அரசு ஆரம்ப சுகாதார ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழு கூட்டம்
சேரன் வாஞ்சிநாதன்
பத்திரிக்கை செய்தி
இன்று *15-10-23* திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் *மீனா* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தலைவர் *பாலசந்தர்* வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் *சேரலாதன்* கோரிக்கை விளக்க உரையாற்றினார் மாநில பொருளாளர் *ரமேஷ்* வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார் மாநில இணை செயலாளர் *வில்சன்* விளக்க உரையாற்றினார்.பெரம்பலூர் மாவட்ட தலைவர் *பழனிவேல்ராஜன்* டெல்லி போராட்ட அனுபவங்களை பகிர்ந்தார்.
*செயற்குழுவில் 17 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.*
தமிழ்நாடு அரசு சங்கத்தின் முன்னால் மாநில துணைத்தலைவர் *கண்ணன்* , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் *லட்சுமணன்* பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் *மோகன்* ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
1) பேச்சுவார்த்தையில் TANSACS - நிர்வாகம் ஏற்றுக் கொண்ட படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வை வழங்கிட வலியுறுத்தி கீழ்கண்ட *மூன்று கட்ட போராட்ட இயக்கங்கள் நடத்திட தீர்மானிக்கப்பட்டது*.
A) 18 -10 - 2023 முதல் 5- 11-23 வரை *அமைச்சர்களை சந்தித்து முறையீடு செய்வது* என தீர்மானிக்கப்பட்டது.
B) 17 -11- 2023 அன்று மண்டல அளவிலான *உண்ணாவிரதப் போராட்டம்* நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
C) 22 -12 -23 அன்று *மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் சென்னையில்* நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2) 5 -11 - 2023 அன்று மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு *பயிற்சி வகுப்பு* நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
3) திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கூறியுள்ளபடி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும் *ஊழியர்களை பணி நிரந்தரம்* செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4) தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் நம்பிக்கை மையம் ஏ.ஆர்.டி இரத்த வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு நேக்கோவின் ஆணைப்படி ஆணைப்படி *அடிப்படை ஊதியம் 21,000 வழங்கிட வேண்டும்* என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5) போராட்ட இயக்கங்களுக்கு *தோழமை சங்கங்களை* அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக *ஜான் மேரி* அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு