அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள்

சுதந்திர இந்தியா ?

அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள்

அரசியல் அமாவசை மோடியின் 75வது சுதந்திர தின உரையில் பெண்களின் சமூக வளர்ச்சி, பாதுகாப்பு, கல்வி குறித்து வாய்ச்சவடால் அடித்த அதே வேளையில் நாட்டையே உலுக்கிய  சிறுபானமையினருக்கெதிரான குஜராத் இந்துமதவெறி  கலவரத்தில் பில்கிஸ்பானு  கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் அவர்  குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வழக்கில் கைதான கயவர்களை விடுதலை செய்து பெண்களின் பாதுகாப்பிற்கு எதிராகவும் வன்முறையாளர்கள் கலவரக்காரர்களுக்கு சாதகமாக அவர்களை போராடி வெளிக்கொண்டு வந்தது குஜராத் பாஜக அரசு. மோடி அரசின் பெண்களுக்கெதிரான நிலையை  அம்பலப்படுத்தும் விதமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவர அறிக்கையில் கடந்த ஆண்டினைக் காட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஒரு மணி நேரத்திற்கு பெண்களுக்கெதிரான குற்றங்கள்  49ஆகவும் ஆண்டிற்கு  4,28,278 ஆகவும் பதிவாகின்றது. இதில் நாள் ஒன்றுக்கு பாலியல் வல்லுறவு வழக்குகள் மட்டும் 86 எனும் வீதத்தில் வருடத்திற்கு 31,677 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் 5% அதிகரித்து ஆண்டிற்கு 52,974 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் பாஜக ஆட்சியிலுள்ள உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான்  மாநிலங்கள்தான் முதல் இடம் வகிக்கின்றன" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

- செந்தளம் செய்திப் பிரிவு