நெட்டூரில் சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

தீக்கதிர்

நெட்டூரில் சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

மே 30- நெட்டூர் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

பிளக்ஸ் வைக்கக் கூடாதென தகராறு!

தென்காசி மாவட்டம், நெட்டூர் கிரா மத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூ ரமான கொலைவெறித் தாக்குதல் கட்ட விழ்த்து விடப்பட்டு 6 பேர் படுகாயம் அடைந் துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய வன்கொடுமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மே 29 அன்று திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் உறவினர்கள் சிலர் மே 28 அன்று இரவு 9 மணிக்கு மேல் மணமக் களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிரா மத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பகுதி யைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பிளக்ஸ் அமைத்துக் கொண்டிருந்த இளைஞர் களோடு ‘இங்கே பிளக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது’ என்று தகராறு செய்திருக்கிறார். இந்த தகராறு குறித்து ஆலங்குளம் காவல் துறைக்கும் தெரிந்திருக்கிறது.

அரிவாளால் சரமாரியாக வெட்டிய 9 பேர்!

இந்நிலையில், மே 29 அன்று மாலையில் திருமண வீட்டில் உறவினர்களும் நண்பர் களும் மணவிழா விருந்தில் பங்கேற்ப தற்காக கூடியிருந்துள்ளனர். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் 9 பேர் அடை யாளம் தெரியாத படி துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்ட வாறே வந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்கள் கூடியிருந்த வர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரி வாளை வீசி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் (49) த/பெ ஞானமுத்து, சந்தோஷ் குமார் (21) த/பெ கணேசன், அருள்மாறன் (23) த/பெ ரமேஷ், ராயப்பன் (18) த/பெ காபிரியேல், ராம்குமார் (20) த/பெ சேகர் மற்றும் திரு மண வீட்டில் மேளம் வாசிப்பதற்காக வந்தி ருந்த மேளக் கலைஞர் மாடசாமி (19) த/பெ பரமசிவம் ஆகியோர் படுகாயம் அடைந் துள்ளனர்.

இவர்கள், முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், பின்னர், பாளை யங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாதிய மனநிலையே கொலைவெறிக்கு காரணம்

திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலையே இந்தக் கொடூர சம்ப வத்திற்குப் பின்புலமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிரா மங்களில் இதுபோன்ற சாதிய ஆதிக்க வன்கொடுமைத் தாக்குதல்களும், படு கொலைகளும், பட்டியலின மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதிய கண் ணோட்டத்தோடு நடைபெறும் இத்தாக்கு தல்கள் மீது உரிய சட்டப்பூர்வமான நட வடிக்கையை மேற்கொள்ளாமல், வழக்கு களைப் பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சா யத்து ரீதியில் சமாதானமாகப் பேசி காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதால் தான் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறு கின்றன.

நெட்டூரில் 5 மாதத்தில் மட்டும் 8 வன்கொடுமைகள்

நெட்டூர் கிராமத்திலேயே, கடந்த 5 மாதங் களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த அனைத்து வன்கொடுமை கள் குறித்தும் ஆலங்குளம் காவல் நிலை யத்தில் புகார் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பிரச்சனையில் கூட காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து முறை யில் சமாதானம் பேசி அனுப்பிவைத்ததாக வும் மாதா கோவில் தெருவைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள். மே 28 அன்று நடைபெற்ற வன்கொடுமை யிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கமான முறையில் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்ச னையை முடித்துள்ளது.

உடந்தையாக இருந்த நபர்களையும் கைது செய்க!

எனவே, உரிய சட்டப்பூர்வமான நட வடிக்கைகளை மேற்கொள்ளாமலும், வழக்குகளைப் பதிவு செய்யாமலும் மிக அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறை யினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளி கள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆத ரவு அளித்தவர்கள் மீதும் எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டு மெனவும், இனிமேல் இதுபோன்ற சம்ப வங்கள் நிகழாவண்ணம் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது.

சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி யான தீருதவியை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதி யான பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாடு களை செய்திட வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மானூர் தெற்குப்பட்டிக் குள்ளும் ஒரு கும்பல் புகுந்து 3 பேரை வெட்டியதாக மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தீக்கதிர்

https://theekkathir.in/news/nettur-caste-attack-cpm-condemnation-tenkasi

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு