நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்பின் போர்நிறுத்த தலையீடு

விஜயன் (தமிழில்)

நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்பின் போர்நிறுத்த தலையீடு

இந்திய நாடாளுமன்றத்தின் முழு அமர்வில், 'சிந்தூர் நடவடிக்கை' எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்நிறுத்தத்தின் பின்னணிக் காரணங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக விவாதம் நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து முதலில் பேசத் துவங்கிய பிரதமர் நரேந்திர மோடி, போர்நிறுத்த அறிவிப்பு குறித்த முடிவு முற்றிலும் இந்திய அரசால் எடுக்கப்பட்டது என்றும், இதில் வேறு எந்த நாடோ அல்லது வெளிநாட்டுத் தலைவரோ எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளின் துணையுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசும் போர்நிறுத்தத்திற்கு உதவியதாக மீண்டும் மீண்டும் கூறிவந்த அறிக்கைகளை, பிரதமர் வெளிப்படையாகவும் உறுதியாகவும் மறுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை பாகிஸ்தான் இராணுவத்தால் முதலில் முன்வைக்கப்பட்டது என்றும், அக்கோரிக்கையைப் பெற்ற பின்னரே இந்திய அரசு அதற்கு இசைவு தெரிவித்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தானுடன், குறிப்பாக காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டையோ அல்லது மூன்றாம் தரப்பையோ ஒருபோதும் தலையிட அனுமதிக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று  வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி பேசியிருந்தார்.

பாகிஸ்தானுடனான இந்தக் குறுகிய போர், 'சிந்தூர் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டது, இது மே 7 முதல் மே 10 வரை, சுமார் நான்கு நாட்கள் அதாவது மொத்தம் 88 மணி நேரம் நீடித்தது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானின் ஆதரவுடன் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவால் தொடுக்கப்பட்ட பதிலடித் தாக்குதலே சிந்தூர் நடவடிக்கை எனப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத கோபத்தையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக, பாகிஸ்தானுக்குள் மறைந்துள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிக்குமாறு இந்திய அரசு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்டது. பின்னர் பாகிஸ்தான் எதிர் தாக்குதல்களை நடத்தியது. கிடைத்த தகவல்களின்படி, இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானின் பிம்பத்திற்கும், அதன் உள்கட்டமைப்பிற்கும் மட்டுமல்லாது பிரிவினைக் காலம் தொட்டே இருந்துவரும் அதன் பகைமை நோக்கங்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

மறுபுறம், பாகிஸ்தான் இந்தியாவிற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக உரிமை கோரியது. ஆனால் – கடந்தகால மோதல்களில் இருந்ததைப் போலவே – அந்தக் கூற்றுக்கள் எவையும் நடுநிலையான வழியில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று நாட்களாக நிகழ்ந்த கடும் மோதலுக்குப் பிறகு, இந்தியா திடீரெனப் போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று இந்திய அரசு (GoI) தெரிவித்தது. பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இது நிகழ்ந்த சூழ்நிலை தீவிரமான கேள்விகளை எழுப்பியது. அந்த நாட்களில், இந்தியாவில் மிகப் பெரிய பார்வையாளர்களைக் கொண்ட சில டிஜிட்டல் ஊடகங்கள், தாங்கள் ஒளிபரப்பி வந்த செய்திகளில் வரம்பு மீறிச் செயல்பட்டன. அவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், புனையப்பட்ட கதைகளையும் கூட வெளியிட்டு, மக்களிடையே தீவிரமான போர் வெறியைத் தூண்டிவிட்டன.

பல முன்னணி தொலைக்காட்சி செய்திச் சேனல்களும், முக்கியமாக அதிக TRP மதிப்பீடுகளைப் பெறுவதற்காக, மக்களிடையே தீவிரமான போர் வெறியைத் தூண்டிவிட்டன. இந்திய அரசு (GoI) தற்போது இத்தகைய தவறான செய்தி வெளியீடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய தவறான தகவல்களைத் தடுப்பதே என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையில், காஷ்மீர் மற்றும் அது சார்ந்த பிற விவகாரங்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. சில நாடுகள் — குறிப்பாக பழமைவாதக் கருத்துக்களையும், கணிக்க முடியாத போக்கினையும் கொண்டிருக்கும் தலைவர்கள்— இந்தப் பாகிஸ்தான் பிரச்சாரத்தை உண்மை என நம்பின.

வெளிநாடுகளில் உண்மையை நிலைநாட்ட, இந்திய அரசு (GoI) ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. முதன்முறையாக, பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய எழுவர் பிரதிநிதிக் குழுக்களை அது அனுப்பி வைத்தது. இக்குழுக்கள் மொத்தம் 59 உறுப்பினர்களைக் கொண்டிருந்தன, மேலும் 32 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.

போர் நிறுத்த அறிவிப்பு இன்னமும் ஓயாத சர்ச்சையாகவே நீடிக்கிறது. அது எப்படி நிகழ்ந்தது? யார் முடிவெடுத்தனர்? யாருடைய கோரிக்கையின் பேரில் இது அறிவிக்கப்பட்டது? - என்று மக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகின்றனர். கணிக்க முடியாதவராக விளங்கும் டொனால்ட் டிரம்ப் இவ்விவகாரத்தில் தலையிட்டிருப்பதாக கூறி வருகிறார். அவரது கூற்று சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. போர் நிறுத்தத்தின் உண்மையான காரணமும், முக்கிய முடிவுகளை எடுத்தவர் யார் என்பதும் இன்னும் அறியப்படவில்லை. இது இந்திய நாடாளுமன்றத்தின் சமீபத்திய அமர்வில் மைய விவாதப் பொருளாக அமைந்தது. விவாதம் முடிந்த பின்னரும், கேள்விக்கான தெளிவான விடை கிடைக்கப்பெறவில்லை.

எந்தவொரு நாட்டிற்கும் போர் ஒருபோதும் நல்லதல்ல என்பது உண்மைதான். தேசங்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளும், இராஜதந்திரமுமே மிகச் சிறந்த வழிமுறைகளாகும். ஆனால், சர்வதேச அரசியலில், சில சூழ்நிலைகளில் போரை அனுமதிக்கும் கோட்பாடுகளும் உள்ளன. "ஒரு பெரிய போரைத் தவிர்க்க சில சமயங்களில் போர் தொடுப்பது அவசியம்". "அனைத்துப் போர்களும் இராஜதந்திரம் தோற்றுப்போனதற்கான சான்றுகளே," என்று போர் மற்றும் சமாதானம் பற்றி பல புகழ்பெற்ற பொன்மொழிகள் உள்ளன. "பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண் என்பதைப் பின்பற்றினால், உலக மக்கள் அனைவரும் குருடாகிவிடுவார்கள்," என்று மகாத்மா காந்தி இன்றைக்கும் பொருத்தமான ஓர் அறிவுரையை வழங்கியுள்ளார்.

சீன இராணுவ சிந்தனையாளர் சுன் சூ, தனது படைப்பான "போர் கலை" (The Art of War) நூலில், மோதல்கள் குறித்த தனது உத்திகளையும் கண்ணோட்டங்களையும் வழங்கியுள்ளார். எனினும், ஒரு உண்மை ஒருபோதும் மாறுவதில்லை — “ஒவ்வொரு போரும் மரணத்தையும் பேரழிவையும், அப்பாவி உயிர்களின் இழப்பையும் கொண்டுவருகிறது”.

பாலஸ்தீனம்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர்கள் இராஜதந்திரங்கள் தோற்றுப்போனதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இந்தப் போர்களின் துயரகரமான விளைவுகளே இதற்கு வலுவான சான்றுகளாகும். அண்மையில், கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையேயும் இதேபோன்றதொரு மோதல் நிகழ்ந்தது. செர்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ ஜனநாயகக் குடியரசு, இஸ்ரேல்-ஈரான் போன்ற பிற மோதல்களும் இதேபோல் துயரம் நிறைந்தவையாகவும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ளன. இத்தகைய இருண்ட உலகளாவிய சூழலில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் போர் முடிவுக்கு வந்தமை ஒரு வரவேற்கத்தக்க திருப்பமாகும்.

இந்த போர் நிறுத்தம் குறித்த சர்ச்சை, முக்கியமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கூற்றினால் உருவானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தாம் ஒரு சமாதான மத்தியஸ்தராகச் செயல்பட்டதாக அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அண்மையில், ஜூலை 28 அன்று ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துப் பிரதமர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்தபோதும் அவர் இந்தக் கூற்றை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

டிரம்ப் தெளிவுபடுத்தியதாவது: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரே மிகப்பெரியது, ஏனெனில் அவை இரண்டுமே அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள்." அந்தச் சந்திப்பின்போது, அமெரிக்காவிற்கு இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைத் தனக்கு மிகவும் நன்கு தெரியும் என்றும் அவர் விளக்கி பேசியிருந்தார்.

போர் நீடித்தால் விளையக்கூடிய பேரிழப்புகள் குறித்துத் தான் மிகவும் கவலை கொண்டிருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்; குறிப்பாக, அணு ஆயுதப் பயன்பாடும் அதன் விளைவாக உலகம் முழுவதும் பரவக்கூடிய அணுக்கழிவுகள் குறித்தும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கூற்றுப்படி, போர் முடிவுக்கு வராவிட்டால், அமெரிக்கா இரு நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்திவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுடன் வணிக ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பதால், முன்னதாக இதே முறையை அந்த நாடுகளிடமும் பயன்படுத்தி வெற்றி கண்டதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் முடிவுக்கு வரத் தாம் முக்கியப் பங்காற்றியதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கூற்றை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. ஆயினும், போர்நிறுத்தத்தை உருவாக்குவதில் டிரம்ப் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை என இந்தியா தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது. போர்நிறுத்தம் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றுத்தான் அறிவிக்கப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். ஆனால், அத்தகைய கோரிக்கை எதையும் தாங்கள் விடுக்கவில்லை எனப் பாகிஸ்தான் அழுத்தமாக மறுத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் தனக்கு நன்கு தெரியும் என்றும், "அவர்களில் சிலருடன் தாம் நெருக்கமாய்ப் பழகியிருக்கிறேன்" என்றும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின்போது, அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட டிரம்ப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியைக் மனதில் வைத்துக்கூட டிரம்ப் இவ்வாறு பேசியிருக்கலாம். அந்தத் தேர்தலில் டிரம்ப் இறுதியாகத் தோல்வியைத் தழுவினார். முன்னதாக, இந்தியாவுக்கான தனது இறுதிப் பயணத்தின்போது, பிரதமர் மோடியை டிரம்ப் பெரிதும் பாராட்டியிருந்தார். அப்படியெனில், பிரதமரும், இந்திய அரசும் (GoI) ஏன் டிரம்பின் பங்களிப்பை மறுக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. டிரம்ப் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யான கூற்றை முன்வைக்கிறாரா? அவர் கணிக்க முடியாத தன்மை கொண்டவர் என்று அறியப்பட்டாலும், பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது அவருக்கு அவரது நாட்டிலேயேகூட சட்டச் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

டிரம்பின் கூற்று உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தியாவின் மறுப்பு நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. அதாவது, இந்தியா-பாகிஸ்தான் மோதல்களில், குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதே அக்கொள்கை. இக்கொள்கை புதிதல்ல. இது ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் காங்கிரஸ் அரசாங்கங்கள் பின்பற்றி வந்த அணுகுமுறையின் தொடர்ச்சியே ஆகும். வரலாற்றுப் பின்னணியில் நோக்கினால், காஷ்மீர் தகராறை முதன்முதலில் ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இவ்விவகாரத்தை இருதரப்பு ரீதியாகவே தீர்த்துக் கொள்வதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணங்கின.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு வலிமையான, தீர்க்கமான பதிலடி கொடுத்ததைத் தவிர, பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டில் பாஜக பெரிய அளவிலான மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீதான இந்தியாவின் உரிமை கோரலும், அதை மீளப் பெறுவதற்கான இந்தியாவின் உறுதியான தீர்மானமும்தான் மிகவும் குறிப்பிடத்தக்க புதிய நகர்வாகும். மூன்றாம் தரப்பு தலையீட்டை அனுமதிக்காத சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தாலும், ஒரு கேள்வி எழுகிறது — இந்தப் விதிமுறை ஒரு போர்க்காலத்திலும் பொருந்துமா நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்பின் போர்நிறுத்த தலையீடு

