அமெரிக்க ஹோல்டெக் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு பலியிடப்படும் இந்திய அணு ஆற்றல் துறை
செந்தளம் செய்திப் பிரிவு

அணுசக்தி உலகளவில் முக்கியமான மின் உற்பத்தி ஆதாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. மாசு இல்லாத மற்றும் நீடித்த மின்சக்தி உற்பத்தியை உறுதிசெய்ய அணுசக்தி முறை மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தியாவும், எதிர்கால மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுசக்தி உற்பத்தியில் அதிகரிக்க வேண்டிய உள்ளது. இந்த சூழ்நிலையை கணக்கில் கொண்டு, அமெரிக்க தனது மேலாதிக்க நலனுக்காக, பல்வேறு ஒப்பந்தங்களை மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹோல்டெக் நிறுவனம் (Heltec Automation) இந்தியாவுடன் இணைந்து அணுசக்தி துறையில் செயல்படுவது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்குள் அணுசக்தி தொழில்நுட்பம் விரைவாக வளர்வதற்கும், எரிசக்தி துறையில் ஒரு புதிய முன்னேற்றத்தையும் உருவாக்கும் என்று ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி வருகிறது மோடி அரசும். அணுசக்தியின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை கவனத்தில் கொள்ளாமல், ட்ரம்பின் ஆணைக்கிணங்க தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று மோடி அரசு இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு காவு கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, இந்தியாவில் அணு பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தியுள்ளது.
1954 ஆம் ஆண்டு, இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் ஹோமி பாபா, மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம், இந்தியாவில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி நியூக்ளியர் எனர்ஜி துறையை சுயசார்பு நிலையில் இயக்க, அதாவது வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பாமல் இயங்க வழிவகுக்கும் திட்டத்தை முன்வைத்தார். இந்தியாவில் தோரியம் கனிம வளம் கொட்டிக்கிடக்கிறது என்பதை கருத்தில் கொண்டு மூன்று கட்ட திட்டங்களை வகுத்தார்.
மூன்று கட்ட திட்டம்: முதல் கட்டமாக, இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்தி புளூட்டோனியத்தை உருவாக்குவது, இரண்டாம் கட்டமாக, புளூட்டோனியத்தைப் பயன்படுத்தி யுரேனியம்-233 உருவாக்குவது, மூன்றாம் கட்டமாக, தோரியம் அடிப்படையிலான அணு உலைகளை யுரேனியம்-233 வைத்து இயக்குவதுதான் டாக்டர் ஹோமி பாபா கொண்டு வந்த திட்டம்.
உலகளவில் இருக்கும் மொத்த தோரியதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 சதவீதம் உள்ளது, கையில் இருக்கும் வெண்ணெயை நெய்யாக்கும் திட்டம் தான் இது. ஆனால், ஹோமி பாபா இத்திட்டத்தை அறிமுகம் செய்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் 18 heavy water reactors மற்றும் 1 fast breeder reactor மட்டுமே உள்ளது. மேலும் தோரியம் கொண்டு இயங்கும் அணு உலைகள் இன்னும் கட்டப்படவில்லை. ஏன் இந்தியா அணுசக்தி துறையில் பின்தங்கியது?: இந்தியாவின் அணு ஆற்றல் திட்டம் எதனால் பல தடைகளை எதிர்கொண்டது? என்ற கேள்விகளுக்கு இதுவரை இந்தியாவை ஆட்சி செய்துகொண்டு வரும் எந்த முதலாளித்துவ கட்சிகளுக்கும் விடை தெரியாது. ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தாலும் தொழிநுட்ப வளர்ச்சி போதாமையாலும் அத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. ஹோமி பாபா மறைவுக்கு பின் அணு ஆற்றல் துறையை அன்றைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முன்னெடுக்க முன்வரவில்லை, இதனால் மந்தநிலை ஏற்பட்டு, இத்துறையில் வளர்ச்சி வெகுவாக குறைந்தது. பிரிட்டிசின் நேரடி காலனிய ஆட்சி முடிவுற்ற பிறகு, உலக முழுவதும் சோவியத் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது, இந்தியாவிலும் அது வெளிப்பட்டது. மக்கள் புரட்சியின் பக்கம் அணிதிரளாமல் தடுக்கும் பொருட்டு, சில பொதுத்துறை நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது அன்றைய காங்கிரஸ் அரசு. இந்த திட்டத்தில் முதல்கட்டத்தை செயல்படுத்த இயற்கை யுரேனியத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருந்தது. உலகளாவிய விநியோகஸ்தர்களின் மறுப்பும் ஏகாதிபத்திய ஆதிக்கமும் இத்துறையைப் பாதித்தன. இந்தியாவிடம் தோரியம் இருப்பு அதிமாக இருந்தாலும் முதல் கட்டத்திலேயே மந்தநிலை உருவானதால் இத்துறையின் மொத்த வளர்ச்சியும் முடங்கியது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அரசுகளும் இயற்கை யுரேனியம் இறக்குமதியில் இருக்கும் பிரச்சனை மற்றும் அணு உலையின் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்துறைக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்திவிட்டன.
