உக்ரைன்: பொருளாதார ஆதாரங்களை சூறையாடிய ரஷ்யா

ரஷ்யா இப்பொழுது கிட்டத்தட்ட 12.4ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள உக்ரைனிய ஆற்றல், உலோகம் மற்றும் தாது படிமங்களை கட்டுப்படுத்துகிறது: என ஓர் அறிக்கை தெரிவிக்கிறது!

உக்ரைன்: பொருளாதார ஆதாரங்களை சூறையாடிய ரஷ்யா

ரஷ்யா இப்பொழுது கிட்டத்தட்ட 12.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள உக்ரைனின் ஆற்றல் மற்றும் கனிம படிமங்கள் உள்ளிட்ட இயற்கையான  முதன்மை  ஆற்றல் மூலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக பகுப்பாய்வு செய்த செக்தேவ் தெரிவிக்கிறது.

ஒருவேளை கிரிம்ளின் ரஷ்ய படையெடுப்பில் உக்ரைனிய நிலத்தை இணைத்துக் கொள்வதில் வெற்றியடையும் எனில், கிவ் கிட்டதட்ட மூன்றில் இரண்டு தன்னுடைய இருப்பை இழந்துவிடும். இது அந்நாட்டினுடைய அத்தியாவசிய பொருளாதார தூண்களை மறுப்பதாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

செக்தேவ்வின் 2029 புதைபடிமங்கள் பற்றிய மறுஆய்வு அடிப்படையில் மாஸ்கோ உக்ரைனின் 63 சதவீதம் நிலக்கரி, 11 சதவீதம் அதன் எண்ணெய், 20 சதவீதம் அதன் இயற்கை எரிவாயு, 42 சதவீதம் அதன் உலோகங்கள், 33 சதவீதம் அதன் அரியவகை லித்தியம் போன்ற முக்கியமான தாது இருப்புக்களை கட்டுப்படுத்துகிறது.

அவற்றுள் சில, ரஷ்யா கிரிமியாவை 2014ல் ஆகிரிமிப்பு செய்த போது அல்லது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய பின்னணி பிரிவினைவாதிகள் கொண்ட போரில்  கைப்பற்றப்பட்டதாகும்.

ஆனால், அதன் படையெடுப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து ரஷ்யா அந்நாட்டினுடைய பொருளாதார வலிமை கொண்ட தளங்களை எடுத்துக்கொண்டே உக்ரைனுக்குள் வலுவாக முன்னேறி சென்றது.

செக்தேவ் மற்றும் உக்ரைனிய தொழிற்துறை ஆகியவற்றின் கணக்குகளை கொண்டு 41 நிலக்கரி வயல்கள், 27 இயற்கை எரிவாயு வயல்கள், 14 புரப்பேன் வயல்கள், 9 எண்ணெய் வயல்கள், 6 தாது படிமங்களும், அதுப்போக டைட்டானியம், சிர் கோனியம், ஸ்ட்ரோன்சியம், லித்தியம், யுரேனியம், மற்றும் தங்கம் போன்ற வயல்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளதாக    வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

தானியங்கள் ஏற்றுமதியில் உக்ரைன் முதன்மையாக இருக்கிறது என்று அறியப்பட்டாலும், அது பெருமளவு உபயோகப்படுத்தப்படும் தாதுக்கள் மற்றும் உலோகங்களில் 120 ல் 117 வயல்களைக் கொண்டிருக்கிறது. இவற்றோடு புதைப் படிம எரிபொருள் வழங்குவதில் முன்னணி வகிக்கிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

உக்ரைன் இப்பொழுதும் தன்னுடைய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளின் மீது தன்னுடைய கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பெருமளவு நிலக்கரி உள்ளிட்ட இயற்கை வள செல்வங்கள் யாவும் கிரிம்ளினின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

மேலும்  ஏறக்குறைய 30 பில்லியன் டன்கள் கொண்ட 11.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய கடின நிலக்கரி படிமங்கள் உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளதாக செக்தேவ் மதிப்பிட்டுள்ளது.

- சேரன் (தமிழில்)

மூலக்கட்டுரை : businessinsider.in