தமிழக கோவில்களை RSS பயிற்சி கூடாரமாக மாற்றும் தி.மு.க அரசு !
பள்ளிகள் கல்லூரிகளைத் தொடர்ந்து தமிழக கோவில்களையும் இந்து சமய அற நிலையத்துறை மூலம் RSS பயிற்சி கூடாரமாக மாற்றி வருகிறது தி.மு.க அரசு
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் RSS பயிற்சியா?
RSS - இன் புகலிடமாக கோயில்கள் மாறி வருகின்றனவா?
காஞ்சிபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆர் எஸ் எஸ் ( RSS) அமைப்பின் பயிற்சியானது (அணி வகுப்பு மற்றும் இதர பயிற்சிகள்) கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி மத கலவரங்களை உண்டாக்க காத்திருக்கும் இந்து அடிப்படைவாத RSS அமைப்பிற்கு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் தினமும் காலை பயிற்சி நடப்பதும் அதை கண்டுகொள்ளாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அமைதி காப்பதும், மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்கு உரியது.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளை பயிற்சி கூடங்களாக மாற்றியது போதாது என்று RSS இயக்கமானது இப்போது அரசுக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்து உள்ளது .
தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்ந்து கைது செய்யப்படுவர்கள் பாஜக இந்து முன்னணி சங்பரிவார் கும்பல்கள் தான் என்பதை காவல்துறை அதிகாரிகளே ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் எங்களுக்கு RSS பயிற்சி நடப்பதே தெரியாது என்று சொல்வது அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் ஏற்புடையதுதானா?
இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் பெரும் மத மோதல்களுக்கு வழி வகுப்பதாக ஆகிவிடும் என்று மக்கள் மன்றம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று 30-9-22 புகார் அளிக்கப்பட்டது.
காஞ்சி மக்கள் மன்றம்....
- Sidhambaram Voc
(முகநூல் பக்கத்திலிருந்து)
பதிவாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு