அந்நியக் கடன் என்ற அரக்கன்
மீநிலங்கோ தெய்வேந்திரன்

2028 ஆம் ஆண்டு வரை எந்தக் கடனையும் செலுத்தத் தேவையில்லை. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொருளாதார ரீதியாக இலங்கைக்குப் பிரச்சினையில்லையென்று ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது எமது கண்களைத் திறந்துகொண்டே குளத்தில் குதிப்பது போன்றது.
இவ்வாண்டு பட்ஜெட் குறித்து பல கதைகள் சொல்லப்பட்டாலும் ஓர் உண்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த உண்மை இனிவரும் பல தசாப்தங்களுக்கு இலங்கைக்கு மிகுந்த சவாலாக இருக்கும். அதைக் கையாளும் மந்திரக்கோல் இலங்கை ஆட்சியாளர்களின் கையில் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை. அந்த உண்மை யாதெனில், இலங்கை அத்தியக் கடன் என்ற அரக்களிடம் சிக்கிச் சீரழிகிறது. ஆனால், அந்த அரக்கள் குறித்த உண்மைகளை எவ்வோகும் போ மறுக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் சமாளிக்கலாமென்று நம்புகிறது. அதனால் அதன் தீவிரத்தை விளக்கமாகவும் தெளிவாகவும் போத் தவறுகிறது.
தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் ஐ.எம்.எவ்வின் உடன்படிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது. இரண்டாவது எதுவித உறுதிப்பாடுமின்றி இலங்கையின் கடன்வழங்குநர்களுடன் அவர்களுக்கு வாய்ப்பான ஓர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. இவை இரண்டும் தவிர்த்திருக்கக்கூடியவை. ஆனால், தேசிய மக்கள் சந்தியின் கோளாரான பொருளாதாரக் கொள்கைகள் இதைச் சாத்தியமாக்கின. இலங்கை மக்களை அந்தியக் கடனிலிருந்து நீண்டகாலத்தில் விடுவிக்கக்கூடிய வாய்ப்புகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அரசாங்கமும் தவறவிட்டமை என்பதுதான் உண்மை.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் அரசாங்கம் இவ்வாண்டு கடன்களைச் செலுந்தத் தேவையில்லை. அவ்வகையில் அவ்வுடன்படிக்கைகள் சாதகமானவை என்ற வலையில் பேசிக் கொண்டிருக்கிறார் ஆங்கிலத்தில் The devil is in the details என்றொரு சொல்லடை உண்டு. அதாவது. உண்மையான தகவல் அடியாளத்தில்தான் இருக்கும். இலங்கையின் அறியக் கட கதையும் அவ்வாறுதான்.
ஐ.எம்.எவ். கடந்தாண்டு ஜூன் மாதம் இலங்கையில் அந்தியக் கடன் குறித்த அதனது சொத்தக் கணிப்புகளை வெளியிட்டது. அதன்படி 2025இல் இலங்கையின் அற்றியக் கடன் 55.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.2026இல் அது 10 பில்லியனாக உயரும் என்னும் அதன்பின் தொடர்ந்து உயர்த்து 2019இல் 65.6 பில்லியளை எட்டும் என்றும் ஐ.எம்.எவ்வின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே. இலங்கையின் அற்றியக் கடன் தொடர்ந்து அதிகரித்தவண்ணமே இருக்கப்போகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில் அத்தியக் கடனைத் திருப்பிச் செலுத்தும் பாதையானது கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. கடன் மறுசீரமைப்பு ஒழுங்கானதாக இருத்திருந்தால், இலங்கையின் அந்தியக் கடன்கள் தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்திருக்கும். ஆனால் நடந்தது வேறொன்று.
சர்வதேச நாணய நிதியம் இலங் கையை ஒரு மோசமான பேரம்பேசும் நிலையில் வைத்தது. இலங்கையின் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்த மிகை மதிப்பீட்டைச் செய்ததன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்த வல்லமையுள்ள நாடாக இலங்கையைச் சித்திரித்தது. இதன்மூலம் இலங்கையின் பேரம் பேசும் திறன் குறைந்தது. அதேவேளை, ஐ.எம்.எவ். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகளவிலான பொதுக் கடனை அனுமதிக்கும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை மேற்கொண்டது. இது இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு சாவுமணி அடித்தது.
இந்த பின்னணியிலேயே கடந்தாண்டு இறுதியில் இலங்கை சர்வதேச கடன் பத்திரகாரர்களுடன் கடன் மீளச் செலுத்தல் குறித்த உடன்பாட்டுக்கு வந்தது. இந்த உடன்பாட்டின்படி இலங்கை கிட்டத்தட்ட 99 பில்லியன் டொலர்களை மீளச் செலுத்தவேண்டியிருக்கும் என்று வணிப்பிடப்படுகிறது. இலங்கையின் மொத்த அந்நியக் கடனில் சர்வதேச கடன் பத்திரங்கள் ஒரு பகுதி மட்டுமே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
2005ஆம் ஆண்டின் பட்ஜெட்டின்படி இலங்கை தனது அந்தியக் கடவவளுக்கு வட்டியாக இவ்வாண்டு 3 டிரில்லியன் இலங்கை ரூபாவை செலுத்தவுள்ளது. அதேவேளை, இலங்கையின் மொத்த அரசாங்க வருமானம் சுமார் 5 டிரில்லியன் ரூபா. இந்நிலையில், இவ்வாண்டு பட்ஜெட்டின்படி நிதிப் பற்றாக்குறை (துண்டுவிழும் தொகை 22 டிரில்லியன் இலங்கை ரூபா. இதை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதன் மூலம் சரிசெய்ய எதிர்பார்க்கிறது. இதுதான் இலங்கையின் இன்றைய நிலைவரம். 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் வருவாய் இலக்குகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரிவிக்கின்றனர். அதற்கான தரவுகளையும் முன்வைத்துள்ளனர். அரசாங்கம், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை மூடுவதற்குப் பதிலாக பட்ஜெட்டில் கொள்கைத் தெரிவுகளைக் கருத்திற் கொண்டுள்ளது. அது தவிர்க்க முடியாமல் நிதிப் பற்றாக்குறையை விரிவடையச் செய்யுமென்றும் கூறுகிறார்கள்.
மேலே சுட்டிக்காட்டியதுபோல் அரசாங்க வருவாயில் 60 வீதத்தை அந்தியம் கடன்களுக்கான வட்டி செலுத்துவதன் மூலம் செலவழிக்கிறது. இது உலகிலேயே அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றியுள்ளது. இவ்வயையில் இவ்வாண்டு பட்ஜெட் முக்கியமானது. இது குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம். முள்ளான் ஆட்சி யாளர்களின் தலையில் பழியைப் போட்டு விட்டு அரசாங்கம் நழுவ முயற்சிக்கிறது. இந்த அரசாங்கம்தான் சர்வதேச கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுடன் உடன்படிக்கையை மேற்கொண்டதென்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
சர்வதேச கடன் பத்திரங்களை வைத்திருப் பவர்களுடன் புள்ளியிடப்பட்ட வரியில் கையொட்டமிட்டு, அவர்களுக்கு அபத்தமான வட்டி வீதங்களைச் செலுத்த ஒப்புக்கொண்டபோது இவ்வாறானதொரு சிக்கல் இருப்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா? இந்தக் கேள்வியை இங்கு இலங்கையர்கள் சார்பில் கேட்டாக வேண்டும்.
இதனால்தான் உள்ளூர் பத்திரதாரர்களின் பிரதிநிதி அரசாங்கத்தின் தரப்பில் பேச்சுவார்த்தையில் அமர்ந்திருந்தாரென சில ஊடகங்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகின்றன.
பத்திரம் வைத்திருப்பவர்களுடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை நடத்த எல்லா வாய்ப்புகளும் இருந்தன. மற்ற நாடுகள் அவ்வாறு செய்துள்ளன. கடனாளிளுக்கு எதிராக நிற்கவும். கானா நாடு செய்ததைப்போல சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கவும் வழி இருந்தது. ஒரேநேரத்திலேயே இலங்கையும் கானாவும் கடன் வழங்குநர்களுடன் பேச்சுகளில் ஈடுபட்டன. ஆனால், நாட்டுக்கு நலமான, நீங்கு குறைந்த குறைந்த வட்டியுடனான ஒப்பந்தத்தை கானா சாத்தியமாக்கியது. இலங்கை அதற்கு நேரெதிர்த் திசையில் பயணித்தது.