அணு உலையின் அவசியம்: இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி உற்பத்தி மற்றும் சேவை துறையிலும் வளர்ச்சி அவசியம். அதற்காக மின்சார உற்பத்தியும் அதிகளவில் தேவை என்பதால், தொழிநுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்த இன்றும் கூட, கையில் உள்ள (வெண்ணையை) தோரியத்தை எடுப்பதற்கு (உருக்குவதற்கு) பதிலாக, சுயசார்பு என்று சொல்லிக்கொள்ளும் மோடி அரசு அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து அணு பாதுகாப்பு சட்டங்களைத் திருத்த திட்டமிட்டு வருகிறது. அமெரிக்க கார்பரேட் நிறுவனகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இதற்காக தான் இந்த 2 முக்கிய சட்டத் திருத்தங்கள்: மத்திய அரசின் அணு ஆற்றல் துறையை மாற்றியமைக்கும் இரண்டு முக்கிய சட்டத் திருத்தங்களான; முதலாவதாக, அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலைக்கு உபகரணங்களை கொடுத்த சப்ளையர்கள் தான் பொறுப்பு என்ற கடுமையான விதிமுறையும், கட்டுப்பாட்டும் உள்ளது. இந்த விதிமுறை காரணமாகவே அமெரிக்காவின் GE-Hitachi, Westinghouse மற்றும் பிரான்ஸின் EDF போன்ற உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறது. இதை தளர்த்தும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டாயம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும். இதேபோல் அணு உலையில் விபத்து ஏற்படும் ஆபத்தையும் சப்ளையர்கள் ஏற்கவேண்டும் என்ற விதியையும் தளர்த்தி அந்நிய கார்பொரேட்களுக்கு கதவை அகலாத திறந்துவிட திட்டம் வகுத்துள்ளது.
இரண்டாவதாக, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது. இந்திய நிறுவனங்களான அதானி, டாடா மற்றும் L&T ஆகியவை அணு ஆற்றல் உற்பத்தியில் பங்கேற்க வழிவகுப்பது. இதன் மூலம் தனியார் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் கூட்டணி இந்தியாவில் நியூக்ளியர் எனர்ஜி துறையை புதிய வேகத்திற்கு கொண்டு செல்லும் என்றும். மத்திய அரசு 49% வரை அந்நிய முதலீட்டை அனுமதித்தால் இத்துறையில் அரசு நிறுவனமான NPCIL-இன் மோனோபோலியை (சுயசார்பை) முடிவு கட்டுவதற்கு வழிவகுக்கிறது. தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அடானி பவர், வேதாந்தா மற்றும் மாறன் குடும்பம் உள்ளிட்ட இந்திய பெரு நிறுவனங்கள், அணு ஆற்றல் துறையில் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன. இதுவே வெளிநாட்டு நிறுவனம் என்றால் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக், GE-Hitachi, Electricite de France மற்றும் Rosatom போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களாக பலன் பெரும் வகையில் நியூக்ளியர் எனர்ஜி துறை தாரைவார்க்கப்பட உள்ளது. சுய சார்பு கொள்கையை என்று வெற்று வார்த்தைகளால் வாய்சவிடால் விடும் பாசிச பாஜக அரசு ஏகாதிபத்தியத்திற்கும் கார்பரேட்டிற்கும் அணு ஆற்றல் துறையை காவு கொடுக்க திட்டமிட்டு வருகிறது.
2025-26 ஒன்றிய பட்ஜெட், அணு ஆற்றல் இந்தியாவின் மின்சாரப் பயன்பாட்டில் முக்கியமானதாக இகுக்கும் என மோடி அரசால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வெறும் 8 ஜிகாவாட் மின்சாரம் மட்டுமே அணு ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியவின் ஆற்றல் பயன்பாட்டில் வெறும் 3 சதவீத பங்கீட்டை மட்டுமே கொண்டுள்ளது. எனவே தனியார் துறை முதலீடுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், ஓரளவிற்கு வேகமான கட்டுமானம் மற்றும் முதலீட்டை உறுதி செய்யும் என்று பாஜக வாய்சவிடால் அடிக்கிறது. உண்மையில் இதன் மூலம் நாட்டின் பெரும் கனிம வளங்களை கொள்ளையடிக்க அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட்டுக்கு திறந்து விட்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் திட்டமாகும். தனியார் நிறுவனங்களின் லாப நோக்கம், பாதுகாப்பு விதிகளை மீறுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டாலும், நிவாரணம் வழங்கவோ புனரமைக்கவோ வாய்ப்பில்லா நிலையை உருவாக்கும். அணு ஆற்றல் துறையில் தனியார், அந்நிய கார்ப்பரேட் பங்களிப்பு என்பது கொள்ளை லாபத்தை நோக்கமாக கொண்டுள்ளதால் விபத்து நிகழும் ஆபத்து அதிகமாக உள்ளது. மத்திய அரசு 2047 ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணு ஆற்றல் உற்பத்தி என்ற இலக்கை அடையும் பயணத்தில், அனைத்து துறைகளையும் கார்ப்பரேட் கையில் கொடுத்துவிட்டு, நாட்டு மக்களை ஒடுக்க போலீஸ் ராணுவம் மட்டுமே தன் கையில் வைத்துக்கொண்டு ஒரு காவி -பாசிச ஆட்சியை கட்டியமைக்க திட்டமிட்டு வருகிறது. தற்சார்பு பொருளாதார உற்பத்தியை மேற்கொள்வதற்கு மாற்றாக, கார்ப்பரேட்டுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தி, அதானி, அம்பாணி குழுமங்களிடம் ஒப்படைக்கிறது. ஆம், அதானி குழுமம் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் பவர் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தியில் முன்னணியில் கொண்டு வரும் பொருட்டு, பிப்ரவரி 2025-ல் கௌதம் அதானி தாராபூர் அணுமின் நிலையத்திற்கு சென்று அணு தொழில்நுட்பம் குறித்து ஆலோசித்தார். அசாமில் அணுசக்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், சிறிய மாடுலர் அணு உலைகள் (SMRs) மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், எண்ணெய், எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தாண்டி அணுசக்தியில் புதிய பயணத்தை தொடங்குகிறது. அசாமில் ரூ.50,000 கோடி முதலீட்டில், அணுசக்தி திட்டங்களும் இடம்பெற்றுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ (L&T): எல்&டி உள்கட்டமைப்பு மற்றும் கனரக பொறியியல் துறையில் முன்னணியில் உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்நிறுவனத்தின் நிபுணத்துவம், அணு உலைகள் கட்டமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது. L&T அணு உலைகளைக் கட்டுவதிலும், அணு உலைகளுக்கான முக்கிய பாகங்களை வழங்குவதிலும், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) ஒப்பந்தங்களை நிர்வகிப்பதிலும் ஒரு முக்கிய ஒப்பந்ததாரராகச் செயல்படவும் திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களான, டாடா பவர், வேதாந்தா உள்ளிட்டவையும் அணுசக்தி திட்டங்களில் ஆர்வம் காட்டுகின்றன. இந்நிறுவனங்கள் NPCIL-உடன் இணைந்து உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சுயசார்பு கொள்கைகள் பேசி இந்தியாவை மாறி மாறி ஆட்சி செய்து கொண்டுள்ள காங்கிரஸ், பாஜகவின் இரு பாசிச கட்சிகளுமே, அமெரிக்க போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணிந்து நாட்டை நவீன காலனியாக்கும் திட்டத்தையே செயல்படுத்தி வருகிறது என்பதே உண்மை. இவ்வாறாக பல்வேறு கருப்பு சட்டங்கள் மூலம் போராடும் மக்களையும் மலைவாழ் மக்களையும் வேட்டையாடி இந்தியாவின் கனிம வளங்களை அந்நிய கார்பரேட்க்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் தாரைவார்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு.
- செந்தளம் செய்திப் பிரிவு