அதானி தன் ஆவணங்களை வெளிப்படையாக கொடுக்க தயாரா?: ஹின்டன்பர்க் எச்சரிக்கை

தமிழில்: விஜயன்

அதானி தன் ஆவணங்களை வெளிப்படையாக கொடுக்க தயாரா?: ஹின்டன்பர்க் எச்சரிக்கை

அதானி  குழுமத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கம்பெனி ஆவணங்களை வெளிப்படையாக தர வேண்டிய நிலை ஏற்படும் என Hindenburg Research நிறுவனம் கூறியுள்ளது.

சுருக்கம்:

1. அதானி குழுமத்தை பற்றிய ஆய்வறிக்கை முடிவுகளில் Hindenburg Reasearch நிறுவனம் உறுதியாக இருப்பதாக கூறுகிறது.

2. வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக திகழும் வெளிநாடுகள் வழியாக மோசடி செயலில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது என Hindenburg Research நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த வியாழன் அன்று, இந்தியா மற்றும் அமெரிக்க சட்ட வழிகளில் “நஷ்ட ஈடு கோருவதோடு தண்டனை பெற்றுத் தருவது பற்றியும்” பரிசீலித்து வருவதாக அதானி குழுமம் பதிலறிக்கை தந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலேயே இந்திய ஏகபோக தொழிற்கூட்டு நிறுவனத்தை பற்றி ஆய்வறிக்கையில் கூறிய அத்தனையும் உண்மையே. மேலும் எங்கள் மீது எடுக்கப்படும் எந்த சட்ட நடவடிக்கையும் அவர்களுக்கு கைகொடுக்காது என Hindenburg Research நிறுவனம் கூறியுள்ளது.

அதானி குழுமத்தினர் எங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனர். தெளிவாக சொல்ல வேண்டுமானால், நாங்கள் அதை வரவேற்கிறோம். எங்களது ஆய்வறிக்கையில் கூறியவை எல்லாம் உண்மையானதே. மேலும் எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த சட்ட நடவடிக்கையும் அவர்களுக்கு கைகொடுக்கப்போவதில்லை” என்று முதலீடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஏகபோக தொழிற்கூட்டு நிறுவனத்தை பற்றி வெளியிடப்பட்ட எங்களது ஆய்வறிக்கைக்கு எதிராக அதானி குழுமத்தினர் அமெரிக்காவில் வழக்கு தொடுக்கும்பட்சத்தில் பரஸ்பர விபர வெளியீட்டு நடைமுறையின் போது அவர்களது கம்பெனி ஆவணங்களை தரச் சொல்லி கேட்போம் என்று Hindenburg Research தொடர்ந்து கூறியுள்ளது.

சென்ற வாரம் Hindenburg Research நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது.

பங்குச் சந்தையில் தனது நிறுவனப் பங்குகளின் “நிதி நிலைமை சீராக இருப்பது போலவும், கடன் நெருக்கடி ஏதும் தங்களுக்கு இல்லை எனக் காட்டுவதற்கு” வருமானங்களில் மோசடி செய்வது, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் நடந்த கொடுக்கல் வாங்கல்களை மூடிமறைப்பது போன்ற செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக அந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டியது.

Hindenburg Research நிறுவனத்தின் முழு செய்தி குறிப்பு

எங்களது ஆய்வறிக்கை வெளியாகி 36 மணி நேரம் ஆகிறது; நாங்கள் எழுப்பிய எந்தவொரு  முதன்மையான பிரச்சினை பற்றியும் அதானி குழுமம் இது வரையில் வாய் திறக்கவில்லை.

எங்களது ஆய்வறிக்கையின் முடிவில், எவ்வித ஒளிவுமறைவுமின்றி 88 கேள்விகளை முன்வத்துள்ளோம். அதானி குழுமம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதற்கு இதொரு நல் வாய்ப்பாக இருக்கும். எனினும், இதுவரையில் எந்தவொரு கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

