கடன் பிடியில் சிக்கும் உக்ரைன்
போர் மீட்பு- மறு கட்டமைப்பு - உலக அமைதி என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனின் கடன் பிடியில் சிக்கும் உக்ரைன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனனின் மறு கட்டமைப்பு பணிகளுக்காக 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று ஐரோப்பிய யூனியனின் தலைவர் உருசுலா வாண்டேர் லேயன் சுவிச்சர்லாந்தில் நடந்த “உக்ரைன் மீட்பு” மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியது முதல் இதுவரை 6.2 பில்லியன் யூரோக்களை உக்ரைனுக்கு நிதி உதவியாக வழங்கியுள்ளதாகவும், இன்னும் அதிகமான நிதி உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியை பயன்படுத்தி பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் இவையுடன் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி (EBRD) இணைந்து உக்ரைனுக்கு,
1. அடிப்படை தேவைகள்
2. வீடு மற்றும் சாலை வசதிகள்
3. நீண்ட கால வளர்ச்சிக்கான முதலீடு
போன்ற மூன்று கட்டங்களாக உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடிய உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைன் மறு கட்டமைப்பு உலக அமைதிக்கு மிக அவசிய தேவை” எனவும் தெரிவித்துள்ளார்.
- செந்தளம் செய்திப் பிரிவு