சிப் தயாரிப்பில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை கைப்பற்றுவதில் சீனா மற்றும் தைவானுக்கிடையே கடுமையான போட்டி
தமிழில்: சேரன்
சிப் தயாரிக்கும் "திறமையாளர்களுக்கான" போட்டியில் தைவான் பறிக்கும் குழி
தைவானின் கடற்கரையை நோக்கி இருக்கும் படியாக, சீன கடற்படை நிறுத்தப்பட்டு இருப்பதால், தனது குறைக்கடத்திகள் மீதான பாதுகாப்பை தைவான் அதிகப்படுத்தியுள்ளது. முன்னதாக, "ஹான் ஹாய் பிரிசிசியன்" (Hon Hai Precision) (2317.TW) எனப்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தின், 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட சீன சிப்கள் தயாரிப்பாளர் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள அதன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். அதே நேரத்தில் தைப்பே (Taipei) ஆனது தன்னுடைய முதன்மையான பொறியாளர்களை சீனாவில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க துவங்கியுள்ளது.
முன்னதாக, ஜூலை மாதத்தில் உலகின் மிகப்பெரிய ஒப்பந்த அடிப்படையிலான மின்னணு பொருட்கள் தயாரிப்பாளரும் சீனாவின் ஒரு துணை நிறுவனமாக இருக்கக் கூடிய (முன்னாளில் சீனாவின் மிகப்பெரிய சிப்கள் தயாரிப்பு நிறுவனமாகவும் இருந்த) "சின்குவா யுனிகுரூப்" (Tsinghua Unigroup) 20 சதவிகிதம் தன்னுடைய பங்கை அதில் கொண்டிருக்கிறது என்ற தகவல் அனைவரின் புருவங்களையும் உயர செய்தது. மேலும், தைவானின் முதலீட்டு கழகம் சீனாவுக்குள் இருக்கும் பெருமளவு ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்த பொழுது கடுங்கோபம் அடைந்து அதன் அதிகாரிகள் அவசியமான அனுமதியை பெற தவறியமைக்காக 25 மில்லியன் தைவான் டாலர்கள் வரை அல்லது 8,36,000 அமெரிக்க டாலர்கள் தண்டத்தொகை விதிக்க முடிவெடுத்து இருந்தார்கள் என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி ஆகஸ்ட் மாதம் தைப்பேக்கு சுற்றுப்பயணம் செய்தது பீஜிங் உடனான பதட்டத்தை வெளிப்படையாகவே பெருமளவு அதிகரிக்கச் செய்தது. தைவான் மீது உரிமைக்கோரும் மக்கள் சீனக் குடியரசு, அத்தீவு பகுதியில், முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இராணுவ பயிற்சியை நடத்திக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றுடன் தொடர்ச்சியான வேளாண் ஏற்றுமதிகளுக்கு தடைவிதித்து வருகிறது. இப்பொழுது ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் முதலீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என தைவானின் பாதுகாப்பு அதிகாரிகள் விரும்புவதாக "பைனான்சியல் டைம்ஸ்" பத்திரிக்கை கடந்த வாரம் தெரிவித்திருந்தது. ஆனால், பாக்ஸ்கான் நிறுவனம் இந்த ஒப்பந்தம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் சட்டத்தை பின்பற்றப் போவதாகவும் உறுதியளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சீனாவின் வளர்ந்துவரும் உள்நாட்டு அமைதியின்மையக் காட்டிலும் அமெரிக்காவின் தலையீடு மற்றும் பொருளாதாரத் தடைகளிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள அது தனக்கான சொந்த தொழில்நுட்ப திறனை கட்டியமைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது. தைவானின் 127 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள "சிப்கள்" செய்யும் தொழிற்சாலைகளில் மற்றும் உள்நாட்டில் 454 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய உலகின் குறைக்கடத்திகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் TSMC (தைவான் குறைக்கடத்திகள் தயாரிப்பு நிறுவனம்) ஆகியவற்றில் இருக்கும் திறமையான ஊழியர்கள் தொடர்ச்சியாக கடந்த ஆண்டுகளில் சீன நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டுகிறார்கள். 2009ல் நடைப்பெற்ற ஓர் ஆய்வு தெரிவிப்பதானது, சுமார் 3000 சிப் பொறியாளர்கள் (தைவானின் 10% பொறியாளர்கள்) 2015 முதல் சீன நிறுவனங்களால் களவாடப்பட்டு வருகின்றனர். ஷாங்காயை தளமாகக் கொண்ட SMIC (ஷாங்காய் குறைக்கடத்திகள் தயாரிப்பு (சர்வதேச) நிறுவனம்), TSMCயின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மாங்-மூங்-சாங் உள்ளிட்ட அதன் செயல் அலுவலர்கள் பலரை பறித்துக் கொண்டது. மேற்கூறியவர்தான் இன்று SMIC நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கிறார்.
முதலீடுகள் வெளியே பாய்ந்தோடு்வதை தடுக்க நடவடிக்கையை அதிகப்படுத்திய சீன அரசாங்கம், தைவான் நிறுவனங்கள் தன் நாட்டில் (mainland) நவீன சிப்கள் தயாரிப்பதற்கு தடைசெய்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்தில் தைவான் அதிகாரிகள் அந்நாட்டில் இருக்கும், பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களில் அனுமதியின்றி உள்நாட்டை சேர்ந்த ஊழியர்களை பணியமர்த்தியதற்காக சோதனை நடத்தியது. இதனையடுத்து, தைப்பேயும் (தைவான் தலைநகரம்) தன்னுடைய வர்த்தக ரகசிய சட்டத்தை மேலும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறது.
மேலும், தைவானில் சீனாவுக்கெதிரான பொதுக் கருத்தானது குறிப்பாக இளைஞர்களுக்கிடையே வலுவடைந்துள்ளது. மேலும், பீஜீங்னுடைய பூஜ்ஜிய- கோவிட் கொள்கை, நியமனங்களை மேலும் கடினமாக்கியது. அது அண்டை நாட்டின் 17 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையதைக் காட்டிலும் குறைவாக இருக்கலாம்; ஆனால் தைவானின் தொழில்நுட்ப துறைக்கு இதுவரை அச்சுறுத்தலாக இல்லையென்றே தெரிகிறது.
"ஹான் ஹாய் பிரிசீசியன்" (ஃபாக்ஸ்கான்) நிறுவனம், பிரச்சனையில் இருக்கும் சீன சிப்கள் தயாரிப்பு நிறுவனமான "ஷிங்குஹா யுனி குரூப்" (Tsinghua Unigroup) நிறுவனத்தில் செய்திருக்கும் 800 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களை திரும்ப பெற்றுக்கொள்ள தைவானின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள் என்ற செய்தியை ஆகஸ்ட் 10-ல் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர், லியு யாங் வே ஆகஸ்ட் 10க்கு பின்னர் அடைந்த லாபத்திற்கு பிறகு அவர் கூறியதானது: ”இந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு அதிகாரிகள் அனுமதியளிக்காதிருப்பினும் சட்டத்தை தொடர்ந்து பின்பற்றும் என்றும் இதற்கான ஒரு காப்புத் திட்டத்தை கொண்டிருக்கிறது” என்றும் கூறியனார். அது குறித்து விரிவாக விளக்கவில்லை.
மேலும், தைப்பேயும் தங்களின் மிகவும் மேம்பட்ட வார்ப்பு நிறுவனங்களை சீனாவில் நிறுவாமல் இருப்பதன் மூலம் தங்களின் மேலான தொழில்நுட்பம் தங்கள் தீவை கடந்து செல்லாமல் இருக்க தடைசெய்து விட்டது.
அதேப்போல கடந்த மே மாதத்தில் தைவான் அதிகாரிகள் சட்டவிரோதமாக குறைக்கடத்திகள் தயாரிக்கும் மற்றும் அது தொடர்பான திறமை உடையவர்களை சீன நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக களவாடிச் செல்வதை தடுக்க தனியாக 10க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களில் சோதனையிட்டது. அந்த நேரத்தில் அதன் புலனாய்வு நிறுவனம் தன்னுடைய அறிக்கையில், "தைவானின் அதி-உயர் தொழிற்நுட்ப திறமைக் கொண்டவர்களை சீன நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக ஈர்த்து வருவது, எங்களின் சர்வதேச போட்டியிடும் தன்மையை மற்றும் தேசப் பாதுகாப்பை மிகவும் மோசமாக பாதித்துள்ளது" என்று கூறியுள்ளது.
- சேரன் (தமிழில்)
மூலக்கட்டுரை: Reuters