RSS ஊர்வலத்திற்கு அனுமதி - மஜஇக ஆர்ப்பாட்டத்திற்கு தடை
ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு துணைபோகும் திமுக அரசு - நீதிமன்றத்தின் கரசேவை
நவம்பர் 6ம் தேதி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதக்கலவரங்களை தூண்டும் வகையில் தமிழகமெங்கும் ஊர்வலமும் அணிவகுப்பும் நடத்தவுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று நடத்த திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை, PFI மீதான தடையை எதிர்த்த முஸ்லீம்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி திமுக அரசு தள்ளிவைக்க சொன்னது. தற்போது மீண்டும் ஊர்வலத்திற்கு சில மாவட்டங்களில் மட்டும் அனுமதியளித்துள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கும் கூடுதலாக அனுமதிக்கப்படும் நிலை நீடிக்கிறது. இதை கண்டித்தும் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யக் கோரியும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் நவம்பர் 4ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஹிட்லர் - முசோலினி பாசிச கும்பலின் வாரிசான ஆர்.எஸ்.எஸ்.இன் நவம்பர் - 6 ஊர்வலம் - அணிவகுப்பை முறியடிப்போம் !
தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு துணைபோகும் திமுக அரசு-நீதிமன்றத்தின் கரசேவையை முறியடிப்போம் !
பொருளாதார நெருக்கடியை மூடிமறைக்க சாதி மதவெறிப் பாசிசத்தை கட்டியமைக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்புகளை தடை செய்யப் போராடுவோம்!
கண்டன ஆர்பாட்டம்
இடம் : பெருந்துறை பேருந்து நிலையம் நாள்: 4.11.2022, வெள்ளி மாலை 4 மணி
தலைமை:
தோழர். ஆறுமுகம், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் ம.ஜ.இ.க
கண்டன உரை:
தோழர். மாயக்கண்ணன், மாநில அமைப்பாளர் ம.ஜ.இ.க
தோழர். சோமு, சேலம் மாவட்ட அமைப்பாளர் ம.ஜ.இ.க
தோழர். திருமாகுணவளவன், பெருந்துறை சட்டமன்ற தொகுதிச் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம்.
தோழர். ப.ரத்தினசாமி, அமைப்புச்செயலாளர். திராவிடர்விடுதலை கழகம்
தோழர். S.K. பாபு (எ) முஹம்மது அலி, முன்னாள் கவுன்சிலர், மாவட்ட துணை செயலாளர், தமுமுக.
தோழர். ந.வெ.குமரகுருபரன். ஈரோடு மாவட்டச் செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
நன்றியுரை:
தோழர். சதாசிவம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ம.ஜ.இ.க
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு
இந்நிலையில் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தோழர். ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர், “ஹிட்லர் - முசோலினி பாசிச கும்பலின் வாரிசான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதியளித்து கரச்சேவை செய்யும் திமுக அரசு எங்கள் அமைப்பின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் தடைவிதித்து அதன் பாஜக அடிவருடித்தனத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், போராடும் ஜனநாயக சக்திகள் மீது தொடர்ச்சியாக பாசிச அடக்குமுறைகளை ஏவுவதாகவும்” தெரிவித்தார். மேலும், வரும் நவம்பர் 4ம் தேதி திட்டமிட்டபடி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்ட வீடியோ: ஆர்ப்பாட்ட நேரலை
- செந்தளம் செய்திப் பிரிவு