ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கும் குறுவை சாகுபடிக்கும் உள்ள தொடர்பு

தமிழில்: தரணி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கும் குறுவை சாகுபடிக்கும் உள்ள தொடர்பு

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் (BJP)அரசாங்கத்தின் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தின் உண்மையானஅரசியல் நோக்கங்கள் மற்றும் தாக்கம் பற்றிய விவாதங்கள் கடந்த சிலநாட்களாக அரசியல் வட்டாரங்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட பல்வேறுதளங்களில் வந்துள்ளன. இந்த விவாதங்கள் பரந்த அளவில் இரண்டுபுள்ளிகளைச் சுற்றி வருகின்றன. முதலாவதாக, இதை முன்வைப்பதில்அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியால் நாடு முழுவதும்உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை சீர்குலைப்பதேஎன்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இரண்டாவது விஷயம் என்னவென்றால், முந்தைய காலகட்டத்தை போல இல்லாமல் மே 2024 தேர்தலை சந்திக்க பாஜக தயங்குகிறது – பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் கடந்த சில தங்களாகவே படிப்படியாக நம்பிக்கை குறைந்து வருகிறது என்று என்.டி.ஏ கூட்டணி மத்தியில் நிலவி வரும் மதிப்பீடும் இதற்கு காரணமாக்கும்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முழுமையான தோல்வியும் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்களை சந்திக்கவுள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கட்சியின் வாய்ப்புகள் பற்றிய எதிர்மறையான அடிப்படை அறிக்கைகள் இந்த மதிப்பீட்டிற்கு முக்கிய காரணங்களாகும்.

கர்நாடகா தோல்விக்குப் பிறகு, ஜூன் மாத தொடக்கத்திலேயே “ஒரே நாடு ஒரே தேர்தல்” யோசனை குறித்த ஆலோசனையைத் தொடங்கும் பணியை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்படைத்தது இந்த மதிப்பீடுகளுக்கு இன்னும் வலுசேர்க்கிறது.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில்தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” யோசனை மத்திய அரசால் முறையாக வெளிகொண்டுவரப்பட்டது அனால் தனது ஜனாதிபதி பதவிக்கு பிறகிலிருந்தே, கோவிந்த் அவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் கடைசி வரை பரபரப்பான கால அட்டவணையுடன் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் தான், பத்து மாநில ஆளுநர்கள் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்ராவ்பகவத்தையும் சந்தித்தார்.

அனைத்து மதிப்பீடுகளின்படி, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்மறையான முடிவுக ள் வரும்பட்சத்தில், அது மே 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய அளவில் பாஜகவின் வாய்ப்புகளை பாதிக்கும் என்பதுதான் உள் விவாதங்களில், குறிப்பாக சங்பரிவார் தலைமை மட்டத்தில் மேலோங்குகின்ற கருத்துக்களாகும். மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பின்னர் தேசிய அளவிலும் இந்தத் தேர்தல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால், தங்களுக்கு எதிரான மதிப்பீடுகளை தவிர்க்கலாம் என்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், நாடு முழுவதும் உள்ள ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டமைப்பினரிடையே பெரும் குழப்பம் மற்றும் வெளிப்படையான சண்டைகள் உருவாகும் என்று சங்பரிவார் கணக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் தங்கள் மாநிலங்களில் தங்கள் அதிகாரச் சமன்பாடுகளையும் பலங்களையும் பாதுகாத்து முன்னேற முயற்சிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி அதன் அரசியல் அந்தஸ்தை மேம்படுத்துவதற்கு தேசிய அளவில் உந்துதலாக இருக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

கோவிந்த் மற்றும் அவரது குழுவினரிடமிருந்து என்ன உறுதியான ஆலோசனைகள் வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் குழுவின் அறிக்கை செப்டம்பர் 18 முதல் 22 வரையிலான ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் அமித் ஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் முன்னாள் தலைமை ஆணையர் சஞ்சய் கோத்தாரி. இந்த குழுவில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இடம்பெற்றிருந்த போதிலும், அவர் பரிசீலனைகளை ஏற்க மறுத்துவிட்டார்.

