பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

மஜஇக மாநில மாநாட்டிற்கான அறைகூவல்

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

பாசிச மோடி ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து ஆளும் தகுதியை இழந்துவிட்டது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடியை தீர்க்க வக்கற்று தன் தோல்வியை மூடிமறைக்க ராமர் கோவிலை முன் நிறுத்தி மக்களின் மத உணர்வுகளை வாக்கு வங்கியாக மாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. ஆளும் தகுதியை இழந்துவிட்ட இந்த பாசிசக் காட்டாட்சியை தூக்கியெறிவது நாட்டு மக்களின் அவசர அவசியக் கடமையாகும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்துத்துவா எனும் இரு மைய முழக்கங்களை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல் அதானி - அம்பானிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது.

உண்மையில் கார்ப்பரேட் நலன்களுக்கான வரலாறு காணாத ஊழலும் இந்துத்துவ பாசிசமும்தான் வளர்ந்துள்ளது. மோடி கும்பல் அனைத்து துறைகளையும் பாசிசமயமாக்கி வருகிறது. அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்திற்கும் தெற்காசிய மேலாதிக்கத்திற்கும் நாட்டை பலியிட்டுவருகிறது.

பெட்ரோல் விலை ரூ. 103, டீசல் விலை ரூ. 95, சமையல் எரிவாயு விலை ரூ.980 எனும் வரலாறு காணாத விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டுகிறது. வறுமை விகிதம் 50%, விவசாயிகள் தற்கொலை 40%, பணவீக்கம் 5.69 % மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5% உயர்ந்துள்ளது. உலக வறுமை விகிதம் 23.6% இல் இருந்து 24.1% ஆக உயர்ந்ததில் இந்தியாவின் பங்களிப்பு 40% ஆகும். இந்த அளவீடுகள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம். இதுதான் காவி கழிசடையாட்சியின் உண்மைச் சொரூபம்.

இவ்வாறு, ஜெனரல் டயருக்கும் இராபர்ட் கிளைவிற்கும் பிறந்த மோடி கும்பல் அன்றாடம் ஜாலியன் வாலாபாக்குகளை அரங்கேற்றி மக்களை படுகொலை செய்கிறது.

மாநில உரிமைகளைப் பறித்து கார்ப்பரேட் ஏகபோக ஒற்றைச்சந்தை உருவாக்கத்தை ராமன் எனும் ஏகபோக ஒற்றைக் கடவுள் உருவாக்கம் மூலம் புனிதப்படுத்துகிறது தேசத்துரோக மோடி ஆட்சி. அயோத்தியை சர்வதேச முதலீட்டுக் கேந்திரமாக மாற்றிவருகிறது. அதாவது அன்னிய மூலதனத்தின் மத வடிவமாக ராமன் மாற்றப்படுகிறான்.

ஆகவே, அவன் அயோத்தி ராமன் அல்ல! அதானி ராமன்! ராமர் கோவில் ஒரு கோவில் அல்ல! இஸ்லாமியரின் கல்லறை!. இந்துத்துவ பாசிசத்தின் சின்னம்! ராம ராஜ்ஜியம் என்பது சாரத்தில் அதானி - அம்பானி அமெரிக்க மாமன் ராஜ்ஜியம்!

இந்த அதானி ராமன் காவிக்குண்டர்களால் சீதைகள் வன்புணரப்படுவதையும், வெள்ளை மாளிகையில் பாரதமாதா வேட்டையாடப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறான். கேள்வி கேட்கும் மக்களை தீயில் இறங்கச் சொல்லி சிரிக்கிறான். இந்த கேடுகெட்ட பாசிச ஆட்சியை இனியும் அனுமதிக்கலாமா? நிச்சயம் கூடாது.

வழக்கமான ஒரு சில தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர, பாஜகவின் பாசிசக் கொள்கைகளுக்கு மாற்று கொள்கையோ, திட்டமோ இல்லாத காங்கிரசு தலைமையிலான இந்தியா கூட்டணியை பாஜகவிற்கு மாற்றாக முன்நிறுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். அண்மையில் கூட காங்கிரசு கட்சி ராமர் கோவிலுக்கு எதிரானதல்ல என்கிறது. அதாவது மதத்துறையிலும் கூட காங்கிரசு கட்சி பாஜகவின் இந்துத்துவத்தை எதிர்க்காமல் அதை காரியவாதமாகவே பயன்படுத்துகிறது. ஆகவே இக்கூட்டணி பாஜகவிற்கு மாற்றாக விளங்காது. அவ்வாறெனில் என்னதான் தீர்வு? ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையுள்ள வ.உ.சி வகைப்பட்ட தேசிய முதலாளிகளின் தேசிய ஜனநாயக முன்னணி அரசானது இடைக்கால தீர்வாகவும், புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் அமையும் மக்கள் ஜனநாயக குடியரசானது நிரந்தர தீர்வாகவும் இருக்கும்.

ஆகவே, மோடி கும்பலின் மதவாத, சாதியவாத செயல் தந்திரங்களுக்கு பலியாகாமல் நாட்டு மக்களை வாட்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து நாம் கேள்வி எழுப்பவேண்டும். நாட்டின் அனைத்து துறைகளையும் பாசிசமயமாக்கி பரந்துபட்ட மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தும் மோடி ஆட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார கும்பலுக்கும் சவக்குழி வெட்டவேண்டும். அதன்பொருட்டு பக்த்சிங் நினைவு தினமான மார்ச் 23 அன்று நடக்கும் மாநில மாநாட்டிற்கு பின்வரும் முழக்கங்களின்பால் அணிதிரளுமாறு உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

* பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

* பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத ‘இந்தியா’ கூட்டணி மாற்று அல்ல!

* மக்கள் ஜனநாயக குடியரசே மாற்று!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு 

பிப்ரவரி 2024