ஆனால், இன்னமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நிதி அதிகாரத்துவத்தோடு இது இலங்கைக்கு கிடைத்திருக்கும் சிறந்த ஒப்பந்தம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோமென்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். 2025ஆம் ஆண்டில் இலங்கை 3 பில்லியன் டொளர்களை கடனுக்கான வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும்போது, 2028இல் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடங்குமென்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு வரை எந்தக் கடனையும் செலுத்தத் தேவையில்லை. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் பொருளாதார ரீதியாக இலங்கைக்குப் பிரச்சினையில்லையென்று ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது எமது கண்களைத் திறந்துகொண்டே குளத்தில் குதிப்பது போன்றது.
இலங்கையின் பட்ஜெட்டை நிபுணர்களும் சாமானியர்களும் அணுகும் முறையில் ஒரு பாரிய தவறுண்டு.
வரவு-செலவுத்திட்டங்கள் மாற்றியமைக்கும் திட்டங்களாகும். முன்வைக்கப்பட்ட வகையில் நிச்சயம் வரயுகள் நிகழ்வதுமில்லை, செலவுகள் செய்யப்படுவதுமில்லை. எனவே. வரவு-செலவுத் திட்டங்கள் தொடக்கத்தில் அவ்லாமல் இறுதியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும். இலங்கை தனது வரவு- செல்வுத் திட்டங்களை மதிப்பிடுவதற்கு இந்த பொறிமுறைபைக்கொண்டிருக்கவில்லை. உண்மையில் புதிய ஆண்டுக்கான திட்டம் முன்வைக்கப்படும்போது, முத்தைய ஆண்டு பட்ஜெட்டின் செயற்திறன் பத்திய பகுப்பாய்வுடன் திட்டத்தை முன்வைப்பது அவசியம். அத்தகைய பகுப்பாய்வு பட்ஜெட்டின் இலக்குகள். அந்த இலக்குகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளன, தோல்விக்கான காரணங்கள் மற்றும் நிலைமையை சரிசெய்ய எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இலங்கையின் கடத்த கால வரவு-செலவுத் திட்டங்களில் இந்த அம்சங்கள் எதுவும் இல்லை. இதனால் எல்லோராலும் கவர்ச்சிகரமான பட்ஜெட்டுகளை முன்மொழிய முடிகிறது. ஆனால், இறுதியில் அது யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது.
கடந்தாண்டு பட்ஜெட்டை மீள்பரிசீலனை செய்யும்போது அதை வெறுமனே புள்ளியியல் ரீதியாக நோக்காமல் அவை பண்பறிவு ரீதியாகவும் நோக்கப்பட வேண்டும். உதாரணமாக சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்காத அல்லது வேறொன்றுக்கும் மீள் ஒதுக்கப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகள் என்ள? அவை எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளன போன்றன முக்கியமானவை.
இலங்கை தனது துண்டுவிழும் தொகையை கடன் மூலம் நிரப்ப முனைகிறபோது, சமூகநலன்களில் வெட்டுகளை மேற்கொள்கிறது. அது சமூகங்களில் ஏற்படுத்தும் மாற்றம் மிகவும் மோசமானது, குறிப்பாக ஐ.எம்.எவ்வின் வழித்தடத்தில் சமூகநலத் திட்டங்களைக் குறைப்பதும் அவற்றுக்கான நிதியை மட்டுப்படுத்துவதும் தவிர்க்கவியலாதவை. ஒரு திரைப்படத்தில் வடிவேல். ஒரு புறாவைத் தின்றுவிட்டு நான் படும் பாடு" என்று சமித்துக் கொள்வார் அதேபோல "ஒரு கடன் ஒப்பந்தத்துக்கு கையெழுத்து வைத்துவிட்டு நான் படும் பாடு" என்று ஜனாதிபதி சலித்துக்கொள்ளலாம். அவ்வளவே.
- மீநிலங்கோ தெய்வேந்திரன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு