கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜனவரி 22ஆம் தேதிக்குப் பிறகு அயோத்தி இராமர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்

ஜனவரி 22 ஆம் தேதி, காங்கிரஸ் தொண்டர்கள் கர்நாடகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சென்று இராமரை வழிபடுவார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார். - (தமிழில் : விஜயன்)

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜனவரி 22ஆம் தேதிக்குப் பிறகு அயோத்தி இராமர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்

ஜனவரி 12ஆம் தேதி, சிவமொகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இராம பக்தன். நாங்களும் ஸ்ரீராமபிரான் மீது மிகுந்த பக்தியை வைத்துள்ளோம், ஆனால் அவரது பெயரை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். இராமர் பெயரால் பாஜக திட்டமிட்டு நடத்தும் அரசியல் சூழ்ச்சிகளையே நாங்கள் எதிர்க்கிறோம்.

ஜனவரி 22-ம் தேதி கோயில் திறப்பு விழா முடிந்ததும் அயோத்திக்கு செல்ல உள்ள முதல்வர், “ஜனவரி 22ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அயோத்தி கோயிலுக்குச் செல்வேன்” என்று குறிப்பிட்டார்.

ஜனவரி 22 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சென்று இராமரை வழிபடுவார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/karnataka/karnataka-cm-siddaramaiah-to-visit-ayodhya-after-january-22/article67734116.ece