மாறாக, நாங்கள் எதிர்பார்த்தது போல அதானி தாட்-பூட் என்று மிரட்டுவதற்கு இறங்கிவிட்டார். 106-பக்கங்கள், 32,000 வார்த்தைகள், 720-க்கும் மேற்பட்ட மேற்கோள் சான்றுகளுடன் இரண்டாண்டு காலத்தில் தயாரிக்கப்பட்ட எங்கள் ஆய்வறிக்கையை “ஆராய்ச்சி செய்யப்படாத அறிக்கை” என்று கூறியுள்ளார்; மேலும் எங்களுக்கு எதராக “நஷ்ட ஈடு கோரி தண்டனைப் பெற்றுத் தருவதற்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வழக்கு தொடர்வது குறித்து பரிசீலித்து வருவதாக” அதானி குழுமம் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தலைப் பொருத்தவரை, நாங்கள் அதை வரவேற்கிறோம் என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறோம். எங்கள் அறிக்கை சரியானது என்பதே எங்கள் வாதம். மேலும் எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த சட்ட நடவடிக்கையும் பயனற்றதாகவே இருக்கும்.

அதானி குழுமம் உண்மையிலேயே சொன்னதை செய்ய விரும்பினால், எங்கள் நிறுவனம் செயல்படும் அமெரிக்காவிலும் வந்து வழக்கு தொடுக்கட்டும். வழக்கு  விசாரணையில் பரஸ்பரம் விபர கேட்பு நடைமுறையின்போது அவர்களிடம் வேண்டிய ஆவணங்களை, கேட்டு பெறுவதற்கு ஒரு நெடிய பட்டியலே நாங்கள் திரட்டி வைத்துள்ளோம்.

அதானி Vs Hindenburg

“தீயநோக்கம், விஷம கருத்துக்கள் கொண்டுள்ளதோடு ஆராய்ச்சி செய்யப்படாத” ஆய்வறிக்கையை Hindenburg Reasearch நிறுவனம் வெளியிட்டுள்ளது என அதானி குழுமத்தின் சட்டப் பிரிவுத் தலைவரான ஜதின் ஜலன்துவாலா கூறியுள்ளார்.

“Hindenburg Reasearch நிறுவனத்திற்கு எதிராக நிவாரணம் கோரி, தண்டனை பெற்றுத் தருவதற்கு வேண்டிய இந்திய அமெரிக்க சட்டங்களை பரிசீலித்து வருகிறோம்” என்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பங்குகளை வைத்து இலாபம் பார்க்கும் Short seller நிறுவனமாக Hindenburg Reasearch நிறுவனம் இருக்கிறது என அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையும் அதில் சொல்லப்பட்டுள்ள ஆதாரமற்ற கருத்துகளும் அதானி குழுமத்தின் பங்குகளை நிரத்தரமாக பாதிப்படையச் செய்து சரியும் அதானி குழுமத்தின் பங்குகளை வைத்து லாபம் பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. “இந்தியப் பங்குச் சந்தைகளில் இந்த ஆய்வறிக்கை ஏற்படுத்தியுள்ள நிலையற்றத்தன்மை என்பது மிகுந்த கவலைக்குரிய விசயமாகும்” என்று ஜலந்துவாலா வெளியிட்ட ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Hindenburg Reasearch நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது பற்றி ஏதும் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடவில்லை.

அதானி தொழிற்நிலையங்களில் (Adani Enterprises) 20,000 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் Hindenburg Reasearch நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானியின் அத்தனை பங்குகளும் பெரும் சரிவைக் கண்டது.

தனது மொத்த சொத்து மதிப்பில் 6 பில்லியன் டாலர்கள் அளவிலான பங்குகளை விற்க வேண்டிய நிலைமை கடந்த புதன்கிழமை அன்று அதானி நிறுவனத்திற்கு ஏற்பட்டது. நிகழ்நேரத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலை கண்காணித்து வரும் Forbe’s பத்திரிக்கையின் தரநிலையில் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு அதானி பின்னுக்கு தள்ளப்பட்டார்.

கடந்த புதன்கிழமையன்று மும்பைப் பங்குச்சந்தையை 1.54% வீழ்ச்சியடைந்து அதானி தொழில்நிலையத்தின் பங்குகள் 3,389.85 ரூபாய்க்கு முடிந்துள்ளது. அதானி துறைமுகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பங்குகள் 6.3% வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.livemint.com/news/india/hindenburg-research-says-fully-stand-by-report-on-adani-group-11674740839648.html