உயர்மட்ட குழுவின் பணி மற்றும் அதன் பரிந்துரைகள் மறைக்கப்பட்ட நிலையில், உண்மையான அரசியல் நோக்கங்கள் மற்றும் முன்மொழிவின் தாக்கம் குறித்து ஊகங்கள் நிறைந்துள்ளன. தற்போது மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் தேர்தல்களையொட்டி சங்கபரிவார் அமைப்புகளான ஆர்எஸ்எஸ், பிஜேபி, பாரதீய கிசான் சங்கம் (பிகேஎஸ்) மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) ​​இப்பயிற்சிகுறித்தபுதிய விவாதங்கள் மேலோங்குகின்றன.

பல மாநிலங்களில் விவசாயம் எவ்வளவு மோசமாகபாதிக்கப்பட உள்ளது என்பதுகுறித்தே இங்குள்ளவர்கள் பேசுகிறார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் அறுவடை செய்யும் குறுவை சாகுபடி குறித்தே அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த பயிர்களின் விளைச்சலுக்கு உகந்த பருவநிலை இல்லாததால் இதுபற்றி விவாதிப்பதே முக்கியமான விசயமாகமாறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சங்க பரிவார தலைமை வட்டாரங்கள், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வட இந்தியாவில் மழைப்பொழிவு குறைவாக இருந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் சங்க பரிவார் அமைப்புகளுக்குள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குருவை (கரீஃப் காலம்) சாகுபடி நன்றாக நடப்பதற்கு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது அவசியமாகிறது.

மத்தியபிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாரதிய கிசான் சங்கம்(BKS) மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (BMS) மூத்த தலைவர்கள் AIDEM என்ற பத்திரிக்கையிடம், நாட்டின் பிற பகுதிகளில் குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களிலும் (ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்) குருவை சாகுபடியை பாதிக்கக் கூடிய வகையில் மழைப்பொழிவு குறைவாகவே இருந்துள்ளது எனக் கேள்விப்பட்டதாக கூறியுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் பருவமழை பொய்த்து போவது மட்டுமின்றி உரிய காலத்தில் மழை பெய்யாமல் போவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "குருவை சாகுபடி பாதிப்பிற்கு உள்ளாகும் என்றே எங்களுக்கு தோன்றுகிறது, இதையொட்டி வரும் நாட்களில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படும்" என்று போபாலை சேர்ந்த ஒரு மூத்த BKS தலைவர் AIDEMயிடம் கூறினார்.

இந்த பாதிப்புகளின் விளைவுகளை அக்டோபர் மாதத்திற்கு பிறகு அனைவரும் உணரத் தொடங்குவர் என்றும் அவை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். "எப்படியாவது ஜனவரி 2024க்குள் நாடாளுமன்றத் தேர்தலை துவக்குவதோடு, அதை சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்துவது என்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்திலேயே ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய்வதற்கு மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து குழுவொன்றை அமைத்தனர். மேற்கூறிய பிரச்சினைகளால் அவர்களின் திட்டம் தடைபட்டுள்ளது" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை நான்கைந்து மாதங்கள் தள்ளிப் போடுவது குறித்து சங்பரிவார் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்திவிட முடியும் என்று நம்பினர். இருப்பினும், தற்போதைய தேர்தல் விதிகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டுதை சாதிக்க முடியுமா என்பது குறித்து அவர்களுக்கே தெளிவான புரிதல் இல்லை எனலாம்.

அரசியல் மட்டத்திலும், தேர்தல் நடைமுறைகளிலும் குருவை சாகுபடி பிரச்சினை கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தில் மேலும் ஒரு புதிய சிக்கலை தோற்றுவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் என்னென்ன நிகழ்ச்சி நிரல் இருக்கும் என்பது கூட ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. இது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும், மல்லிகார்ஜுனகார்கேவும் வெளிப்படையாக கேட்டுள்ளனர். "சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த எந்தவொரு ஆட்சியும் இப்போது பாஜக செய்ததைப் போல நிகழ்ச்சிநிரலைக் குறிப்பிடாமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை தொடங்கியதில்லை" என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

(வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்)

- தரணி
(தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/union-governments-committee-on-one-nation-one-election/