நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை வீச்சு: வேலையில்லாத் திண்டாட்டத்தின் வெளிப்பாடு

தி இந்து

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகை வீச்சு: வேலையில்லாத் திண்டாட்டத்தின் வெளிப்பாடு

கடந்த புதன்கிழமை, இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து மஞ்சள் புகையை வீசினர், மேலும் இருவர் வெளியேயும் புகையை வீசி கோஷங்களை எழுப்பினர். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வக்கற்ற அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தி இந்துவில் வெளிவந்த செய்தியின்படி, அந்நால்வரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கோபங்கொண்டவர்களாக இருந்தனர்.

அவர்களில்: 

டி.மனோரஞ்சன், கணினி பொறியியல் படிப்பை முடித்த பிறகு, ஆடு மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். 

சாகர் ஷர்மா, தனது குடும்பத்தின் வறுமை சூழலால் கல்லூரி படிப்பைத் தொடரமுடியாமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

நீலம் வர்மா, சமஸ்கிருதத்தில் எம்.பில்.  பட்டம் பெற்றவர். வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஏழைககள் மீதான கொடுமைகள் பற்றி தொடர்ந்து பேசி வருபவர். ஹரியானாவின் அரசுப் பணிக்காக பதிவு செய்து காத்திருந்தவர். "இவ்வளவு படித்தும் வேலை கிடைக்காததால், இறப்பது நல்லது என்று நீலம் அடிக்கடி கூறுவார்" என அவளது தாயார் தெரிவித்துள்ளார். 

அமோல் ஷிண்டே, தான் இராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்புகளை கொரோனா லாக்டவுன் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து போலீஸ் தேர்வுக்கு முயற்சித்து வருகிறார்.

இந்தியப் பொருளாதார மையத்தின் (CMIE) வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பார்த்தால், அவை கொரோனா காலத்திற்குப் பிறகு மோசமாகிவிட்டன என்பதைக் காட்டுகிறது.

அட்டவணை1: மொத்த தொழிலாளர் சக்தியில் வேலையில் ஈடுபடும் பட்டாளத்தின் விகிதத்தை (LFPR) காட்டுகிறது.

2023ம் நிதியாண்டில், இந்தியாவில் ஒட்டுமொத்த LFPR 39.5% ஆக இருந்தது, இது குறைந்தபட்சம் 2017ம் நிதியாண்டிற்குப் பிறகான விவரங்களில் மிகக் குறைவானது. இதில் தொற்றுநோய் காரணங்களும் அடங்கும். ஆண்களில் 66% ஆகவும், பெண்களிடையே 8.7% ஆகவும் உள்ளது - எனவே, கொரோனாவிற்குப் பிறகும் கூட வேலை செய்யும் வயதுடைய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் வேலையில்லாமல் உள்ளனர் அல்லது வேலை தேடும் நிலையில் இல்லை.

“கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் LFPR குறைந்துக் கொண்டே வருகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த சரிவு கொரோனாவுக்கு முன்பே தொடங்கி விட்டது. அந்நிலைமையை கொரோனா மேலும் மோசமாக்கிவிட்டது” என்று CMIE இந்த ஆண்டு ஜூனில் தெரிவித்தது.

அட்டவணை -2 : வேலையின்மை விகிதத்தை (UR) காட்டுகிறது. 

இது தொழிலாளர் சக்தியில் உள்ள வேலையற்ற நபர்களின் பங்காகும். 2023ம் நிதியாண்டில் 7.6% ஆக இருந்தது, இது கொரோனாவுக்கு முன்பிருந்ததை விட அதிகமாகும்.

வேலையில்லாமல் உள்ள வேலை செய்யும் வயதுடையோரில் ஒப்பீட்டளவில் குறைவானவர்களே வேலைகளைத் தேடுகிறார்கள் என்று தரவு காட்டுகிறது. 

சமீபத்திய காலாண்டு தரவைக் கருத்தில் கொண்டாலும் இந்தப் போக்கு தொடர்கிறது. 

அட்டவணை -3: 2016 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட அனைத்து காலாண்டுகளின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மற்றும் வேலையின்மை விகிதத்தைக் (UR) காட்டுகிறது. 

ஒட்டுமொத்த LFPR 2016 இல் இருந்ததை விட 2023 இல் 7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், கொரோனா காலகட்டமான செப்டம்பர் 2020க்கும் செப்டம்பர் 2021க்கும் இடையில் ஒவ்வொறு காலாண்டிலும் 7.3% குறைதுள்ளது. அப்போதிருந்ததை விட செப்டம்பர் 2023 ல் இன்னும் மோசமாக 8.1% ஆக குறைந்துள்ளது.

சமீபத்திய மாதவாரியான தரவைக் கருத்தில் கொண்டாலும் இந்தப் போக்கு தொடர்கிறது.

அட்டவணை -4: 2019 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட அனைத்து நவம்பர் மாத LFPR மற்றும் UR ஐக் காட்டுகிறது. 

2023 நவம்பரில் வேலையின்மை 9.2% ஆக உயர்ந்துள்ளது, இது 2019 கொரோனா காலத்தில் இருந்ததை விட அதிகமாகும்.

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியா தொடர்ச்சியான வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : The Hindu