பேசுவது திராவிட மாடலுக்கு வழக்கமாகி விட்டது.
பெரியார் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பாரதீய சனதாவின் பல்வேறு தமிழர் விரோத திட்டங்களை நிறைவேற்றிட திராவிட மாடல் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றிட மோடியோடு வைத்த இரகசிய குட்டு வெளிப்பட்டவுடன் டங்ங்ஸ்டனை எதிர்ப்பதாக நாடகமாடியதை அறிவோம்.
தற்போது, மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா பிரச்சினையை திராவிட மாடல் அரசு பாரதீய சனதாவிற்கு ஆதரவாக திசை திருப்பி விட்டு விட்டது.
சிக்கந்தர் தர்காவில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஆடு, கோழி பலி கொடுப்பதற்கு தடை விதித்தவர் மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.
அமைதிக்குழு கூட்டத்தில் ஆடு, கோழி பலி கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது இந்து அறநிலையத்துறை.
உயர் நீதிமன்றத்திலும் ஆடு , கோழி பலியிடச் சென்றவர்களை கைது செய்ததாக கூறியதே தவிர, தர்காவின் மரபுரிமையை பற்றி திராவிட மாடல் அரசு எடுத்துச் சொல்ல வில்லை.
சங்பரிவாரங்களை மதுரைக்குள் வர விடாமல் தடுப்பதற்கு 144 தடை போடப்பட்ட பிறகும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மீது கடும் கெடுபிடி நிகழ்த்தியபோதும், சங் பரிவாரங்கள் கோயிலுக்குள் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
சங்பரிவாரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் உயர் நீதிமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறது.
உடனடியாக மதுரை மாநகருக்குள்ளேயே சங்பரிவாரங்கள் ஒரு பெரிய கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுதான் திராவிட மாடலின் இன்றைய நிலைமையாகும்.
சிக்கந்தர் தர்காவை வழிபடும் இசுலாமியர்களின் மரபுரிமையை பாதுகாத்து தர வக்கற்ற திராவிட மாடல் அரசு,
சங்பரிவாரங்களை பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூட அனுமதி தந்து விட்டு,
இப்போதும் இதை " பெரியார் மண்" என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இன்னுமாடா இது பெரியார் மண்ணு!
- கதிர் நிலவன் (முகநூலில்)
https://www.facebook.com/share/p/1RUqD3tfLt/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு