இந்தியாவின் அணுசக்தி துறையை தனியார்மயமாக்குவதன் அபாயம்
வெண்பா (தமிழில்)
இந்தியாவின் அணு எரிபொருள் சுழற்சியின் பல்வேறு கதிர்வீச்சு செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்களாகிய நாங்கள், இந்தியப் பொது அணுசக்தித் துறையைத் தனியார் தொழில்களுக்குத் திறந்து விடுவதை தீவிரமாக எதிர்க்கிறோம். சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது. அணுசக்தி வசதிகளை வடிவமைப்பவர்களாக, உரிமையாளர்களாக, இயக்குபவர்களாக அல்லது பயன்படுத்துபவர்களாகப் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை என எவையும் இல்லாத தனியார் நிறுவனங்களை இதில் ஈடுபடுத்துவதானது, வடிவமைப்பு, செயல்பாடுகள், பராமரிப்பு, கதிரியக்கப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல் ஆகியவற்றில் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
ஒழுங்குமுறைகள் பலவீனமடைந்த சூழல்
அணுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை விதிகள்/நெறிமுறைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழலில் இந்த அணுசக்தித் துறை தனியார்மயமாக்கல் நிகழ்வது மிகவும் வருத்தமளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஒழுங்குமுறை நிறுவனங்கள் தங்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்களை கூட இழந்துவிட்டன. உதாரணமாக, அருமண் மற்றும் கதிரியக்கப் பொருட்களை தோண்டியெடுப்பதற்கான ஆலோசனை செயல்முறை செப்டம்பர் 2025 இல் நீக்கப்பட்டது. முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை மதிப்பிடுவதற்கு கூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (Pollution Control Board) இமலாத நிலையை உருவாக்கிவிட்டது. உள்ளூர் மக்களின் குரல்களைப் புறக்கணித்து, அதே நேரத்தில் கதிரியக்கப் பொருட்களைப் அவர்களின் வாழ்விடங்களில் கொட்டுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதித்திருப்பது அபத்தமானது. கதிரியக்கப் பொருட்களின் சுவடுகள் முழுமையாகச் சிதைவதற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும். இவை நமது சூழலியல் மற்றும் நமது உடல்களுக்கு மெதுவான தீங்குகளை ஏற்படுத்துகின்றன என்பது சொல்லத் தேவையில்லை. பீகாரின் கங்கைச் சமவெளிப் பகுதியில், தற்போது பிரசவிக்கும் தாய்மார்களிடையே தாய்ப்பாலில் கதிரியக்கம் இருப்பது அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளதானது சமீபத்திய செய்தித் தலைப்புகளில் உள்ளது. இது பெரும்பாலும் நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்ததால் ஏற்பட்டிருக்கலாம்.
சர்வதேச ஒருமித்த கருத்து மற்றும் கட்டுப்பாட்டு இன்மை
கதிரியக்கக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றுவது எப்படி என்பது குறித்தோ, கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கான பாதுகாப்பான வரம்பு என்ன என்பது குறித்தோ சர்வதேச அளவில் அறிவியல் ரீதியாக ஒருமித்த கருத்து இல்லை. இத்தகையப் பொருட்களின் பொதுக் கட்டுப்பாட்டைத் தளர்த்த அரசாங்கம் பரிசீலிப்பது திடுக்கிட வைக்கிறது; இது குற்றவியல் ரீதியாக அபாயகரமானதாகும்.
2000-2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கதிரியக்க மூலங்களை வைத்திருந்த தனியார்கள் அவற்றை கட்டுப்படுத்த இயலாத 16 சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 11 மூலங்கள் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் (AERB) இதுவரை மீட்கப்படவில்லை. இவற்றில் குறைந்தது 9 கருவிகள் பெரும்பாலும் தனியார் மற்றும் பொதுத் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் படக்கருவிகள். மற்றவை போக்குவரத்தின் போது திருடப்பட்டன அல்லது தவறவிடப்பட்டன, ஆறுகளில் அகற்றப்பட்டன அல்லது குறைவான அளவு கதிர்வீச்சுக்கு ஆளான கிராமவாசிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கதிரியக்க உபகரணங்களை வைத்திருப்பதற்கு அல்லாமல், அவற்றைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் தனியார் துறைக்கு வழங்கப்பட்டால், அவை திருடப்படுவதற்கோ அல்லது இழக்கப்படுவதற்கோ அதிக வாய்ப்பு உள்ளது, இது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.
கோரிக்கையும் முடிவும்
இந்த அனைத்து கவலைக்குரிய விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அணுசக்தி மசோதா, 2025 (Atomic Energy Bill, 2025) தாக்கல் செய்யப்பட்டதையும், அணுசக்தி பாதிப்புகளுக்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010 (Civil Liability for Nuclear Damage Act, 2010) இல் அறிவிக்கப்பட்ட திருத்தங்களையும் நாங்கள் தீவிரமாகக் கண்டிக்கிறோம்.
அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்குவதைத் தடுக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் பயன்படுத்தும்படி எதிர்க்கட்சிகளை வலியுறுத்துகிறோம்.. இந்த ஆபத்துகளில் இருந்து இந்தியக் குடிமக்களையும் இந்தியாவின் சூழலியலையும் பாதுகாக்கும் கடமையை தற்போதைய இந்திய அரசாங்கம் கைவிட்டிருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகிறோம்; ஆழ்ந்த வருத்தமடைகிறோம்.
அணுசக்தி கொள்கையின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டில் இருந்து, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை அனைத்து அணுசக்தி / கதிரியக்க அபாயங்களிலிருந்தும் உள்ளடக்கிப் பாதுகாக்கும் ஒரு அணுசக்தி ‘பொது’ கொள்கையை நோக்கி மாறுமாறு கோருகிறோம். மேலும், வருங்காலச் சந்ததியினருக்குப் பேரபாயங்களை ஏற்படுத்தும் இதுபோன்ற அனைத்து அணுசக்திச் செயல்பாடுகளையும் நிறுத்திவிட வேண்டும் (decommissioning) என்றும் இறுதியாக நாங்கள் கோருகிறோம்.
Signatories (Individuals):
Vidya Dinker,
Lalita Ramdas,
Achin Vanaik,
Cynthia Stephen,
M. G. Devasahayam,
Madhu Bhaduri,
Amitabh Pandey,
Adhiti Ghosh Mehta,
Binu Mathew,
Rohini Hensman,
Sunita Sheel,
Feroze Mithiborwala,
Nisha Biswas,
Susie Tharu,
Govind Kelkar,
Kalyani Menon Sen,
Raksha Kumar,
Amrita Chhachhi,
Irfan Engineer,
Amita Pitre,
Chhaya Datar,
Vani Subramaniam,
Ammu Abraham,
Abha Bhaiya,
Rita Manchanda,
Anuradha Kapoor,
Pamela Phillipose,
Vanita Mukherjee,
Indira Hirway,
Chayanika Shah,
Harsh Kapoor,
Shylendra Boora,
S. R. Sarma,
Urvashi Sarkar,
Sudhir Vombatkere,
D. Gopalakrishna,
Misria Shaik Ali,
S. P. Udayakumar.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/11/no-to-privatization-of-the-nuclear-energy-sector/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு