முரண்பாடுகளின் மொத்த உருவம் பாரதியா? பெரியாரா?
Subbaraj V

நாத்திகத்தின் அத்தாரிட்டி பெரியாரின் முதல் குடிஅரசு இதழ் 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் முகப்பில் பாரதியார் பாடல்களும் திருக்குறளும் இடம்பெற்றிருக்கின்றன.
முதல் குடிஅரசு இதழ் வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் பெரியாருக்கு அப்போது கடவுள் நம்பிக்கை இருந்தது என்பது தான்.
".....பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்"
என்றுதான் அதை அவர் ஆரம்பிக்கிறார்.
ஆனால் -
பெரியார் தன் கடவுள் நம்பிக்கைப் பற்றி “நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய பத்தாவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமயச்சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவன்” என்று 01.01.1962ல் அறிக்கை வெளியிட்டுள்ளார் (விடுதலை). முதல் குடிஅரசு இதழை தொடங்கியபோது அவருக்கு வயது 46.
1925 ஏப்ரல் மாதம் நீதிக்கட்சித் தலைவரான சர்.பி.டி. தியாகராயர் இறந்தபோது, “அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்றார்.
கோவை சர்வஜனா பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பெரியார் பார்வையாளர் புத்தகத்தில், “இறையருளால் வேண்டுகிறேன்” என்று குறிப்பு எழுதியுள்ளார்.
குடிஅரசு வார இதழில் அந்த ஆண்டு நவம்பர் முதல் வாரம்வரை முதற்பக்கத்தில் குடிஅரசு பெயர் முத்திரையின் கீழ்,
“எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது நூற்றாண்டு காணும் “பெரியார் மட்டுமே தலைமை தாங்கி அவராலேயே வெற்றியும் பெற்ற வைக்கம் போராட்டத்தில்” கலந்துகொண்டவர்கள், “பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை” என்ற பாரதியார் பாட்டைப் பாடிக்கொண்டுதான் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை அதில் கலந்துகொண்ட கோவை அய்யாமுத்து தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
அடடடா…
வயசாயிடுச்சுல்லே. நான் பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிகிட்டு இருக்கேன்.
அதாவது விசயம் என்னன்னா…
பாரதி என்ற பார்ப்பான் முரண்பாடுகளின் மொத்த உருவம். விற்காத ஓமப் பொடி, சிக்கு நாற்றம் வீசும் காராப்பூந்தி, பழைய பக்கோடா,அன்று வறுத்த அவல் இத்தனையும் கலந்து 'மிக்ஸ் சர்' (கலப்பு) என்ற பெயரால் விற்பார்கள், ஆரிய ஹோட்டல் காரர்கள். அது போன்ற வேலைதான் பாரதியாருடையது.
- Subbaraj V
https://www.facebook.com/share/p/19jeA1RkrR/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு