குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

7 ஆண்டுகளில் 9,214 வன்கொடுமை வழக்குகள் பதிவு - தீக்கதிர்

குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில், தலித்துக்கள் மற்றும் தலித் பெண்களுக்கு எதி ரான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்தி ருப்பதை அரசு தரவுகளே வெளிக்கொண்டு வந்துள்ளன. குஜராத் மாநிலத்தில், தலித் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாக, கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 9 ஆயிரத்து 214 வழக்குகள் பதிவாகியுள்ளன.  ஜூலை 12 அன்று குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சமாதியாலா கிராமத்தில் கதிதர்பார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இரண்டு தலித் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர், கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் மருத்துவமனை  முன்பு போராட்டம் நடத்திய பிறகே, விசாரணை நடத்த  சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் காவல்துறை அமைத்தது.

இந்த ஒரு நிகழ்வு மட்டும் அல்லாது குஜராத் மாநிலம் முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் தலித்  மக்களுக்கு எதிராக 9,214 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதி கரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தை தங்கள் மாடலாக பாஜக தம்பட்டம் அடித்து வரும் பின்னணியில் ஒன்றிய அரசின் தலித் விரோத போக்குகளை அரசின் புள்ளி விவரங்களே அம்பலப்படுத்தியுள்ளன. ஒன்றிய அரசு, தேசிய குற்ற ஆவண காப்பத்  தின் தரவுகளை, நாடாளுமன்றத்தில் வழங்கியது.  பாஜக ஆட்சியில் 2015-க்குப் பிறகு ஆண்டு தோறும் தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதை அந்த தரவுகளே காட்டு கின்றன. 2015-இல் தலித்துகளுக்கு எதிராக 1010  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதில் 10  வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப் பட்டுள்ளன; இதுவே 2016 ஆம் ஆண்டில், 310 குற்றச் சம்பவங்கள் அதிகரித்து 1322 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, அந்த ஆண்டும் மிக குறைவாக 22 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2017-இல் 1477, 2018-இல் 1426, 2019-இல்  1416, 2020-இல் 1326, 2021-இல் 1201 என ஒட்டு மொத்தமாக 7 ஆண்டுகளில் 9214 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல, குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டு களில் தலித் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக 185 கொலை முயற்சி வழக்குகளும், 675 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 486  வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்

    ஆண்டு    வழக்குகள்

    2015    1,046

    2016    1,322

    2017    1,477

    2018    1,426

    2019    1,416

    2020    1,326

    2021    1,201

    மொத்தம்    9,214

தலித் பெண்கள் மீதான வன்முறை 

ஆண்டு     கொலை,    பாலியல்    பிற         முயற்சி    வன்கொடுமை    வன்முறை

2015    25    65    51

2016    32    70    75

2017    24    105    63

2018    25    92    77

2019    31    107    82

2020    27    116    69

2021    21    120    69

மொத்தம்    185    675    486

 - தீக்கதிர்