இந்திய நாடாளுமன்றத்தின் முழு அமர்வில், 'சிந்தூர் நடவடிக்கை' எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்நிறுத்தத்தின் பின்னணிக் காரணங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக விவாதம் நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து முதலில் பேசத் துவங்கிய பிரதமர் நரேந்திர மோடி, போர்நிறுத்த அறிவிப்பு குறித்த முடிவு முற்றிலும் இந்திய அரசால் எடுக்கப்பட்டது என்றும், இதில் வேறு எந்த நாடோ அல்லது வெளிநாட்டுத் தலைவரோ எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளின் துணையுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசும் போர்நிறுத்தத்திற்கு உதவியதாக மீண்டும் மீண்டும் கூறிவந்த அறிக்கைகளை, பிரதமர் வெளிப்படையாகவும் உறுதியாகவும் மறுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை பாகிஸ்தான் இராணுவத்தால் முதலில் முன்வைக்கப்பட்டது என்றும், அக்கோரிக்கையைப் பெற்ற பின்னரே இந்திய அரசு அதற்கு இசைவு தெரிவித்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தானுடன், குறிப்பாக காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டையோ அல்லது மூன்றாம் தரப்பையோ ஒருபோதும் தலையிட அனுமதிக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று  வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி பேசியிருந்தார்.

பாகிஸ்தானுடனான இந்தக் குறுகிய போர், 'சிந்தூர் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டது, இது மே 7 முதல் மே 10 வரை, சுமார் நான்கு நாட்கள் அதாவது மொத்தம் 88 மணி நேரம் நீடித்தது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானின் ஆதரவுடன் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவால் தொடுக்கப்பட்ட பதிலடித் தாக்குதலே சிந்தூர் நடவடிக்கை எனப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத கோபத்தையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக, பாகிஸ்தானுக்குள் மறைந்துள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிக்குமாறு இந்திய அரசு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்டது. பின்னர் பாகிஸ்தான் எதிர் தாக்குதல்களை நடத்தியது. கிடைத்த தகவல்களின்படி, இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானின் பிம்பத்திற்கும், அதன் உள்கட்டமைப்பிற்கும் மட்டுமல்லாது பிரிவினைக் காலம் தொட்டே இருந்துவரும் அதன் பகைமை நோக்கங்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

மறுபுறம், பாகிஸ்தான் இந்தியாவிற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக உரிமை கோரியது. ஆனால் – கடந்தகால மோதல்களில் இருந்ததைப் போலவே – அந்தக் கூற்றுக்கள் எவையும் சார்பற்ற வழியில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று நாட்களாக நிகழ்ந்த கடும் மோதலுக்குப் பிறகு, இந்தியா திடீரெனப் போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று இந்திய அரசு (GoI) தெரிவித்தது. பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், இது நிகழ்ந்த சூழ்நிலை தீவிரமான கேள்விகளை எழுப்பியது. அந்த நாட்களில், இந்தியாவில் மிகப் பெரிய பார்வையாளர்களைக் கொண்ட சில டிஜிட்டல் ஊடகங்கள், தாங்கள் ஒளிபரப்பி வந்த செய்திகளில் வரம்பு மீறிச் செயல்பட்டன. அவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், புனையப்பட்ட கதைகளையும் கூட வெளியிட்டு, மக்களிடையே தீவிரமான போர் வெறியைத் தூண்டிவிட்டன.

பல முன்னணி தொலைக்காட்சி செய்திச் சேனல்களும், முக்கியமாக அதிக TRP மதிப்பீடுகளைப் பெறுவதற்காக, மக்களிடையே தீவிரமான போர் வெறியைத் தூண்டிவிட்டன. இந்திய அரசு (GoI) தற்போது இத்தகைய தவறான செய்தி வெளியீடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் நோக்கம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய தவறான தகவல்களைத் தடுப்பதே என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையில், காஷ்மீர் மற்றும் அது சார்ந்த பிற விவகாரங்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. சில நாடுகள் — குறிப்பாக பழமைவாதக் கருத்துக்களையும், கணிக்க முடியாத போக்கினையும் கொண்டிருக்கும் தலைவர்கள்— இந்தப் பாகிஸ்தான் பிரச்சாரத்தை உண்மை என நம்பின.

வெளிநாடுகளில் உண்மையை நிலைநாட்ட, இந்திய அரசு (GoI) ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. முதன்முறையாக, பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய ஏழு பிரதிநிதிக் குழுக்களை அது அனுப்பி வைத்தது. இக்குழுக்கள் மொத்தம் 59 உறுப்பினர்களைக் கொண்டிருந்தன, மேலும் 32 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன.

போர் நிறுத்த அறிவிப்பு இன்னமும் ஓயாத சர்ச்சையாகவே நீடிக்கிறது. அது எப்படி நிகழ்ந்தது? யார் முடிவெடுத்தனர்? யாருடைய கோரிக்கையின் பேரில் இது அறிவிக்கப்பட்டது? - என்று மக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகின்றனர். கணிக்க முடியாதவராக விளங்கும் டொனால்ட் டிரம்ப் இவ்விவகாரத்தில் தலையிட்டிருப்பதாக கூறி வருகிறார். அவரது கூற்று சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. போர் நிறுத்தத்தின் உண்மையான காரணமும், முக்கிய முடிவுகளை எடுத்தவர் யார் என்பதும் இன்னும் அறியப்படவில்லை. இது இந்திய நாடாளுமன்றத்தின் சமீபத்திய அமர்வில் மைய விவாதப் பொருளாக அமைந்தது. விவாதம் முடிந்த பின்னரும், கேள்விக்கான தெளிவான விடை கிடைக்கப்பெறவில்லை.

எந்தவொரு நாட்டிற்கும் போர் ஒருபோதும் நல்லதல்ல என்பது உண்மைதான். தேசங்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளும், இராஜதந்திரமுமே மிகச் சிறந்த வழிமுறைகளாகும். ஆனால், சர்வதேச அரசியலில், சில சூழ்நிலைகளில் போரை அனுமதிக்கும் கோட்பாடுகளும் உள்ளன. "ஒரு பெரிய போரைத் தவிர்க்க சில சமயங்களில் போர் தொடுப்பது அவசியம்". "அனைத்துப் போர்களும் இராஜதந்திரம் தோற்றுப்போனதற்கான சான்றுகளே," என்று போர் மற்றும் சமாதானம் பற்றி பல புகழ்பெற்ற பொன்மொழிகள் உள்ளன. "பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண் என்பதைப் பின்பற்றினால், உலக மக்கள் அனைவரும் குருடாகிவிடுவார்கள்," என்று மகாத்மா காந்தி இன்றும் பொருத்தமான ஓர் அறிவுரையை வழங்கியுள்ளார்.

சீன இராணுவ சிந்தனையாளர் சுன் சூ, தனது படைப்பான "போர் கலை" (The Art of War) நூலில், மோதல்கள் குறித்த தனது உத்திகளையும் கண்ணோட்டங்களையும் வழங்கியுள்ளார். எனினும், ஒரு உண்மை ஒருபோதும் மாறுவதில்லை — “ஒவ்வொரு போரும் மரணத்தையும் பேரழிவையும், அப்பாவி உயிர்களின் இழப்பையும் கொண்டுவருகிறது”.

பாலஸ்தீனம்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர்கள் இராஜதந்திரங்கள் தோற்றுப்போனதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இந்தப் போர்களின் துயரகரமான விளைவுகள் இதற்கு வலுவான சான்றுகளாகும். அண்மையில், கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையேயும் இதேபோன்றதொரு மோதல் நிகழ்ந்தது. செர்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ ஜனநாயகக் குடியரசு, இஸ்ரேல்-ஈரான் போன்ற பிற மோதல்களும் இதேபோல் துயரம் நிறைந்தவையாகவும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ளன. இத்தகைய இருண்ட உலகளாவிய சூழலில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் போர் முடிவுக்கு வந்தமை ஒரு வரவேற்கத்தக்க திருப்பமாகும்.

இந்த போர் நிறுத்தம் குறித்த சர்ச்சை, முக்கியமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கூற்றினால் உருவானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தாம் ஒரு சமாதான மத்தியஸ்தராகச் செயல்பட்டதாக அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அண்மையில், ஜூலை 28 அன்று ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துப் பிரதமர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்தபோதும் அவர் இந்தக் கூற்றை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

டிரம்ப் தெளிவுபடுத்தியதாவது: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரே மிகப்பெரியது, ஏனெனில் அவை இரண்டுமே அணுசக்தி வாய்ந்த நாடுகள்." அப்போது, அமெரிக்காவிற்கு இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்ததாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைத் தனக்கு மிகவும் நன்கு தெரியும் என்றும் அவர் விளக்கி பேசியிருந்தார்.

