உதவி எனும் பெயரில் பாலஸ்தீனிய புதிய எண்ணெய்-எரிவாயு வளங்களை கொள்ளையடிக்க வழிகாட்டும் ஐநா அறிக்கை

தமிழில்: வெண்பா

உதவி எனும் பெயரில் பாலஸ்தீனிய புதிய எண்ணெய்-எரிவாயு வளங்களை கொள்ளையடிக்க வழிகாட்டும் ஐநா அறிக்கை

எதிர்பார்ப்பை மிஞ்சிய பாலஸ்தீனிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள எண்ணெய், எரிவாயு வளங்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உருவாக்க முடியும்.

சமீபத்திய UNCTAD ஆய்வின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் (oPt) உள்ள எண்ணெய், எரிவாயு வளங்கள்  மேற்குக் கரை மற்றும் மத்திய தரைக்கடல் கடற்கரையின் மேற்குக் கரையின் பகுதி C இல் உள்ள வளங்களை விட அதிகமாக இருப்பதாக புவியியலாளர்கள் மற்றும் வளப் பொருளாதார வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"பாலஸ்தீனியத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கான பொருளாதார செலவு: எதிர்பாராத எண்ணெய் மற்றும் எரிவாயு" என்ற தலைப்பில் நடைபெற்ற  ஆய்வு லெவன்ட் பேசினில் 122 டிரில்லியன் கன அடி எரிவாயும், 1.7 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளங்களும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

இதன் மூலம் சுமார் 524 பில்லியன் டாலர்களை திரட்டி முடியும் என்றும் அத்தொகை அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது என்று அந்த  ஆய்வு குறிப்பிடுகிறது.

பாலஸ்தீனிய எண்ணெய் மற்றும் எரிவாயு

நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இதை கொண்டு நிதியளிக்க முடியும்.

இருப்பினும், இதுவரை பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சொந்த நிலம் மற்றும் நீரிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும், நிதி மற்றும் ஏற்றுமதி வருவாயை உருவாக்கி கொள்ளவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை ஆக்கிரமிப்பின் விளைவாக பாலஸ்தீனிய மக்கள் சுமக்கும் மொத்த செலவுகளை அதிகரிக்கிறது என்றும் அந்த  ஆய்வு கூறுகிறது.

ஆக்கிரமிப்பின் பொருளாதார செலவை மதிப்பிடுதல்

பல ஐநா சபை தீர்மானங்களில், UNCTAD பாலஸ்தீனியத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு  ஏற்படும் பொருளாதாரச் செலவை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உயர் மதிப்பு, பயன்பாட்டு தேவை பாலஸ்தீனியர்களின் நிதி தேவை, ஏற்றுமதி வருவாய் போன்றவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு எண்ணெய் மற்றும் எரிவாயு மீது கவனம் செலுத்துகிறது.

இது ஏற்கனவே உள்ள இருப்புகளோடு சாத்தியமான புதிய பாலஸ்தீனிய எண்ணெய்-எரிவாயு இருப்புக்களை அடையாளம் கண்டு மதிப்பிடுகிறது.

கிழக்கு மத்தியதரைக் கடலில் புதிய எண்ணெய் - எரிவாயு கண்டுபிடிப்புகளும் முக்கியமானவை, இஸ்ரேல் அதன் சொந்த நலனுக்காக சுரண்டத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் இந்த வளங்கள் பகிரப்பட்ட வளங்களாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் எண்ணெய் - எரிவாயு பொதுவான வயல்களில்களிலும்  கூட உள்ளன.

"சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளாமல், இந்த பொதுவான வளங்கள் தனித்தனியாகவும் பிரத்தியேகமாகவும் சுரண்டப்பட்டால், செல்வம் மற்றும் வாய்ப்புகளின் ஆதாரமாக இருப்பது பேரழிவை ஏற்படுத்தும்" என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

செலவுகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன

எண்ணெய் - எரிவாயு உள்ளிட்ட பாலஸ்தீனிய இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டுவது, பாலஸ்தீன மக்கள் மீது பெரும் செலவினங்களை சுமத்துகிறது, இது ஆக்கிரமிப்பு நடைமுறையில் இருப்பதால் அதிகரிக்கிறது என்று ஆய்வு எச்சரிக்கிறது.

இது எண்ணெய் - எரிவாயுவின் தனித்தன்மையை புதுப்பிக்க முடியாத வளங்களாக எடுத்துக்காட்டுகிறது, தற்போதைய தலைமுறையில் நாடு கடந்து அனைத்து வளங்களையும் ஒருவரே உரிமை கொண்டாட முடியாது, இதனால் பல அரசுகள் மற்றும் புதிய நிறுவனங்கள் கூட்டாக பங்கிட முடியும் என்று வாதிடுகிறது.

பாலஸ்தீனிய மக்களின் இயற்கை வளங்களுக்கான உரிமையை தெளிவாக நிறுவ மேலும் விரிவான ஆய்வுகளை இது பரிந்துரைக்கிறது. அத்துடன் இஸ்ரேல் உட்பட அப்பகுதியில் உள்ள பல அண்டை நாடுகளுக்கும் அவ்வளங்களின் மீதான பங்கையும் இது பரிந்துரைக்கிறது.

பாலஸ்தீன மக்களுக்கு UNCTAD இன் உதவி குறித்த அறிக்கை செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படுவதற்கு முன்னதாக இந்த ஆய்வு வந்துள்ளது.

- வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை : https://unctad.org/news/unrealized-potential-palestinian-oil-and-gas-reserves