பாசிச அரசுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் பேட்டி

பாசிச அரசுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

புனரமைப்பின் மூலம் உலக வங்கி 50 பில்லியன் டாலர் கடன் கொடுக்க முடியும்: யெலன்

உலக வங்கியின் தற்போதைய புனரமைப்பு, அடுத்த தசாப்தத்தில் 50 பில்லியன் டாலர் வரை கடன் வழங்கும் திறனை ஏற்படுத்தக்கூடும் என்று (முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பங்குதாரர்களின் கூட்டங்களுக்கு முன்னதாகவே) அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் கூறினார்.

மத்திய வங்கியாளர்கள், நிதி அமைச்சர்கள் மற்றும் 180 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் வசந்த காலக் கூட்டங்களுக்கு அமெரிக்க தலைநகரில் வரும் வாரத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை மறுசீரமைக்கவும் சந்திக்கவும் கடன் வழங்குபவர்களின் உந்துதலுக்கு மத்தியில், உலக வங்கியின் மாற்றம் குறித்து விவாதத்தின் முக்கிய தலைப்பு இருக்கும். உலக வங்கி குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்கா உள்ளது.

"பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், முரண்கள் மற்றும் மந்தநிலை ஆகியவற்றிற்கு எதிரான கட்டமைப்பைச் சேர்ப்பதற்கான வங்கியின் பணியின் புதுப்பிப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று யெலன் AFP உடனான பேட்டியில் கூறினார்.

மேலும்,

"அடுத்தபடியாக, இந்த சவால்கள் தனித்தனியாகவோ அல்லது முரண்படுவதாகவோ இல்லை, மாறாக பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டவை என்பதை அங்கீகரிக்க வேண்டும்." என்றும்

இந்த நோக்கங்களைச் நிறைவேற்ற வங்கி அதன் நிதித் திறனை விரிவுபடுத்துகிறது, மேலும் அடுத்த பத்தாண்டுகளில்  50 பில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கும் திறனை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது" என்றும் யெலன் கூறினார்.

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் (IBRD இன்) நிலையான கடன் மட்டத்திலிருந்து 20% உயர்வை, இந்த நடவடிக்கை மூலமாக குறிப்பிடத்தக்க அளவில் செய்யலாம்.

யெலன் மேலும் கூறினார். வங்கியின் செயல்பாட்டு மாதிரியை "நாங்கள் அமைக்கும் இலக்குகளை நோக்கி" மேம்படுத்துவதாக இந்த அறிவிப்பு இருக்கும்.

மேலானவையுடன், உள்நாட்டு மற்றும் தனியார் மூலதனத்தை திரட்டுவதற்கு அதிக ஊக்கத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

- வெண்பா

(தமிழில்) 

மூலக்கட்டுரை: Agence France - Presse (AFP)