பெரியாரின் ஏகாதிபத்திய விசுவாசம்

சே ரா

பெரியாரின் ஏகாதிபத்திய விசுவாசம்

1857 ல் இந்தியாவில் உழைக்கும் மக்கள் மற்றும் இந்திய சிப்பாய்களால் இணைந்து நடத்தப்பட்ட எழுச்சி போராட்டமானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியையும் பிரிட்டிஷ் அரசையும் நடுங்க வைத்தது.

அந்த எழுச்சி அரசு படைகளால் நசுக்கப்பட்டு கம்பெனி வெற்றி பெற்றவுடன் அந்த எழுச்சியை பிரிட்டிஷ் அரசும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் “சிப்பாய் கலகம்" என்று இழிவுப்படுத்தினர்.

ஆனால் மாமேதை தோழர் கார்ல் மார்க்ஸ் , அப்போரை அந்நியர்களின் காலனிய சுரண்டல் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்கிற இந்தியர்களின் முதல் சுதந்திர போர் என வாழ்த்தினார். 1850 களிலிருந்தே இந்தியாவின் சூழல்கள் பற்றி கிடைத்த புதிய தகவல்கள் இந்தியாவில் மக்களிடையே அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வு உருவாகி எழுச்சி பெருவதற்கான பெரும் சாத்தியகூறுகள் உள்ளது என்று மார்க்ஸ் எழுதினார்.

1800 களின் தொடக்கத்திலிருந்தே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வட்டி லேவாதேவிகாரர்களுடன் இணைந்து இந்திய மக்களின் நிலங்களில் வரும் விளைச்சல்களை மொத்தமாக சுரண்டியும், கடனை கட்ட முடியாததால் விவசாய நிலத்தில் வாழ்நாள் கொத்தடிமையாக ஆக்கி அம்மக்களை கசக்கி பிழிந்தனர். இதனை தாங்கி கொள்ள முடியாமல் நாடு முழுவதும் 1810 லிருந்து 1857 க்கு முன்பு வரை பல இடங்களில் விவசாய மக்களின் போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மீதான  கொந்தளிப்பு நிலை ஒன்றிணைந்து பெரும் போராக 1857 ல் நடந்தது.

இந்நாட்டு மக்களின் புரட்சிகரமான போராட்டத்தையும் அதில் பங்கெடுத்த போராளிகளையும் அந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் கழித்துக்கூட துரோகிகள் என்று கூறுவதும், இந்தியாவை ரட்சிக்க வந்த பிரிட்டிஷ் காரர்களை அழிக்க சனாதான - இஸ்லாமிய கூட்டுகளின் துரோக செயல் என்று கூறுவதும்; இந்திய வரலாறு பற்றி தட்டையான புரிதலும், குறைந்த பட்சம் ஒன்றை பற்றி முழுவதும் அறிந்து கொண்டு பேசுவோம் என்கிற மனநிலை இல்லாமல் இருப்பதும், நாடி நரம்பு இரத்தம் சதை இதில் அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய ஆதரவு வெறிப்பிடித்துமான ஒருவரால் மட்டுமே முடியும்.

1966 ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் கொடூரமான ஊழல்கள்,பண்ணையார்களின் கொடுமைகளை கண்டு கொள்ளாத அரசிற்கு எதிராக மக்களின் பெரும் கோபமும், அதில் ஈடுபட்ட மக்கள் மீதான வெறுப்பும், இதனை அரசியல் ரீதியல் காங்கிரஸை வீழ்த்த கருவியாக பயன்படுத்திய திமுக உட்பட அதன் கூட்டணி கட்சிகளையும் துரோகிகள் என குற்றம்சாட்டி  1857ல் நிகழ்ந்த தூரோகம் போன்றதொரு துரோகம் என ஒருவர் தனது பத்திரிக்கையில் எழுதினார்.

1947 ல் இந்தியாவை விட்டு அலுவல் ரீதியில் முற்றிலும் வெளியேறி 19 ஆண்டுகளுக்கு பிறகும் ஒருவரால் அவ்வளவு நேர்மையான உணர்வோடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு உண்மையாக இருக்க முடிகிறது என்றால் அவரை நிச்சயமாக “பெரியார்" என அழைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

- சே ரா

(முகநூலில்) 

https://www.facebook.com/100001614889440/posts/pfbid02cuGoUUuwGwZVj7XYkG5fKZwx8KVFKi4PnSbpE5ULh8PidqXRNF4dCpuYvGeeiVJzl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு