இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா?
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு G7 நாடுகள் விலை கட்டுப்பாடு
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றமதியை முடக்க நினைக்கும் G7 நாடுகளின் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க NATO நாடுகள் ரஷ்யாவின் மீது விதித்து வருகின்றன. ஆனால் இந்த தடைகள் எதிர்பார்த்த அளவு வெற்றயை NATO நாடுகளுக்கு பெற்றுத்தரவில்லை, காரணம் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை பல புதிய சந்தைகளுக்கு மடை மாற்றியது.
இதை தொடர்ந்து தற்போது பிரிட்டன், கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய G7 நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு அதிக பட்ச விலையை சர்வதேச அளவில் நிர்ணயிக்க உள்ளது. அந்த நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இந்த முடிவுக்கு பிரதான காரணம் தற்போது ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயே ஆகும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை தற்போது 100 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை 60-70 டாலர்கள் விலையில் ஏற்றுமதி செய்கிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகளிலுள்ள பெரும்தரகுமுதலாளிகள் அதிகளவில் இலாபமடைகின்றனர்.
G7 நாடுகள் திட்டமிடும்படி அதிக பட்ச விலை கட்டுப்பாடு போடப்பட்டால் ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே நிறுத்திவிட வாய்ப்பிருப்பதாகவும், அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்.