போர் நீடித்தால் விளையக்கூடிய பேரிழப்புகள் குறித்துத் தான் மிகவும் கவலை கொண்டிருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்; குறிப்பாக, அணு ஆயுதப் பயன்பாடும் அதன் விளைவாக உலகம் முழுவதும் பரவக்கூடிய அணுக்கழிவுகள் குறித்தும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கூற்றுப்படி, போர் முடிவுக்கு வராவிட்டால், அமெரிக்கா இரு நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்திவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுடன் வணிக ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பதால், முன்னதாக இதே முறையை அந்த நாடுகளிடமும் பயன்படுத்தி வெற்றி கண்டதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் முடிவுக்கு வரத் தாம் முக்கியப் பங்காற்றியதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கூற்றை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. ஆயினும், போர்நிறுத்தத்தை உருவாக்குவதில் டிரம்ப் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை என இந்தியா தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது. போர்நிறுத்தம் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றுத்தான் அறிவிக்கப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். ஆனால், அத்தகைய கோரிக்கை எதையும் தாங்கள் விடுக்கவில்லை எனப் பாகிஸ்தான் அழுத்தமாக மறுத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் தனக்கு நன்கு தெரியும் என்றும், "அவர்களில் சிலருடன் தாம் நெருக்கமாய்ப் பழகியிருக்கிறேன்" என்றும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின்போது, அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட டிரம்ப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியைக் மனதில் வைத்துக்கூட டிரம்ப் இவ்வாறு பேசியிருக்கலாம். அந்தத் தேர்தலில் டிரம்ப் இறுதியாகத் தோல்வியைத் தழுவினார். முன்னதாக, இந்தியாவுக்கான தனது இறுதிப் பயணத்தின்போது, பிரதமர் மோடியை டிரம்ப் பெரிதும் பாராட்டியிருந்தார். அப்படியெனில், பிரதமரும், இந்திய அரசும் (GoI) ஏன் டிரம்பின் பங்களிப்பை மறுக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. டிரம்ப் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யான கூற்றை முன்வைக்கிறாரா? அவர் கணிக்க முடியாத தன்மை கொண்டவர் என்று அறியப்பட்டாலும், பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது அவருக்குத் அவரது நாட்டிலேயேகூட சட்டச் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

டிரம்பின் கூற்று உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், புதுடெல்லியின் மறுப்பு நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. அதாவது, இந்தியா-பாகிஸ்தான் மோதல்களில், குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதே அக்கொள்கை. இக்கொள்கை புதிதல்ல. இது ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் காங்கிரஸ் அரசாங்கங்கள் பின்பற்றி வந்த அணுகுமுறையின் தொடர்ச்சியே ஆகும். வரலாற்றுப் பின்னணியில் நோக்கினால், காஷ்மீர் தகராறை முதன்முதலில் ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இவ்விவகாரத்தை இருதரப்பு ரீதியாகவே தீர்த்துக் கொள்வதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணங்கின.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு வலிமையான, தீர்க்கமான பதிலடி கொடுத்ததைத் தவிர, பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டில் பாஜக பெரிய அளவிலான மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீதான இந்தியாவின் உரிமை கோரலும், அதை மீளப் பெறுவதற்கான புது தில்லியின் உறுதியான தீர்மானமும்தான் மிகவும் குறிப்பிடத்தக்க புதிய நகர்வாகும். மூன்றாம் தரப்பு தலையீட்டை அனுமதிக்காத சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தாலும், இந்த விதிமுறை ஒரு போர்க்காலத்திலும் பொருந்துமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தனக்கே உரிய பாணியில், உக்ரைனில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்.

இது போற்றுதலுக்குரிய ஒரு முயற்சிதான். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் மோடி, “இது போருக்கான நேரம் அல்ல” என்று கூறியபோது உலகமே கூர்ந்து கவனித்தது. இந்தச் சூழலில், டிரம்ப் கூறி வருவதை மறுதலித்து, அவர் சொல்வது தவறு என்று வலியுறுத்துவது விவேகமான செயலா? இத்தகைய நிலைப்பாடு, ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், ஒரு வலுவான உலக வல்லரசாகவும் இந்தியா தன்னை காட்டிக்கொள்வதற்கு வேண்டுமானால் உதவக்கூடும். இந்தியா தனது கோட்பாடுகளிலும் நம்பிக்கைகளிலும் உறுதியாய் நிற்கிறது என்பதை வேண்டுமானால் இது வெளிப்படுத்தலாம். ஆனால் மோடி, "அரசியல் என்பது சாத்தியமானதைச் சாதிக்கும் கலை." என்ற பொன்மொழியை நன்றாக அறிந்திருப்பார். அப்படியிருக்க, இந்த சர்ச்சையை ஏன் தொடர்வதற்கு விட்டுவைக்க வேண்டும்; மோடிக்கும் டிரம்ப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை ஏன் அதிகப்படுத்த வேண்டும்?

இந்தியா போரை விரும்பவில்லை; பாகிஸ்தானின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம்; போர்நிறுத்தம் ஏற்பட்டது ஒரு நல்ல விஷயம்; எனினும், ஆபரேஷன் சிந்துர் (Operation Sindoor) இடைநிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முடிவுக்கு வரவில்லை என்றவாறு இந்தியா வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் கூறுவதும் மாற்று வழிதான்.

பாகிஸ்தான் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிப்பதை நிறுத்தவில்லை என்றால், பாகிஸ்தானின் உள் பகுதிகளில் தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களை அழித்து, அத்தகைய அனைத்துக் கட்டமைப்புகளையும் அகற்றும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்பதையும் சேர்த்துக் கூறலாம். இதன் மூலம், இந்தியா ஒரு விரும்பத்தகாத, எந்தப் பயனும் தராத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நிச்சயமாக, இதுபற்றி சவுத் பிளாக்கில்(பிரதமர் அலுவலகம், இராணுவ அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ள கட்டிடம்) உள்ள அனுபவம் மிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு, பொதுமக்களாகிய நம்மை விட, நன்றாகவே தெரியும்.

என்பதே. பிரதமர் நரேந்திர மோடி, தனக்கே உரிய பாணியில், உக்ரைனில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்.

இது போற்றுதலுக்குரிய ஒரு முயற்சிதான். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் மோடி, “இது போருக்கான நேரம் அல்ல” என்று கூறியபோது உலகமே கூர்ந்து கவனித்தது. இந்தச் சூழலில், டிரம்ப் கூறி வருவதை மறுதலித்து, அவர் சொல்வது தவறு என்று வலியுறுத்துவது விவேகமான செயலா? இத்தகைய நிலைப்பாடு, ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், ஒரு வலுவான உலக வல்லரசாகவும் இந்தியா தன்னை காட்டிக்கொள்வதற்கு வேண்டுமானால் உதவக்கூடும். இந்தியா தனது கோட்பாடுகளிலும் நம்பிக்கைகளிலும் உறுதியாய் நிற்கிறது என்பதை வேண்டுமானால் இது வெளிப்படுத்தலாம். ஆனால் மோடி, "அரசியல் என்பது சாத்தியமானதைச் சாதிக்கும் கலை." என்ற பொன்மொழியை நன்றாக அறிந்திருப்பார். அப்படியிருக்க, இந்த சர்ச்சையை ஏன் தொடர்வதற்கு விட்டுவைக்க வேண்டும்; மோடிக்கும் டிரம்ப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை ஏன் அதிகப்படுத்த வேண்டும்?

இந்தியா போரை விரும்பவில்லை; பாகிஸ்தானின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம்; போர்நிறுத்தம் ஏற்பட்டது ஒரு நல்ல விஷயம்; எனினும், ஆபரேஷன் சிந்துர் (Operation Sindoor) இடைநிறுத்தப்பட்டுள்ளதே தவிர, முடிவுக்கு வரவில்லை என்றவாறு இந்தியா வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் கூறுவதும் மாற்று வழிதான்.

பாகிஸ்தான் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிப்பதை நிறுத்தவில்லை என்றால், பாகிஸ்தானின் உள் பகுதிகளில் தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களை அழித்து, அத்தகைய அனைத்துக் கட்டமைப்புகளையும் அகற்றும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்பதையும் சேர்த்துக் கூறலாம். இதன் மூலம், இந்தியா ஒரு விரும்பத்தகாத, எந்தப் பயனும் தராத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நிச்சயமாக, சவுத் பிளாக்கில் (பிரதமர் அலுவலகம், இராணுவ அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் அமைந்துள்ள கட்டிடம்) உள்ள அனுபவம் மிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு, பொதுமக்களாகிய நம்மை விட, நன்றாகவே தெரியும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/en-conflict-at-the-borders-controversy-in-the-parliament/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு