உக்ரைனுக்கான சர்வதேச ஆதரவு பெருமளவு சரிவு

அமெரிக்க – நேட்டோவின் இராஜதந்திரத்திற்கான தோல்வியா?

உக்ரைனுக்கான சர்வதேச ஆதரவு பெருமளவு சரிவு

ஐ.நாவில் உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிரான உக்ரைனால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மட்டுமே ஆதரித்துள்ளது.

ஐ.நாவிற்கான உகரைனிய தூதுவர் செர்ஜி கிஸ்லிட்சா 24, ஆகஸ்ட் (புதன்கிழமை) அன்று ஐ.நாவில் முன்மொழிந்த தீர்மானத்திற்கு மொத்தமுள்ள 193 நாடுகளில் வெறும் 58 நாடுகள் மட்டுமே உக்ரைனை ஆதரித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் நாட்டின் சுதந்திர நாளான்று (24, ஆகஸ்ட்) ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோ கான்ப்ரென்சிங் மூலம் உரையாற்றியதை தொடர்ந்து இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் நேரில் சென்றுதான் உறையாற்ற வேண்டும் என்று விதி நடைமுறையில் உள்ளது. ஆனால் உக்ரைனை அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ கான்ப்ரென்சிங் மூலம் உறையாற்ற இருக்கின்ற நடைமுறையை மீறுவதற்கு ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களை சேர்த்து 15 நாடுகளில் 13 நாடுகள் திரையில் தோன்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசலாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இந்த 13 நாடுகளில் இந்தியாவும் முதல் முறையாக இரசியாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக ஓட்டளித்தது. குறிப்பாக அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளின் நெருக்குதலை தனிப்பதற்கும், தானும் அமெரிக்க-நேட்டோ அணிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்கு இதில் உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டுள்ளது. இரசியா மட்டும் எதிராக ஓட்டளித்து மட்டுமின்றி இந்த நடைமுறை மீறலுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. சீனா ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகி கொண்டது.

மேற்குலக நாடுகளில் பெரும் ஆதரவோடு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீது நடந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புப் போருக்கு ரஷ்யா முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும்ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு இப்போதே ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை எனில் இந்த ரஷ்ய கொலைகாரர்கள் உலகின் அனைத்து நாடுகளின் மீதும் தங்களின் போர்வெறியை காட்டுவார்கள் எனவும் கூறினார். உலகின் எதிர்காலம் உக்ரைன் மண்ணில்தான் நிர்ணயிக்கப்படும் என்றும்உக்ரைனின் சுதந்திரமே உலகின் பாதுகாப்பு எனவும் அவர் எச்சரித்தார்.

ஆனால் அவர் உரையாற்றியதற்கு பிறகு நடத்தப்பட்ட தீர்மானத்தில் வெறும் 58 நாடுகள் மட்டுமே உக்ரைனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கிய சில நாட்களில் ஐ.நாவில் இரசியாவிற்கு எதிராக மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 141 நாடுகள், அதாவது 73% நாடுகள் இரசியாவிற்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. ஆனால் இப்போது உக்ரைன் ஆதரவு பெரும் சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அறிக்கையில் ஆதரித்து கையொப்பமிட்ட நாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜார்ஜியா, துருக்கி, பல ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளன.

அதே நேரத்தில் இரசியாவிற்கு ஆதரவாக 30% நாடுகள் இருந்துள்ளது. இதில் உக்ரைனுக்கு எந்தவொரு ஆப்பிரிக்க நாடுகளும், பாரசீக வளைகுடா நாடுகளும் மற்றும் BRICS நாடுகளும் ஆதரவளிக்கவில்லை.

-செந்தளச் செய்திப் பிரிவு