கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு செப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி சரிவடைந்துள்ளது

சுருக்கம் : செப்டம்பரில் இந்திய தொழிற்துறை உற்பத்தியின் அளவு, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதீத மழைப்பொழிவு மற்றும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொண்ட ஜீன்(அடிப்படை) மாதத்தின் உற்பத்தி அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும், பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை அறிவதற்கு பயன்படுத்தப்படும் உயர்தரக் குறியீடுகளும், உயர் வளர்ச்சி காட்டக்கூடிய வகையில் அக்டோபரில் உற்பத்தி அளவு அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு செப்டம்பரில் தொழிற்துறை உற்பத்தி சரிவடைந்துள்ளது

செப்டம்பர் மாதத்தில் மழையின் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தது, இது தொழில்துறை உற்பத்தியை எதிர்மறையாக பாதித்துள்ளது. செப்டம்பரில் தொழில்துறை வளர்ச்சி பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்துள்ளது என்பதே இதன் பொருள். கூடுதலாக, செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைவாக(5.8%) இருந்தது. ஜீன் மாதம் வழக்கத்தை விட அதிக வளர்ச்சி வீதத்தைக்(10.3%) கண்டுள்ளது. இருப்பினும், தொழில்துறை வளர்ச்சி அக்டோபரில் மேம்படும் என்றும், செப்டம்பரை விட அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் தொழிற்துறை வளச்சி வீதம் என்பது அதிகமாகவே இருந்துள்ளது என்பதை பெரும்பாலான உயர் தரக் குறிகாட்டிகள் உறுதிபடுத்தியுள்ளன. அவ்வகையில் இந்தாண்டும் அக்டோபரில் தொழிற்துறையின் உற்பத்தி அதிகரிக்கும்” என்று கடன் செலுத்தித் திறன் குறித்து மதிப்பீடுகளை வழங்கி வரும் ICRA நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுனர் அதிதி நாயர் கூறியுள்ளார்.

ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அடிப்படை ஆண்டின் வளர்ச்சி வீதம் குறைவாக இருப்பதால் அக்டோபரில் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின்(IIP) அளவு சராசரியாக 7 முதல் 10 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று ICRA நிறுவனம் உத்தேசித்துள்ளது.

அரசின் ஜிஎஸ்டி வருவாய் பத்து மாதங்களில் இல்லாத அளவிற்கு அக்டோபரில் 13 சதவீதம் வரை வேகமாக உயர்ந்து 1.72 லட்சம் கோடி என்ற அளவிற்கு வசூலாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்(SIAM) சார்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரக் குறிப்பில் ஒட்டுமொத்தமாக வாகன விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களின் அளவு அக்டோபர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தி, மின்சார நுகர்வு, எஃகு உற்பத்தி, மின்னணு முறையில் ஜிஎஸ்டி ரசீதுகள் போன்ற உயர் தர பொருளாதாரக் குறியீடுகள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 11 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்தாண்டிற்கான பொருளாதார செயல்பாடுகளும் தொடர்ந்து வளரும் என்பதையே உணர்த்துகிறது. இதனோடு கூடவே, பண்டிகைக் கால தேவையும், ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படை ஆண்டின் வளரச்சி வீதத்தின் சாதகமான நிலையும் சேரும்போது 2023, அக்டோபரில் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கும்” என்று இந்தியா ரேடிங்ஸ் அன்ட் ரிசர்ச்(Ind-Ra) என்ற கடன் மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுனர்களான பராஸ் ஜர்சா மற்றும் சுனில் கே சின்ஹா ஆகியோர் கூறியுள்ளனர்.

2023-ஆம் ஆண்டிற்கான சராசரி உற்பத்தி வளர்ச்சி என்பது ஸ்திரத்தன்மையுடன் காணப்படும் என்பதையே இந்த ஆண்டின் முதல் ஆறு மாத கால வளர்ச்சி வீதத்தின் போக்குகள் எடுத்துக்காட்டுகிறது என்று பொருளாதார நிபுனர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 “ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பொருளாதார போக்குகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளதோடு, தொழிற்துறை வளர்ச்சியின் ஆண்டு சராசரி ஸ்திரத்தன்மையுடன் காணப்படும். நுகர்வும், முதலீடும் அதிகரித்து காணப்படுவதால் இந்த ஸ்திரத்தன்மையே வருங்காலங்களிலும் தொடரும்” என்று பரோடா வங்கியின் முதன்மை பொருளாதார நிபுனர் மதன் சப்நாவிஸ் கூறியுள்ளனார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டங்களில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதில் உற்பத்தித் துறை மட்டும் 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தாண்டில் நிலையான வளர்ச்சி இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. வருகிற சில மாதங்களில் பொருளாதார போக்குகள் மேம்படுவதற்யே அல்லது இதே ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதற்கே வாய்ப்புள்ளது. நுகர்வு நடவடிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியிருப்பதால் இப்போதைக்கு தொழிற்துறை சரியான பாதையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.

பரந்த அளவில் காணப்படும் சரிவு

பொருளாதாரக் குறிகாட்டிகளில் பயன்படுத்தக்கூடிய மூன்று முக்கிய துறைகளுமே செப்டம்பரில் சரிவை சந்தித்துள்ளது. முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் உற்பத்தித் துறையின் அளவு 9.5% என்ற நிலையிலிருந்து 4.5% என்ற நிலைக்கு சரிபாதியக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மன்சாரத்துறை 15.3% என்றிலையிலிருந்து 9.9% என்ற நிலைக்கும், சுரங்கத் துறை 12.3% என்ற நிலையிலிருந்து 11.5% என்ற நிலைக்கும் சரிவடைந்துள்ளது. 

இந்த மந்தநிலை குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமல்லாது பரந்த அளவில் எல்லா பிரிவுகளையும் பாதித்துள்ளது, குறிப்பாக நுகர்வு பொருட்களின் செயல்பாடுகளும்கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவ்வகையில் நீடித்த பயன்பாடுள்ள நுகர்பொருட்கள் +1.0 சதவீதமும், நீடித்த பயன்பாடிள்ள நுகர்பொருட்கள் +2.7 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பொது மந்தநிலைதான், இந்தாண்டு செப்டம்பரில் மின்சாரத்துறை மற்றும் சுரங்கத்துறையைக் காட்டிலும் உற்பத்தித்துறையின் செயல்பாடுகளை படுமோசமாக பாதித்துள்ளது” என்று அதிதி நாயர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தொழிற் துறையின் மூன்று பிரிவுகளிலுமே மந்தநிலை காணப்படுகிறது. அதில் உற்பத்தித் துறையில் 2 சதவீத சரிவும், மின்சாரத் துறையில் 6.6 சதவீத சரிவும் ஏற்பட்டுள்ளது.

“ஜவுளித்துறையை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டிலும் உற்பத்தி அதிகரித்திருப்பதோடு அதையொட்டிய ஏற்றுமதியும் அதிகரித்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.” என்று  ராகுல் பஜோரியா கூறுகிறார். பார்க்லேஸ் என்ற நிதி ஆய்வு நிறுவனத்தின் மேலாண் இயக்கநராகவும், வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆசிய நாடுகளுக்கான பொருளாதாரப் பிரிவின்(சீனா நீங்கலாக) தலைவராகவும் இருந்து வருகிறார்.

நுகர்வுப் பண்டங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலதனப் பண்டங்கள்(Capital goods) மற்றும் நுகர்வுப் பண்டங்களின்(Consumer goods) உற்பத்தி மட்டுமே செப்டம்பர் மாதத்தில் காணப்பட்ட தொடர் சரிவிலிருந்து தப்பித்துள்ளது.

தொழிற்துறையில் காணப்படும் மந்தநிலை மற்றும் பிறத் துறைகளில் காணப்பட்ட சரிவுக்கு மாறாக நீடித்த பயன்பாடுள்ள நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியும், மூலதனப் பண்டங்களின் உற்பத்தியும் மாதந்தோறும் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும், இது எந்தளவிற்கு நிலைத்திருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பஜோரியா கூறினார். 

ஒவ்வொரு ஆண்டும் நீடித்த பயன்பாடற்ற நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி தொடர்ச்சியாக 3.5 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்த நிலையில் இந்தாண்டு 2.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

“தென்-மேற்கு பருவகால சாகுபடி எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பதால் ஊரகப் பகுதிகளில் நுகர்வுக்கான செலவினங்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று சப்நாவிஸ் கூறியுள்ளார்.

சிறு பின்னடைவே

ஆகஸ்ட் மாதத்தில் 10.3 சதவீதம்  என்ற நிலையிலிருந்து செப்டம்பரில் 5.8 சதவீதம் அளவிற்கு தொழிற்துறை உற்பத்திக் குறியீடு சரிவடைந்துள்ளது.

அக்டோபரில் இந்தப் பின்னடவு சரியாகும் என்று பொருளாதார நிபுனர்கள் நம்பிக்தைத் தெரிவித்துள்ளனர்.

சிறு பின்னடவுகள் இருந்தபோதிலும் இந்த ஆண்டின் சராசரி தொழிற்துறை வளர்ச்சி என்பது நிலையானதாகவே இருக்கும் என பொருளாதார போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

(% மாற்றம், மாதந்தோறம்)தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP)ஏப்ரல்-22

6.7மே-22

19.7ஜூன்-22

12.6ஜூலை-22

2.2ஆகஸ்ட்-22

-0.7செப்டம்பர்-22

3.3அக்டோபர்-22

-4.1நவம்பர்-22

7.6டிசம்பர்-22

5.1ஜனவரி-23

5.8பிப்ரவரி-23

5.8மார்ச்-23

1.7ஏப்ரல்-23

4.6மே-23

5.7ஜூன்-23

4.0ஜூலை-23

6.0ஆகஸ்ட்-23

10.3செப்டம்பர்-23

5.8(% மாற்றம்,மாதந்தோறும்)ஆகஸ்ட்-23

செப்டம்பர்-23

சுரங்கம்

12.3

11.5

உற்பத்தி

9.3

4.5

மின்சாரம்

15.3

9.9

முதன்மை பொருட்கள்

12.4

8.0

மூலதன பொருட்கள்

13.1

7.4

இடைநிலை பொருட்கள்

6.8

5.8

உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்கள்

13.5

7.5

நீடித்த பயன்பாடுள்ள நுகர்வுப் பொருட்கள்

5.8

1.0

நீடித்த பயன்பாடு அல்லாத நுகர்வுப் பொருட்கள்

9.6

2.7மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்(MoSPI)(இஷான் கெரா)

- விஜயன் (தமிழில்)