அமெரிக்கா : “ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்”

டைம்ஸ் ஆப் இந்தியா

அமெரிக்கா : “ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்”

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என இந்திய அரசுக்கு வலியுறுத்தி வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சட்டத்தின் ஆட்சியும், நீதி மன்ங்களின் சுதந்திரமும் மதிக்கப்படுவதில் தான் எந்தவொரு ஜனநாயக நாட்டின் அஸ்திவாரமும் அடங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வழக்கு விசாரனை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உட்பட ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதில் தங்களுக்கும் அக்கறை உண்டென்பதால் இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிப்போம்.” என்று கடந்த திங்கள் கிழமை நடந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறைக்கான துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியிருந்தார். 

இந்தியாவுடன் கலந்தாலோசிக்கும் போது இரு நாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வழியாக, கருத்து சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை பாதுகாத்தல், ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொடர்ந்து எடுத்துக்கூறுவோம்.

'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று கூறியதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 அன்று வெளியானதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. கடந்த திங்கள் கிழமையன்று அரசு பங்களாவை காலி செய்யும் படி ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு மூன்று நாட்களான நிலையில் கடந்த திங்களன்று இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் களத்தில் இறங்கி “இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்” என்பதன் அடிப்படையில் தங்களது கடுமையான கண்டனங்களை மோடி அரசாங்கத்திற்கு எதிராக பதிவு செய்தனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய எதிர்கட்சியினரை பாஜக கண்டித்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக ராகுல் காந்தி கூறியதை நியாயப்படுத்தும் ஒரு “கீழ்த்தரமான அரசியலை” காங்கிரஸ் கையிலெடுத்துள்ளதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

அமெரிக்காவுடன் இருதரப்பு உறவு கொண்டுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒருங்கிணைந்து செயல்படுவது போன்றவையெல்லாம் இயல்பான விசயம் தான் என்று வேதாந்த் படேல் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் களத்தில் இறங்கி மோடி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து வருவதோடு, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக “இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்” என்றும் போராடி வருகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தியின் கருத்தை நியாயப்படுத்தும் வகையில் ஒரு “கீழ்த்தரமான அரசியலை” காங்கிரஸ் செய்து வருகிறது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- விஜயன்

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://m.timesofindia.com/world/us/us-watching-rahul-gandhis-case-in-indian-courts-official/articleshow/99047704.cms?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=TOIArticleshowicon