மத்தியப் பிரதேசத்தில் சங்பரிவாரங்களுடன் ஐக்கியமாகும் காங்கிரஸ்

தீக்கதிர்

மத்தியப் பிரதேசத்தில் சங்பரிவாரங்களுடன் ஐக்கியமாகும் காங்கிரஸ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தீவிர இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் சேனா தலைவர்கள் தொண்டர்களுடன் காங்கிரஸில் கூண்டோடு இணைந்துள்ளது ஆளும் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சார ஏற்பாடுகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தற்போதே தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், நடப்பாண்டின் ஜனவரி மாதத்திலிருந்தே மத்தியப் பிரதேச  மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவது வாடிக்கையான நிகழ்வாக மாறி யுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சர்கள் தீபக் ஜோஷி மற்றும்  ரகுநந்தன் சர்மா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி யது ஆளும் பாஜகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தீவிர இந்துத்துவா ஆர்எஸ்எஸ்  துணை அமைப்பான பஜ்ரங் சேனாவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தன் சர்மா, மாநில தலைவர் அம்ரிஷ் ராய், இளைஞரணி (யுவ மோர்ச்சா) மாநில தலைவர் ராஜேந்திர தாக்கூர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் (அஷ்டா) ஊர்மிளா மராத்தா ஆகிய 4 முக்கிய  தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேற்குறிப்பிட்ட 4 பேரும் பஜ்ரங் சேனாவின் ஒரு பிரம்மாண்ட கூட்டத்துடன் காங்கிரஸ்  கட்சியில் இணைந்துள்ளது ஆளும் பாஜகவில் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு