நாசிச எதிர்ப்பு எனும் பெயரில் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ரசியாவின் தீர்மானத்தை ஆதரிக்கும் இந்தியா

தமிழில்: நாராயணன்

நாசிச எதிர்ப்பு எனும் பெயரில் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ரசியாவின் தீர்மானத்தை ஆதரிக்கும் இந்தியா

நாசிசத்துக்கு எதிரான ரஷ்யாவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறது

வெள்ளியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் குழு ஒன்றில்,  நாசிசத்தை போற்றி புனிதப் படுத்துவதை எதிர்த்த ரஷ்யாவின் தீர்மானத்ததுக்கு  ஆதரவாக இந்தியா வாக்களித்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 105 நாடுகளில் இந்தியாவும் அடங்கும். அதை, மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப் படுத்துவதற்கான ரஷ்யாவின் முயற்சி  என்கின்றன. 

52 நாடுகள் அதை எதிர்த்து வாக்களித்த நிலையில், 15 நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறவில்லை. ஐக்கிய நாடு சபை வெளியிட்ட  பத்திரிகைக் குறிப்பு  சொல்வதாவது:

 “உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் மிருகத்தனமான போரை”,  நவீன நாசிசத்தை எதிர்ப்பது என்ற போர்வையில், அது நியாயப் படுத்துவதாக பல பிரதிநிதிகள் அவையில் நடந்த  விவாதத்தில் கவலையுடன் கருத்தை வெளியிட்டனர். 

“உக்ரைனின் பிரதிநிதி, இந்த தீர்மான வரைவில், நாசிசத்துக்கோ நவீன நாசிசத்துக்கொ  எதிரான நேர்மையான போராட்டத்தின் பொதுவான அம்சம் ஏதும் இல்லை.” என்றார்.

“அவரது கருத்துக்களை பிரதிபலிக்கும் விதமாக,  இங்கிலாந்தின் பிரதிநிதியும், இந்த தீர்மானமானது, உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த, பொய்களைப் பரப்பி, வரலாற்றை திரிக்கும் முயற்சியின் அங்கம் இது என வலியுறுத்தினார்.” 



அமெரிக்கா, இந்த தீர்மானத்தை, இனப் படுகொலையையும், இரண்டாம் உலகப் போர் என்ற ரையும் வலிந்து இணைத்து, தனது பிராந்திய விஸ்தரிப்பு நோக்கங்கங்களை எடுத்துச் செல்ல எத்தனிக்கும் மாஸ்கோவின் “ஒரு குயுக்தியான முயற்சி” என குற்றம் சாட்டுகிறது. 

“அதே கருத்தாக்கத்தின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலிய பிரதிநிதி,  இனப் படுகொலையையும், நாசிச எதிர்ப்பையும், மாஸ்கோதன் ஆயுதமாக்கிக் கொள்வதாக குற்றம் சாட்டினார்.” 

இவ்வாறு அந்த அறிக்கை சொல்கிறது.

- நாராயணன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: Times of India